இன்னும் ஒரு அடி தோண்டிருந்தால் தண்ணீர் கிடைத்திருக்கும் என்பது தோண்டிய பள்ளத்தை மூடும் போதுதான் நாம் நினைக்கும் வாடிக்கையான செயல். உண்மையில் நம்மை சுற்றி உள்ள இத்தனையும் ஒரு 10 வருடங்களுக்கு முன்னால் இல்லை. இன்னும் 10 வருடங்களுக்கு பின்னால் வரப்போவது நமக்குள் தான் இருக்கிறது ஆனால் நம்மால் அதை உணரமுடிவதில்லை.
Tenth Planet Technologies கம்பெனியின் CEO திரு. குமரன் மணி இதைதான் மிக ஆணித்தரமாக வலியுறுத்துவார். உதாரணத்திற்கு walkman என்பது அன்று portable அதனால் அது பிரபலமானது. அதுவே வாக்கிங் செல்பவர் பாட்டு கேட்க வேண்டும் என்றால் ? அதன் விளைவு தான் ஐபாட். ஷூவுக்கு அடியில் ஐபாட் வைத்து அதை Blue tooth மூலம் ஜாக்கிங் செல்லும்போதே கேட்கலாம் என்பது இன்றைய ஸ்டைல்.
Google தன்னுடைய Search engine மூலம்தான் பிரபலமானது என்பது உண்மை ஆனால் இன்று அதனுடைய மற்ற சேவைகளை பார்க்கும்போது Google இண்டர்நெட் உலகின் முடிசூடா மன்னன் என்பது தெரிகிறது.
நான் உபயோக்கிக்கும் கூகுள் சேவைகள்.
1.Google Search Engine
2.Gmail
3.Picasa
4.Blogspot
5.Google Bookmark
6.Google Web history
7.Google Dashboard
8.Google Analytics
9.Google Gmail mobile app
10.Google Code
11.Google Map API
12.Google SocialGraph
13.Orkut
ஏன் Google knol மற்றும் Google Docs கூட உபயோக்கிறேன். நான் உபயோக்கும் கூகுள் சேவைகளே 10GB ஆகும் என்று நினைக்கிறேன். நம்மில் உள்ள எல்லோரும் ஆளுக்கு 10GB உபயோகித்தால்? யோசிக்கவே பிரமாண்டமாய் இருக்கிறது. நாம் Google லை நம்ப காரணம் Security ஒன்றே ஒன்றுதான்.
Google Chrome , Chrome OS, Android என்று Google யின் ராட்ச்சஸ வலை விரிகிறது .
ஏன் இந்த வளர்ச்சி? எப்படி இது சாத்தியம்?
(அடுத்த முறை எழுதுகிறேன்)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment