சிங்கத்தின் கவிதை
.............
என் முதுகில் ஏறி அமர்ந்துகொள் பெண்ணே
எட்டா தூரம் பயணிபேன் நான்.
என் கால் வழி தடம் யாவருக்கும் சிறு அச்சம்
என்னுடன் நீ இருந்தால் அது உனக்குதான் மச்சம்.
காடு மலை தாண்டி கடற்கரையோரம் உன் வீடு
நாலுகால் பாய்ச்சலில் நல்லபடியாய் வந்து சேர்ந்தது.
கல் முள் குத்தி என் பாதம் சிந்தியது ரத்தம்
ஆங்கே கேட்டேன் உன் இதயத்தின் விசும்பல் சத்தம்.
மின்னல் கீற்று சூரை காற்று
வேதியல் மாற்றம் விமர்சையாய் நடந்தேறியது.
கழுதை தேய்ந்தால் கட்டெறும்பு
அரசனாய் இருந்த நான் ஆட்டுக்குட்டியாய் ஆனேன்
நிலை தாழ்ந்து தலை குனிந்து
கூனாகி போனது என் குருத்தெலும்பு .
போதும் என நினைத்து விட்டால்
பொல்லாப்பு காட்டியது புறமுதுகெலும்பு இல்லா கூட்டம் .
விண்ணை பிளக்கும் என் சத்தம்
விரைவாய் முடிந்திடும் ஆங்கோர் யுத்தம்.
களிமண் குதிரை இவன்
கரைந்திடுவன் விரைவில்,
இவன் மீது பயணம்
மரணத்திற்கு சமானம்.
கடல் காற்றின் உப்பு துகள்களில் உன்
இதயம் துரு பிடித்திருக்கிறது
என் பிடரி மயிர் கூட
பிறர்க்கு பயம் உண்டாக்கும்
என்னுள் நிறைவை கண்டால்
எலி கூட நர்த்தனமாடும்.
கள்ளியர் மனம் கவர
கனகாம்பர பூ அல்ல நான்,
கடும் பாறை நடுவே பூத்த
காட்டுபூ.
கல்யாணம் என்ற பெயரில் உன்
அடி வருட உன் வீட்டு கூஜா அல்ல நான்
காட்டுக்கே ராஜா.
...............ஆக்கம் KmKoilKamil
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Very good kavithai
Post a Comment