Tech Tamil - 17

Wednesday, 11 August 2010  at August 11, 2010;
BlackBerry to BlackBerry போனுக்குகான E-Mail சேவைகளை வழங்கும் IM மற்றும் Enterprise Messaging Service களை இண்டர்நெட் சர்வீஸ் ப்ரொவடைர்ஸ்களால் டிராக் செய்ய முடியாது என்பதுதான் சவுதி மற்றும் UAE யில் அவை தடைசெய்யபட்டதற்கான காரணம். இப்பொழுது அதுவே இந்தியாவின் 10 லட்சம் கஸ்டமர்களை பயமுறுத்துகிறது. கனடாவில் உள்ள சர்வரில் நடக்கும் இந்த இமெயில் புஷ் முழுவதும், Encripted format யில் இருப்பது மற்றும் மெயில்களை டிராப்டில் எழுதி அதற்கான IP மற்றும் நான்கு டிஜிட் நம்பரை மற்றவர்களுக்கு தெரியபடுத்தினால்  அந்த மெயிலை படிக்கும் வசதி ஆகியவை தீவிரவாதிகளுக்கு எளிதான செய்தி பரிமாற்றத்திற்கு வழிவகுக்குமோ என்பதுதான் மத்திய அரசின் கவலை. ஒன்று இந்த இரண்டு சேவைகளையும் தடைசெய்வது அல்லது இந்தியாவிலும் அதன் செர்வரை நிறுவுவது என்பதுதான் RIM க்கு இந்தியா தரும் இரண்டு வழிகள்.

டாரண்டில் டிவிட்டரை இணைத்தால் எப்படி இருக்கும்? Bittorrent யின் இந்த வினோத ஆசை அதனுடைய utorrent கிளையண்ட் 2.2 பீட்டாவில் இப்பொழுது நீங்கள் பார்க்கலாம். டாரண்ட் தலைப்பை மட்டும் வைத்து நடக்கும் விவாதங்களுக்கு பதில் அதனுடைய Hashtag மூலமாக நடக்கும் விவாதங்களே இன்னும் சுவாரசியத்தை ஏற்படுத்தும் என்பது அவர்கள் வாதம். copyright infringement பற்றி எல்லாருக்கும் இதன்மூலமாக விழிப்புணர்வு வருகிறதோ இல்லையோ நாம் டவுண்லோட் செய்யும் பைலின் ரேட்டிங் எப்படி என்று தெரிந்துகொள்ளலாம் ;-)

Chop shop என்று US செனடரின் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கும் Infosys, எடிசன் நகரத்தில் இந்திய மக்களின் வருகையை பற்றி கேவலமாக எழுதியிருப்பது(நன்றி idlyvadai.blogspot.com), விசாவுக்கான தொகையை இருமடங்கு உயர்த்தியிருப்பது என அமெரிக்கா இந்திய மக்களின் மீது தாக்குதல் நடத்துவது அதனுடைய ஜனநாயக வேடத்தை கலைப்பதை போல் இருக்கிறது. Software ஐ விட BPO மூலமாகவே Infosys அதிகம் லாபம் பார்க்கிறது. இரண்டாம் தர ஜங்க் சேவைகளை அது வழங்குகிறது. டைப்ரைட்டிங்கும், ஆங்கிலம் பேசும் அறிவில்லாத மக்களை வைத்து அது நடத்தும் ஒரு கறிக்கடைதான் இந்த outsourcing என்ற கடுமையான பேச்சுக்கு இந்திய அரசு கண்டணத்தை தெறிவுத்துள்ளது.

Third party API யில் Twitter streaming யில் விளம்பரத்தை தடை செய்த டிவிட்டர் இப்பொழுது Search மற்றும் Sponsored twitter ல் விளம்பரத்தை புகுத்தும் எண்ணத்தில் உள்ளது. இதன்மூலம் TweetDeck போன்ற அப்ளிகேஷன்கள் பயனடைய வாய்ப்பு அதிகம். இதன்மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஆளுக்கு பாதி என்ற செய்தி அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.

windows mobile 6.1 உடன் வந்த HTC Diamond யில் ஏறக்குறைய 50 க்கும் மேற்பட்ட ROM களை ஏற்றிபார்த்து அதில் எது பெஸ்ட என்று தேர்வு செய்த நண்பரை பார்த்தவுடன் உண்மையிலேயே Designed by us, personalised by u என்ற HTC வாசகம் எவ்வளவு பொழுந்துகிறது என்று எண்ணினேன். Android 2.1 யும் போட்டு பார்த்துவிட்டார் என்பதுதான் இதில் வியக்கவேண்டிய விஷயம்.

Facebook Credits க்கு போட்டியான jombool யின் social gold ஐ Google தனக்கான Virtual Money யாக ஆக்கிகொள்ளும் என்பது அதனுடைய jombool acquisition முயற்சி சொல்கிறது. Mafia war யில் கூட Social gold தான் virtual credits. Facebook Credits யில் 30 சதவீதத்தை Facebook தனக்கான பங்காக எடுத்துகொள்கிறது என்பது அதனுடைய வீழ்ச்சிக்கு காரணம்.

No comments:

Post a Comment