Tech Tamil - 14 Open letter

Tuesday, 15 June 2010  at June 15, 2010;


இண்டர்நெட்டின் சிறப்பே அது புதிய கண்டுபிடிப்புகளுக்கு வித்திடுவதுதான். ஹாட்டுவேர், சாப்ட்வேர், புதிய அப்ளிகேஷன்கள் என எல்லாமே இதில் அடங்கும்.

அடோப் நிறுவனத்தின் சார்பாக நாங்கள் நினைப்பது வெளிப்படையான வர்த்தகம், அதைதான் இன்றைய டெவலப்பர்கள், கன்டென்ட் ஓனர்ஸ், மற்றும் பயனாளர்கள் விரும்புகிறார்கள்.

சுதந்திரமான தேர்வு இணையத்தில் இன்று நிறைய விஷயங்களை சேர்த்திருக்கிறது. அது நம் வாழ்க்கையின் அன்றாட நிகழ்ச்சிகள் அத்தனையையும் மாற்றியிருக்கிறது. சந்தை வெளிப்படையாக இருக்கும்போதுதான், ஒருவரின் சிந்தனை கண்டுபிடிப்பாக மாறவும் புதிய பயனரை அடையாளபடுத்தவும் அது விழையும். அடோபின் வியாபார நம்பிக்கை என்பது வெளிப்படையான வியாபாரத்தில் சிறந்த மென்பொருள் கடைசியில் வெற்றி பெறும் என்பதுதான். ஜெயிப்பதற்கு சிறந்த வழி என்பது புதிய தொழில்நுட்பத்தை உங்களின் போட்டியாளர்களை விட எவ்வளவு விரைவில் உங்களால் தரமுடியும் என்பதுதான்.

இதை நாங்கள் எங்களின் போஸ்ட் ஸ்கிரிப்ட் மற்றும் பிடிஎப் என்ற இரண்டு சிறந்த மென்பொருள்களின் வெளியீட்டால் உணர்ந்தோம். அதனுடைய விவரக்கூற்றை வெளிப்படையாக வெளியிட்டதன் மூலம், பயன்பாட்டையும் போட்டியையும் நாங்கள் விரும்பினோம். ஆரம்பகட்டங்களில், போஸ்ட் ஸ்கிரிப்ட் 72 க்ளோன்களை பெற்றிருந்தது. ஆனால் எங்களின் புதிய கண்டுபிடிப்புகளின் மூலம் நாங்கள்தான் மார்கெட்டில் அன்றும் முதலாவதாக வந்தோம். இந்த வழியைதான் நாங்கள் ப்ளாஷிலும் கடைபிடிக்கிறோம். ப்ளாஷின் விவரக்கூற்றை வெளியிட்டோம் அதன்மூலம் யார் வேண்டுமானலும் ப்ளாஷ் பிளேயரை தங்களுக்காக வடிவமைக்கலாம். ஆனாலும் ப்ளாஷ் இன்றும் முதன்மையாக இருப்பதற்கு எங்களின் இடைவிடாத படைப்புத்திறன் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்பும் ஒரு காரணம்.

இதற்கு எதிர்மறையான ஆப்பிளின் கொள்கை, இணையத்தின் அடுத்த தலைமுறையான, கம்பியூட்டரை எண்ணிக்கையில் மிஞ்சப் போகும் மொபைல், தனிப்பட்ட மனிதர் பிரசுரிப்பவர் ஆவது, எங்கியிருந்தாலும் எப்பொழுது வேண்டுமானாலும் நாம் இணைய சேவைகளை உபயோகிக்கலாம் என்பதை பலவீனப்படுத்திவிட்டது


இறுதியாக நாம் கேட்க விரும்பும் ஒரு கேள்வி. இந்த World Wide Web ஐ யார் அடக்கி ஆளுகிறார்? யாருமில்லை ஆனால் யார் வேண்டுமாலும். ஒரு தனிப்பட்ட கம்பெனி என்ற முறையில் அல்லாமல்.





Chuck Geschke, John Warnock
Cofounders
Chairmen, Adobe Board of Directors

No comments:

Post a Comment