Tech Tamil - 4

Sunday, 28 February 2010  at February 28, 2010;
Salesforce.com யின் founder Marc Benoiff யின் Guest Post ஒன்று படிக்க நேர்ந்தது.
Oracle க்களை விட்டு வெளியேர அவர் சொல்லும் ஒரு காரணம் ஒரே கேள்வி.
ஏன் Corporates உபயோகிக்கும் சாப்ட்வேர்கள் ஒரு வெப்சைட் வடிவில் கொண்டுவர முடியாது?
நியாயமான கேள்வி அவரை ஆரக்கிளை விட்டு வெளியேற தூண்டியது. அதற்கான ஆயத்த பணிகள் அவ்வளவு சுலபமில்லை என்பதை பிறகுதான் தான் உணர்ந்ததாக சொல்லும் மார்க் வெற்றகரமாக Salesforce.com ஆரம்பித்து இன்று அதை Cloud Computing யின் முன்னோடியாக ஆக்கியுள்ளார்.
மக்களின் Social Activies யின் மாற்றம் இன்று வெப் 2.0 என்ற ரீதியில் அவர்களை
இண்டர்நெட்டில் பங்கெடுக்க வைத்துள்ளது. ஒரு பக்கம் Social Community, மறுபக்கம் Cloud இந்த இரண்டும் கடந்த 10 வருடங்களாக எல்லாவற்றையும் தாண்டி எங்கேயோ சென்றுவிட்டது. மார்க்கின் அடுத்த கனவு ஏன் Enterprise Software கள் Facebook போல் இல்லை? 400 மில்லியன் ஆக்டிவ் யூசர்கள் அவரை அப்படி கேட்க தோன்றிருக்கும் சும்மாவா Google க்கு அடுத்து உலகில் அதிகமாக பார்க்கும் தளம் Facebook.
சில மாதங்கள் முன்பு ஆர்யா ராமையா வின் ப்ளாக்கை Photon தளத்தில் பார்த்தபோது ஒவ்வொரு கார்பரேட்டும் எப்படி மக்களின் Social Activies ஐ தங்களுடைய வியாபாரத்திற்கு பயன்படுத்துகிறார்கள் என அறிந்தேன். ஒரு CRM Software செய்வதை இந்த Social Web தளங்கள் செய்யும் என முதலாளிகள் அறிந்து கொண்டார்கள். அதனால்தான் தற்போது Facebook பக்கம் தங்கள் பார்வையை திருப்பி இருக்கிறார்கள்.
இன்றைய 10 ம் வகுப்பு மாணவன் கேம் விளையாடுவதே Facebook யின் FarmVille யில்தான் என்றால் பார்த்துகொள்ளுங்கள். மொபைல் இல்லாதவர்கள் இங்கே யாருமில்லை அதில்கூட ebuddy, Nimbuzz என்று IM கள். அந்த அளவுக்கு Social Web தளங்களின் ஆதிக்கம்.
Cloud யும் Social யும் இணைத்து பார்க்க இவ்வுலகம் ஆர்வமாக இருக்கிறது. Privacy போய் விடுமோ என்றுதான் கொஞ்சம் பயமாக இருக்கிறது.

No comments:

Post a Comment