Tech Tamil - 5 Foursquare

Thursday, 18 March 2010  at March 18, 2010;
Twitter ல் அவ்வப்போது நான் இவ்விடத்தின் மேயர் ஆகிவிட்டேன் என்று செய்திகள் வரும், நான் கூட இவர் அரசாங்க மேயரோ என்று எண்ணிவிட்டேன். பிறகுதான் தெரிந்தது அது Foursquare ன் விளையாட்டு என்று.

நான் இங்கு இருக்கிறேன் என்று ஒரு சைட்டுக்கு ஒரு SMS அனுப்பினால் அது
என்னுடைய நண்பர்களுக்கு SMS மூலமாக தெரியபடுத்தும் சேவை நிறுவனம்
Dodgeball ன் அடுத்த சேவைதான் Foursquare. நவீன் செல்லதுரையும், Dodgeball founder ம் சேர்ந்து கண்டுபிடித்த ஒரு சர்வீஸ் இது.

ஒரு GPS enabled செல்போன் மற்றும் Foursquare application இருந்தால் போதும், போகும்  இடங்களில் ஒரு Check in மற்றும் அந்த இடத்தை பற்றி சுவாரசியமான சில விஷயங்கள் Foursquare ல் add செய்தால் அது நம்முடைய நண்பர்களுக்கு தெரியும். ஒரு வேளை உங்கள் நண்பர் அங்கு இருந்தால் இரண்டு பேரும் meet பண்ண ஒரு வாய்ப்பு கிடைக்கும்

Foursquare.com மூலம் ஒரு ஜோடியின் கல்யாணம் நடந்தது என்று Mashbale.com யில் படித்தபின்புதான் அட இது நல்லா இருக்கே என்று தோன்றியது. ஒரு ஹோட்டலில் நுழைந்த யூசர் தான் இங்கு இருப்பதாக Check in செய்திருக்கிறார், அச்சமயம் அவருடைய Friends List ல் உள்ள பெண் அங்கு இருந்திருக்கிறார். இருவரும் நேரில் பழகும் வாயப்பு அவர்களுடைய திருமணத்தில் இணைத்திருக்கிறது. அதை அப்பெண்ணே Foursquare Founder க்கு பெருமையாக கடிதம் எழுதிருக்கிறார்.

நம்முடைய ஊர்காரர்கள், நெருங்கிய நண்பர்கள், நம்முடைய துறையை சார்ந்தவர்கள் நமக்கு பக்கத்து தெருவில் கூட இருக்கலாம். ஆனால் கடைசிவரை நமக்கு தெரியாமலேயே போகும் வாயப்பு இருக்கிறது. அதை நிவர்த்தி செய்ய போவது அநேகமாக இந்த சைட்தான்.

GPS enabled செல்போன் இல்லையா பரவாயில்லை நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து ஒரு செக்கின் செய்யுங்கள், உங்கள் அருகாமை இடத்தின் பெருமை வாய்ந்த இடங்களை மற்றவர்களுக்கு தெரியபடுத்துங்கள். ஐபி யை டிராக் செய்து உங்கள் இடத்தை அது நிர்ணயிக்கும்.

வெறுமனே இதை மட்டும் செய்தால் போரடிக்கும் என்பதற்காக ஒவ்வொரு செக்கின், Add things, ToDo மற்றும் Referrel program ஆல் ஒவ்வொரு Badge ஆக நீங்கள் Unlock செய்வீர்கள். கடைசியாக அந்த இடத்தின் மேயர் ஆவீர்கள்.

இதில் என்ன வேடிக்கை என்றால் மேயர் என்ற Virtual Gift, உண்மையிலேயே அவர்களுக்கு சலுகைகளை அளிப்பதுதான். மேலைநாட்டில் வியாபார யுக்திக்காக அவர்கள் சாரந்த இடங்களின் மேயர்களுக்கு இலவசங்களை அள்ளிதருகிறார்கள். இதற்கெனவே Foursquare தன்னுடைய அங்கமாக Foursquare Business என்று ஆரம்பித்துள்ளது என்றால் பார்த்துகொள்ளுங்கள்.

போகும் இடங்கள் எல்லாம் டிராக் செய்தால் அது நம்முடைய Privacy ல் தலையிடுவதுபோல் இருக்கும் என்பதால்தான் அவர்கள் நம்மை Manual ஆக நாமிருக்கும் இடத்தை குறிக்க சொல்கிறார்கள்.

நான் முதன்முறையாக என்னுடைய PC யிலிருந்து செக்கின் செய்தேன் அதன்பிறகு, கடந்த ஒரு வாரமாக செக்கின் பட்டனையே பார்க்கவில்லை. அவர்கள் ஐபி டிராக் செய்வதால் இப்பிரச்சனை என்று நினைக்கிறேன். GPS இல்லை, PC இல்லை, ஆனால் GPRS கூடிய செல்போன் இருக்கிறது, செக்கின் செய்ய முடியுமா என்று சோதித்து பார்க்கவில்லை. நம்முடைய சர்வீஸ் providers உடன் Foursquare கலந்தால் வாய்ப்பு இருக்கிறது. இது ஒரு சோதனை ஓட்டம் என்பதால் முழுமைபெற இன்னும் கொஞ்சம் காலம் ஆகும்.

Geo Location Based Service ல் எல்லாரும் ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால் இப்பொழுது அது அமேரிக்காவை பொறுத்தவரை AT&T, இந்தியாவுக்கு Airtel கையில் தான் இருக்கிறது. தங்க முட்டை இடும் வாத்து கிடைத்திருக்கிறது. Poultry ஆரம்பிப்பதும் Bold ஆவதும் அவர்கள் கையில்தான் இருக்கிறது.
Android, GPS, Augmented Reality, எல்லாம் இங்கே, வரும் ஆனா ....

No comments:

Post a Comment