Julian Beever ன் சாக்பீஸ் ஓவியத்தில் மயங்காதவர்கள் யாருமில்லை. ஒரு கற்பனை அவரின் கையால் உயிர்த்தெழுந்து நிற்பதை பார்க்க கோடி கண்கள் வேண்டும். பொதுவாக நாம் வரையும் படங்கள் எல்லாமே 2D தான் அதில் கொஞ்சம் Shadow, கொஞ்சம் Angle, நாம் பார்க்கும் தூரத்தை கொண்டு ஒரு வரைபடத்தை 3D என்கிறோம். Beever இப்படி வரைவதில் கில்லாடி. WTO, Valcona, Irobot ஐ அவர் சாலைகளிலும், உயர்ந்த கட்டிடங்களிலும் அருமையாக வரைந்து தள்ளுகிறார். அதை பார்த்தவுடன் நான் வரைந்து வரைந்த ஓவியங்கள் மறைந்து போன சம்பவம்தான் எனக்கு ஓடியது.
ஒன்று, இரண்டு படிக்கும் காலத்தில் 2 ஐ எப்படி வாத்தாக்குவது , 3 ஐ எப்படி பொம்மையாக வரைவது என ஷார்ட் கட் சொல்லி கொடுத்து ஓவியத்தின் மீது ஈடுபாடு வரைவழைத்ததே Kindergarten டீச்சர்கள்தான். நான் நான்காம் வகுப்பு படிக்கும்போது எல்லாரும் ஜூஜூ பொம்மையை வரைந்த போது நான் ரஜினிகாந்த் படத்தை வரைந்து என் ஆசிரியர் MK யிடம் பாராட்டை பெற்றேன். 9 ம் வகுப்பு படிக்கும்போது பழ. நெடுமாறன் படத்தை அச்சு அசலாக வரைந்தேன்.
ஆனால் எனக்குள் ஒரு நெருடல் கார்பன் காப்பிக்கும், பார்த்து பார்த்து வரைவதுக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்கிறது, இதை யார் வேண்டுமாலும் செய்யலாமே பிறகு எப்படி நான் ஓவியன் என்று சொல்ல முடியும். மனதில் பதிந்த உருவங்களை நம்மால் வரைய முடியுமா என்று ஒரு முறை முயற்சிசெய்தேன். அன்றிலிருந்து வரைவதை விட்டுவிட்டேன்.
Observation, Precision , Perfection இந்த மூன்றையும் விட்டு பொத்தாம் பொதுவாக நுனிபுல் மேய்ந்ததால் வந்த வினை இது என்று அப்பொழுதுதான் உணர்ந்தேன். அப்பொழுதே நான் காப்பி போட்ட ஓவியங்களை பார்த்து பலர் பாராட்டினாலும், ஒரே ஒருவர் மட்டும் அதை நிராகரித்து உனக்கு ஓவியத்தின் மீது ஈடுபாடு இருந்தால் படிப்பை மறந்துவிடு என்று சொல்லிவிட்டு போய்விட்டார். ராமானுஜர், சகுந்தலா தெரிந்த நமக்கு அப்பொழுது ரவிவர்மனோ, உசேனோ தெரியாது. காமராஜர் என்ன படித்தார் அவர் முதலமைச்சராக ஆகவில்லையா என எதிர்த்து கேட்டால், அவர் படித்திருந்தால் PM ஆகவே ஆகியிருப்பார் என ரெடிமேட் ஆன்ஸர் வரும். கல்வியின் முக்கியத்துவம் திணிக்கப்பட்டது. கல்வி கடலில் தள்ளிவிடப்பட்டேன். ஒரு Water Horse ஐ நிலத்தில் வைக்க முடியாதுதானே?
நான் ஓவியனாகவே என் வாழ்க்கையை தொடர்ந்திருந்தால் மணியம் செல்வனோ, மருதோ ஆகியிருப்பேனா அல்லது சுவர் ஓவியம் வரைந்து கொண்டிருப்பேனோ என்பது தெரியாது. ஆனால் ஓவியர்களுக்கு இயற்கையை ரசிக்க தெரியும், அந்த ரசனையை கவிதையாக வடிக்கவும் தெரியும், அதை செல்லுலாய்டில் பதிக்கவும் தெரியும். உதாரணம் கலைஞர் கருணாநிதி, ஜேம்ஸ் கேமரூன். டைட்டானிக் படத்தில் கேத் வின்ஸ்லேட்டை வரைவது ஜேம்ஸ் கேமரூனதான். ஜேக்கையும், நைத்ரியையும் உயிர் ஓவியமாக உலவ விடவும் தெரியும், Fusion Camera System த்தை கண்டுபிடிக்கவும் தெரியும் என உலகுக்கு காட்டிய ஒரு ஒப்பற்ற ஓவியனாகதான் நான் கேமரூனை இன்றளவும் பார்க்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment