மாயன் காலண்டரை அடிப்படையாக கொண்டு வெளிவந்துருக்கும் படம்தான் 2012. சுமார் 1000 கோடி ரூபாயில் ஒரு disaster film ஐ படைத்திருக்கிறார் Roland Emmerich. இவருடைய Day after tomorrow படம் இப்படத்திற்கு ஒரு முன்னுரை என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனெனில் உலக வெப்பமயமாதல் பற்றி முதல் படத்தில் சொன்ன இவர், அதனால் உலகம் எப்படி அழிகிறது என்பதை காட்டிருக்கிறார். மாயன் காலண்டர் குறிப்பிடும் 12/12/12 இறுதி நாள் என்பது படத்திற்கு ஒன் லைன் ஸ்டோரி. படத்தின் ஆரம்பத்தில் இருந்தே அழிவுகளின் கோரமுகங்களாக நிலநடுக்கம், வெடிக்கும் எரிமலை,சுனாமி என்று டாப் கியரில் படம் எகிறுகிறது. 1000 கோடியில் எப்படியும் ஒரு 600 கோடியை கிராபிக்ஸ் கம்பனிக்கே செலவாகியிருக்கும் அவ்வளவும் தத்ரூபம். 10000 B.C., தோல்விக்கு பின் Rolland ன் வெற்றிபடம் .
AVATAR:
ஆஸ்கர் நாயகனின் அடுத்த பிரமாண்டம் Avatar. சுமார் $230 மில்லியனில் டிசம்பரில் வெளிவர இருக்கும் படம்தான் Avatar. ஜேம்ஸ் கேரமரூன் படம் என்றால் சொல்லவா வேண்டும் அதுவும் டைட்டானிக் படத்திற்கு பிறகு வரும் படைப்பு. உலகிலேயே அதிகமான பொருட்செலவில் உருவாகும் படம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment