முதல் கோணல் முற்றிலும் கோணல், ஐந்தில் வளையாதது ஐம்பது வளையுமா என்று சொன்னவர்கள்தான் தோல்விதான் வெற்றிக்கு முதற்படி என்றும் சொன்னார்கள். வாய்சொல் வித்தகர்களான நம் முன்னோர்கள், முதல் இரண்டை எதுகை மோனைக்காக சொல்லி இருந்தாலும் மூன்றாமதை புறந்தள்ளமுடியாது. நாம் ஏறப்போகும் வெற்றி கட்டிடம் எத்தனை படி இருந்தாலும் முதலில் நாம் நம் காலை அதில் பதிக்கவேண்டும்(We have to dip our toes). நாம் கடந்தது பல்லாயிரத்தில் ஒற்றை இலக்கை கூட தாண்டாது எனும்போதும், நம் பயணம் அங்கு தொடங்கபடவேண்டும் அப்பொழுதுதான் நம் விதி நம்மை உச்சியில் போய் சேர்க்கும். Kung Fu panda வில் furious five யில் யார் Kung Fu warrior என பார்க்க ஆசைப்படும் PO, விதியின் வலியால் தானே kung fu warrior ஆகப்போவதற்கு கூட We'll bring you back a souvenir, என முந்தி செல்பவர் கூறும்போதுகூட No. I'll bring me back a souvenir என சொல்ல வேண்டியிருக்கிறது.
ஆக நம்ம ஊர் எம்.எல்.ஏ social networking உலகிக்குள் காலடியை வைத்துவிட்டார் என்பதைதான் இதனால் இங்கு சொல்லக்கடவுவது. Face book யில் கோரிக்கை அனுப்புங்கள் அதை நிவர்த்தி செய்கிறேன் என்று சொன்ன நீர் வாழ்க, நின் குலம் வாழ்க, நின் அரசவை வாழ்க.

0 comments:
Post a Comment