சிதம்பரம் கோட்டத்துக்கு உட்பட்ட கீழ்கண்ட பகுதிகளில் 2 மணி நேரம்
மின்நிறுத்தம் செய்யப்படும் நேரம் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் கீழ்கண்டவாறு
மாற்றம் செய்யப்பட்டுள்ளது என செயற்பொறியாளர் இரா.செல்வசேகர்
தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் நகரம் நடராஜா மின்னூட்டி மூலம்
மின்சாரம் பெறும் பகுதிகள்- காலை 8 மணி முதல் 10 மணி வரை, டூரிஸம்
மின்னூட்டி மூலம் மின்சாரம் பெறும் பகுதிகள்- மதியம் 12 மணி முதல் 2 மணி
வரை, அண்ணாமலைநகர், மாரியப்பாநகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்-
மதியம் 4 மணி முதல் 6 மணி வரை, அம்மாபேட்டை, மணலூர், வண்டிகேட் மற்றும் அதை
சுற்றியுள்ள பகுதிகள்- காலை 10 மணி முதல் 12 மணி வரை,
காட்டுமன்னார்கோவில் நகரம், லால்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்-
காலை 8 மணி முதல் 10 மணி வரை, புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை,
பு.முட்லூர், ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாத்தோப்பு நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள
பகுதிகள்- மதியம் 2 மணி முதல் 4 மணி வரை.
நன்றி:தினமணி


0 comments:
Post a Comment