விக்கிபீடியாவிற்கு கூகுள் 2 மில்லியன் டாலர் Donation கொடுத்தது உண்மையிலேயே வரவேற்கத்தக்கது. 10 வருட இடைவிடாத பணியும், தொய்வில்லாத உழைப்பும் சுமார் 10 கோடியை கொடுத்து இருக்கிறது. என்னை பொருத்தவரை Friendship மட்டுமல்ல Knowledge ம் nothing but sharing. Knol லை ஆரம்பித்து அது சரியாக போணியாகததால் கூகுள் wiki யிடம் சரண் அடைந்ததாக பலரும் சொல்கிறார்கள். அது தவறு ஆரம்பத்தில் இருந்தே கூகளின் Search engine algorithm விக்கிக்கு முதல் பக்கத்தை கொடுத்து பல
ஆண்டுகள் ஆகிவிட்டது. இல்லையென்றால் இந்த அளவிற்கு விக்கிக்கு Traffic வந்து இருக்குமா என்று சொல்ல முடியாது.
Wiki Content களை பல மொழிகளுக்கு Trasnlate செய்ய கூகுள் கைகொடுத்துள்ளதன் அடுத்த படி இது என்றால் அது மிகையல்ல. Craiglist founder விக்கியின் ஒரு Board
of Director ஆகி சில மாதங்களே ஆகிறது. Eric க்கோ Larry Page வந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
நான் இந்த Blog ஆரம்பித்து மொத்தம் 50 Post மேல் எழுதிவிட்டேன் ஆனால் இதில் எத்தனை போஸ்ட் நம் ஊரை பற்றி எழுதியுள்ளேன் என்றால் ரொம்பவும் கம்மி. நம் ஊரை பற்றி எந்த முக்கியமான விஷயம் கிடைத்தாலும் உடனே விக்கியில்தான் எழுதுவேன். அதனால்தான் Doctors List மற்றும் Ward Members அட்டவனையை போட்டேன். ஆனால் எனக்கு உள்ள ஒரு பயம் இப்படி எல்லாவற்றையும் எழுதினால் அது Yellow Pages மாதிரி ஆகிவிடுமோ என்றுதான். எப்படி எழுதலாம் நீங்களே சொல்லுங்கள். நம் ஊரின் விவசாயம், காவிரி ஆற்றின் நீரோட்டம், மக்களின் தொழில், முந்தைய வரலாறு, பெயர்காரணம், அரசியல், மக்களின் வட்டார மொழி, இங்கு பிறந்த பிரபலமானவர்கள், தொழில் வளாகங்கள், பொழுதுபோக்கு மையங்கள், வழிபாட்டுதலங்கள் என்றுஎத்தனையோ எழுதலாம் முக்கியமாக ஆங்கிலத்தில். இதை ஏன் சொல்கிறேன் என்றால் நான் தங்கியுள்ள மும்பையின் மரோல் மரோஷியை பற்றி அறிந்து கொள்ளலாமே என்று பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சியது. அந்தேரி என்று பொதுவாக எழுதி முடித்துவிட்டார்கள்.
நமக்கு தகவல் களஞ்சியம் நம்முடைய ஊரின் மூத்த குடிமக்களே எனவே அவர்களுடன் பழகி அதை பெறுங்கள்.
தலைமுறை கடந்து நிற்பது தகவல் ஒற்றே, அதனை Wiki யில் பதியுங்கள் இன்றே.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment