சிதம்பரம் கோட்டத்துக்கு உள்பட்ட கீழ்கண்ட பகுதிகளில் 2 மணி நேரம்
மின்நிறுத்தம் செய்யப்படும் நேரம் பிப்ரவரி 1-ம் தேதி முதல் கீழ்கண்டவாறு
மாற்றம் செய்யப்பட்டுள்ளது என செயற்பொறியாளர் எஸ்.பாலசுப்பிரமணியன்
தெரிவித்துள்ளார்.சிதம்பரம் நகரம் நடராஜா மின்னூட்டி மூலம்
மின்சாரம் பெறும் பகுதிகள்
காலை 6 முதல் 8 மணி வரை, டூரிசம் மின்னூட்டி
மூலம் மின்சாரம் பெறும் பகுதிகள்- மாலை 4 முதல் 6 மணி வரை. அண்ணாமலை நகர்,
மாரியப்பாநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்- மதியம் 12 முதல் 2 மணி
வரை. அம்மாபேட்டை, மணலூர், வண்டிகேட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்-
மதியம் 2 முதல் 4 மணி வரை. காட்டுமன்னார்கோவில் நகரம், லால்பேட்டை
மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்- காலை 6 முதல் 8 மணி வரை. புவனகிரி,
கீரப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்- காலை 10 முதல் 12 மணி
வரை. பரங்கிப்பேட்டை, பு.முட்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்-
மாலை 4 முதல் 6 மணி வரை. ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாத்தோப்பு நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்- காலை 10 முதல் 12 மணி வரை.
நன்றி:தினமணி




0 comments:
Post a Comment