மின்சார சிக்கனம் தேவை இக்கணம்

Friday, February 17, 2012  at 12:22 PM;

மின்சார தட்டுபாடு குறைக்க மின்வெட்டை அமல்படுத்தினால், நம் மக்கள் இன்வெர்ட்டரகளை உபயோகிக்க தொடங்குகிறார்கள். இதனால் மின்வெட்டால் பிரயோஜனம் இல்லை என்ற செய்தி காண கிடைத்தது. தொழில்சாலைகளுக்கு அதிகாரபூர்வமான விடுமுறை அளிக்க சொல்லலாமா என தமிழக அரசு ஆலோசிப்பதாக வரும் செய்திகள் மின்தட்டுபாடு கையை மீறி போய்விட்டதோ என அஞ்சதோன்றுகிறது.
குறுந்தொழில் புரிவோர், பொது தேர்வை எதிர்நோக்கியுள்ள 12 ம் வகுப்பு மாணவர்களின்எதிர்காலம் மின்வெட்டால் பெரிதும் பாதிக்கப்படும் சூழ்நிலையில், நாம் குறிப்பாக சென்னைவாழ் மக்கள் அரசுக்கும், மாணவ செல்வங்களுக்காகவும் செய்ய வேண்டியது, மின்சாரசிக்கனம். இதை எப்படி தொடங்கலாம், இப்படியும்
1.தயவுசெய்து இன்வெர்ட்டர்களில் சார்ஜை நிரப்பி மின்வெட்டை சமாளிக்காதீர்கள்
2.ஏர் கண்டிஷன்களை உபயோகப்படுத்துவது தற்காலிமாக நிறுத்தி வைக்கலாமே
3.தேவையில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் மின்விசிறையை அனைப்பதில் தொடங்கி,குண்டு பல்ப்பை மாற்றுவது வரை நாம் பல யூனிட் மின்சாரத்தை சேமிக்கலாமே
4. வழக்கமாக வீட்டிற்கு கட்டும் மின்தொகையில் 3 ல் 1 பங்கு, இல்லையா 2 பங்கு நீங்கள் கட்டினாலும் அது உங்களின் பங்களிப்பை காட்டும்.
பாலிதீன்களில் பைகளில் குப்பையை நிரப்பி சாக்கடை ஓடும் கால்வாய்களில் எறிந்துவிட்டு சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டவுடன் குய்யோ முய்யோ என கத்துவதும், வீட்டின் முன்புற ரோட்டில் தண்ணீர் தேங்கும்போது விட்டுவிட்டு பின்பு அதில் பள்ளம் விழும்போது கவுன்சிலரிடம் கம்ப்ளெய்ட் பண்ணுவதுமான நம் மக்களின் வாழ்வியல் நெறிமுறைகளில் மாற்றம் வந்தால்தான் ஆளும் அரசும் நம்மீது அன்பு கொள்ளும். அந்த மாற்றம் மின்சார சிக்கனத்தில் இருந்து ஆரம்பிக்கலாமே!

0 comments:

Post a Comment