My experience in Kattumannarkoil

Tuesday, 13 January 2009  at January 13, 2009;
சொர்க்கமே என்றாலும் அது நம்மூர் போல வருமா?
சந்தேகம்தான். காவிரியின் கடைமடை என்பதால், வடவாறு
வீராணம், பச்சை பசேலன வயல்கள் கண் கொள்ளா
காட்சி அது. குமராட்சி வரை வழி நெடுக வரும்
ராஜா வாய்காலை பார்த்தபடி பஸ்ஸில் பயணம் செய்வது
ஒரு தனி அலாதிதான். பரந்து விரிந்த வீராணம்
சேத்தியாதோப்பு வரை நீள்கிறது.
மன்னார்குடியை சுற்றியுள்ள கிராமங்கள்
எனக்கு அவ்வளவு பரிச்சயமில்லை என்ற போதிலும்
எல்லா கிராம மக்களும் மன்னார்குடியில்
புழங்குவதால் கொஞ்சம் தெரியம்.
கொரிசங்கர் குலாப்ஜாமூனும், டெல்லிசேட் அல்வாவும்
எனக்கு ரொம்ப பிடிக்கும். பரோட்டா சாப்பிட ஆசையா
லால்பேட்டை ரஹ்மத் அல்லது தாவூஸ் ஹோட்டலுக்கு
போவோம் அல்லது மன்னார்குடியில் வீரராஜ்
கடை. செட்டிநாடு மெஸ் இட்டிலிக்கு சூப்பர்.
வினாயகர் டாக்கீஸ்தான் ஒரே ஒரு பொழுதுபோக்கு
தற்போது அதுவும் இரண்டு காட்சிகளாக குறைக்கபட்டுவிட்டது.
கலப்பு பாட சாலையும், அரசு ஆண்கள் மேல் நிலை
பள்ளியும் தான் என்னுடைய கல்வி கோயில்கள். கலப்பு
பாட சாலையின் சடகோபன் சார் என்னை கவர்ந்த ஆசிரியர்.
பெரியகுளம் அருகே நூலகம் அமைந்தது பெரிய
அதிர்ஷ்டம். ஜில்லென காற்றில் புத்தகம் படிப்பது ஓரு தனி
சுகம். பெரிய குளத்தில் படகு குழாம் அமைத்தது பாராட்டுகுரியது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, எப்பொழுதும் மக்கள் மிகுந்தே
காணப்படும் பாங்க். நான் எப்பொழுது பார்த்தாலும் கிராம சுய உதவி
குழுவினர் பணம் கட்டிகொண்டிருப்பார்கள். எனக்கு தெரிந்து
நகரத்தில் ஏன் இவ்வளவு சுய உதவி குழுக்கள் இல்லை. நகர
மக்களுக்கு அவ்வளவு awarness இல்லையா?. இதை வார்டு மெம்
பர்கள்தான் மக்களிடத்தில் கொண்டுபோய் சேர்க்கவேண்டும்.
Right Information act(RTI), தகவல் அறியும் உரிமை சட்டம்
மூலம் உங்களுக்கு தேவையான அரசு தகவல்களை பெறுங்கள்.

No comments:

Post a Comment