ஆப்பிள் ஐபேட் சில தினங்களுக்கு முன்னால் ரிலீஸ ஆகி அதற்குள் 3 லட்சம் விற்று தீர்ந்துவிட்டது. Iphone யின் 3 கோடி 70 லட்சம் விற்றுமுதலை இது தாண்டுமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
itablet, islate என பல யூகங்களை தாண்டி ipad என பெயர் வைத்த காரணம் ipod ஐ விட சற்றே பெரிது என இருக்கலாம். ஒவ்வொரு 18 மாத இடைவெளியிலும் IC யில் உள்ள Transistors எண்ணிக்கை இரு மடங்காகும் என சொன்ன மூரே விதி இப்பொழுது எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ Display வுக்கு பொருந்துகிறது. Microprocessor யில் சின்னதாக ஒரு LCD வைத்து மெஷின் லாங்வேஜில் ஆரம்பித்த 1GL இப்பொழுது 4GL ஆக இருக்கும்போது. 1100 xpress Music ஆவதோ, ஐபாட் ஐபேட் ஆவதோ பெரிய விஷயமில்லையே
லேப்டாப்க்கும், ஒரு மல்ட்மீடியா போனுக்கும் இடைப்பட்ட தூரத்தை இது நிவர்த்தி செய்யும் என Steve சொன்னது iphone app மீது உள்ள நம்பிக்கையாக இருக்கலாம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்ததில் அவருக்கும் சந்தோஷம், Application Developer களுக்கும் சந்தோஷம். அமேசான் தன்னுடைய Kindle ஐ 9.7 இன்ச்சுக்கு ரிலீஸ் செய்த போது ஒரு சைனா டூப்ளிகேட்டாவது இங்கே கிடைக்காதா என தேடினேன். 500 டாலருக்கு Accelerometer வைத்து Portrait ஐ Landscape ஆக திருப்பியது எல்லாம் இங்கே கதைக்கு ஆகவில்லை. வீடியோ, ப்ரொஸிங், கேம்ஸ, புக்ஸ் என எல்லாம் ஒரு 600 டாலருக்கு கொடுத்தால் சும்மாவா இருப்போம்.
Ipad புத்தக பிரியர்கள், பப்ளிஷர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். நசுங்கும் நிலையில் இருக்கும் புத்தக வெளியீட்டாளர்களுக்கு Google Books, Amazon Kindle, Ipad என அடுத்தடுத்து அதிர்ஷ்டம் அடிக்கிறது. இன்னும் கொஞ்ச நாளில் தினத்தந்தியை Portable device ல் பார்ப்பது பெரிய வியப்பில்லை. அது பேப்பர் சந்தாவை விட குறைவாகவே இருக்கும்.
கம்பியீட்டர் பூட் ஆகும் நேரம் கூட இனி இருக்குகூடாது என்று Sleeping Mode லியே தன்னுடைய PAAS ப்ளாட்பார்மில் Netbook வழங்குபோகும் கூகுள் Nexus One ஐ ரிலீஸ் செய்து சில மாதங்களில் Apple யிடமிருந்து இந்த IPAD சான்ஸே இல்லை. Tablet Computer கள் சந்தைக்கு புதுசு இல்லை. இது Microsoft தன்னுடைய Product ஆக Stylus உடன் கொடுத்து 10 வருடங்கள் ஆக போகிறது. தேறாது என்று விட்ட விஷயத்தை அமேசான் உயிர்கொடுத்தது. ஆப்பிள் கண்விழித்து கொண்டது. இதே நிலைதான் Microsoft ன் Surface க்கும் ஆகபோகிறது.
R&D க்கு தன்னுடைய பெரும்பகுதியை செலவழிப்பதால் ஆப்பிளிடமிருந்து வரும் சேவைகள்கொஞ்சம் காஸ்ட்லிதான். ஆனால் அதற்கான அத்தனை அம்சங்களும் அதில் உண்டு. அணில் கடித்த பழம் சுவைப்பதே அரிது, அதிலும் இது ஆதம் கடித்த ஆப்பிள். ஆப்பிள் எப்பொழுதுமே ஏழைக்களுக்கு எட்டாகனிதான்,
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment