1.Twitter:
எனக்கு ஒரு Website பிடித்து போய் அதில் அப்டேட் ஆகின்ற விஷயத்தை உடனுக்குடன் நான் அறிந்து கொள்ள RSS FEED இருக்கிறது. ஆனால்
1.ஒரு தனிப்பட்ட மனிதரின் UPDATE ஐ நான் அறிந்து கொள்வது எப்படி?
2.நான் படித்த சுவாரசியமான வெப்டைசைட்டின் URL ஐ மற்றவர்க்கு எப்படி நான் தெரிவிப்பது?
3.என்னுடைய வெப்சைட்டை படிக்கும் வாசகர்களுக்கு நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்று எப்படி நான் சொல்வது? பதில் ஒன்றே ஒன்றுதான் அது Twitter ஆல் தான் முடியும்
Micro blogging என்று இன்று hot ஆக வர்ணிக்கப்படும் Twitter வின் சிறப்பு Short and Simplicity. 140 character ல் உங்களால் ஒரு விஷயத்தை, உங்களை follow செய்யும் நபர்களுக்கு சொல்லமுடிந்தால் நீங்களும் ஒரு மைக்ரோ ப்ளாக்கர்தான்.
Zappos.com தன்னுடை E-Commerce க்கு இதை பயன்படுத்தி நல்ல பலன் கண்டுள்ளது.
அது மட்டுமல்ல நம்முடைய Docomo தன்னுடைய Subscripber களுக்கு டிவிட்டர் கொண்டே updates களை சொல்லிவிடுகிறார்கள்.What are you doing now? என்று ஆரம்பித்த டிவிட்டர் இப்பொழுது What is happening right now? என்று கேட்குமளவுக்கு பக்கா Professional ஆகிவிட்டார்கள். Google ம் Murdoch ம் டிவிட்டரை விலைக்கு கேட்கமளவுக்கு வளர்ச்சி,ஒரு தடவை முயற்சி செய்துதான் பாருங்களேன்.
என்னடைய Twitter Id: www.twitter.com/mohamedkamil :)
2. Google Nexus One யில் Flash 10.1 Content களை அப்படியே பார்க்கலாம். அதாவது
Desktop யில் பயன்படுத்தும் அதே Flash Player. இங்கே Skyfire க்கே வழியை காணோம்.
3.Opera Mini இப்பொழுது Apple Iphone யில் பார்க்கலாம் என்று செய்தி. Official ஆக Itune store சேர்ந்ததா என்று தெரியவில்லை. Safari க்கு போட்டி?
4.Twitter மற்றும் Friendfeed யின் காப்பி என சொல்லப்படும் Google Buzz இரண்டு நாட்களுக்கு முன்னர் ரிலீஸ். Gmail உடன் Integrated ஆக வெளிவந்தது. தற்போது தனி அப்ளிகேஷனாக. Google Founder செர்ஜி ப்ரெய்ன் 6 மாத காலம் experiment ஆக உபயோகித்து ஆனந்தம் அடைந்ததாக செய்தி. இன்னும் நான் உபயோகித்து பார்க்கவில்லை.
5.Google Waves use செய்து பார்த்தீர்களா? நான் பார்த்தேன். Online Digital Content Writer களுக்கு பயன்படலாம். Content Sharing தான் இதில் முக்கியம்.
6.Google application களின் API களை Test செய்து பார்க்க ஆசையா? Google Code Playground சென்று பாருங்கள். Example, Debug, Run, Documentation என்று பக்காவாக பிரித்துவைக்கிறார்கள். Google Tamil transliteration அதாவது ஆங்கிலத்தில் டைப் செய்தால் தமிழில் வரும் Script ஐ அப்படியே காப்பி செய்து உங்கள் வெப்சைட்டில் போட்டால் தமிழாக்கம் ரெடி. தமிங்கிலீஷ்
7.RIA லீடர் UniverselMind ன் Spatialkey.com சென்று பார்த்தீர்களா? CRM துறையின் உயிர்நாடி டேட்டாக்களை Geotagging மூலம் Visualise செய்வதை பார்த்தால் WOW!!!
ஒரு படம் கோடி கதையை சொல்லும். இந்தியாவுக்கான சேல்ஸ் டீம் யாரோ?
8.வெப்சைட்டின் ரேக்கிங்கை பார்க்க Alexa.com ஓகே? ஆனால் எங்கே, எவ்வளவு ஓட்டம் என்று கண்டுபிடிக்க Google Trends தான் டாப். இரண்டு, மூன்று தளங்களையும் Compare செய்து பார்க்கலாம். இந்தியாவில் அதிகம் பார்ப்பது News and Jobs. Naukri க்கு மச்சம்தான்.
9. Goolge Language Translate யில் இல்லாத மொழி தமிழ். இனிமேல்தான் அனலைஸ் செய்ய ஆரம்பித்து இருக்கிறார்கள். Cell phone க்கான் தமிழ் யுனிகோட் இல்லாததால் இந்த NewsHunt யில் தமிழ் செய்தி பார்க்க கடமைப்பட்டுள்ளது தமிழினம். இது Iphone ல் வேறு. இந்த ELCOT என்னதான் செய்து கொண்டிருக்கிறார்கள். உலக தமிழ் மாநாடு இதை தீர்த்தால் பரவாயில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment