சாட்டிங்கில் எப்பொழுதும் எனக்கு பெரிய ஈடுபாடு இருந்தது கிடையாது. சரி சும்மா சென்று பார்ப்போமே என Programming category யில் US ரூமில் நுழைந்த ஒரு நிமிடத்தில் ஒருவர் Hi என சம்பிரதாபடி ஆரம்பிக்க முடிவில் அவர் ஒரு B.E படித்த ஆந்திர மாணவர் கடந்த ஒரு வருடமாக வேலையை தேடி கொண்டு இருக்கிறார் என தெரிந்தது. உங்களால் ஏதாவது Refer பன்ன முடியுமா என கேட்டு முடிவில் அவருடைய பெர்சனல் மெயில் ஐடி கொடுத்தார். கண்டிப்பாக என்னால் ஆன மட்டும் உதவி செய்வதாக சொன்னேன். .Net யில் தற்போது வேலை சரியாக கிடைக்காததால் SAP ஐ Placement கோர்ஸில் சேர்ந்து படிக்கப்போவதாகவும் சொன்னார்.
இந்தியாவில் வேலைதேடும் ஒருவர் எதற்கு US ரூமில் இருக்கவேண்டும், வந்த ஒரு நிமிடத்தில் என்னுடன் சாட் செய்து என்னுடைய நட்பு பெற வேண்டும், ஒரே காரணம்தான் இப்பொழுது அவருக்கு வேலை வேண்டும். அவரின் விடா முயற்சி ஒரு நாள் அவருக்கு பலன் அளிக்கும். விடலை பருவத்தில் கடலை போடாமல் பொழுதுபோக்கை கூட நல்ல பொழுதாக ஆக்கிகொள்ளும் இன்றைய இளைஞர்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது.
மண்ணில் காலூன்றிய மூன்று ஆண்டுகளுக்குதான் நாம் சுதந்திரமாக இருந்து இருக்கிறோம். Pre kg யில் ஆரம்பித்த கல்வி சுமை மேல்படிப்புவரை ஒரு மனிதனை அழுத்திகொண்டுதான் இருக்கிறது. விட்டது சனியன் என விட்டால் பிறகு வேலை சுமை,அது கடைசி வரை இருக்கும் ஒரு அழுத்தம். இதன் நடுவில் திருமணம், குழந்தை என சுகமான சுமைகள். இடிதாங்கியாக இருக்கவேண்டிய நம்மை சுமை Donkey களாக எது ஆக்கியது? இயற்கை? நிச்சயமாக இல்லை பிறகு எது என கேட்டால் நான் சொல்லும் ஒரே பதில் நம்மை சுற்றியுள்ள சமூக அமைப்பு.
நாகரிகத்தின் மேல் கட்டப்பட்ட இந்த சமூக அமைப்பு அதன் அடித்தளத்தில் பலவற்றை புதைத்துவிட்டது என்பதே நிஜம். பல ஜீவராசிகள், அபூர்வ தாவரங்கள், காட்டில் வாழ்ந்த அற்புத மனிதர்கள் என இயற்கையின் நெருங்கிய உறவாளிகள் நம் சமூக அமைப்பின் அடித்தளத்தில் சிக்கி புதைந்துவிட்டார்கள். நம் ஆறாவது அறிவின் செயல்பாடு பூமியின் ஆயுளுக்கான கவுண்டவுனை ஆரம்பித்துவிட்டது. பைபிள் 2000 என்றது, மாயன் 2012 என்றார் எது எப்படியோ இன்னும் ஒரு நூறாண்டு தாண்டுவது கஷ்டம்.
நம்முடைய 2000 வருடங்கள் என்பது மனித வாழ்க்கையின் ஒழுக்கம் போதிக்கும் நல்ல மனிதர்களின் வருகையை காட்டும் ஒரு கால இயந்திரம். ஆனால் அதன் முந்தைய நூற்றாண்டுகளிலும் மனிதர்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் இயற்கையின் படைப்புகளிடம் நெருங்கி பழகியதால் அவர்களை நாம் காட்டுவாசிகள் என ஒதுக்கிவைத்து விட்டோம்.
விஞ்ஞானம் அதனுடைய மாற்றம் நிகழ்த்திய இந்த 100 ஆண்டுகளிலேயே மனிதன் 2000 ஆண்டுகள் முந்தைய வாழ்க்கையை நினைத்து ஆசை கொள்கிறான். டைட்டானிக், டெரிமினேட்டர் என பார்த்த உள்ளங்கள் அவதாரையும், அப்போகலிப்டோவையும் வெறுக்கவில்லையே ஏன், மரணிக்கும் தருவாயில் சொர்க்கம் என காடுகளையும் பெறும் பூங்காக்களையும் ரமணாவிலும், கிலேடியேட்டிரிலும் தழுவுவது போல் காட்டுவது எதற்காக, ஏனெனனில் அது நம்முடைய மனதில் ஆழமாய் பதிந்த காட்சிகள். இன்றும் வீடுகளின் அறைகளை மலைகளும் குளங்குளும் நிரம்பிய ஆறு, அதன் நடுவில் தன்னந்தனியே ஒரு வீடு என போஸ்டர்கள் அலங்கரிக்கவேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.
என்னுடைய மனக்கவலை மனிதர்களே இல்லாத இடங்களுக்கு சென்றுவிடலாமா என நினைக்கவைத்தது என பாபர் அவருடைய சுயசரிதையில் சொல்கிறார்.அதையேதான் பிரகாஷ்ராஜூம் சொல்வதெல்லாம் உண்மை என்ற அவருடைய புத்தகத்திலும் சொல்கிறார். இடைவெளி மாறினாலும் மனிதனுடைய மனம் இன்னும் மாறவில்லை. நாம் எல்லோரும் முற்போக்குவாதிகள் என சொல்லி கொள்ளும் பழமைவாதிகள்தான்.
கல்லும் கல்லும் உரசி நெருப்பை கண்டுபிடித்தான், கண்ணும் கண்ணும் பார்த்து காதலை தேடி பிடித்தான், எதனோடு எதை சேர்த்து மொழியை கண்டுபிடித்தான். கண்டுபிடிப்பு என்பதே பலவற்றை காணாமல் போக செய்வதுதான். உரங்களால் அழியும் மண்புழு போல மொழியால் நாம் இயற்கையின் மொழியை கேட்கமுடியாத செவிடர்களானோம். மனிதனின் சங்கேத பாஷை மொழி வடிவம் பெற்ற நிலையில் நாம் இயற்கையின் மொழியை அந்நிய மொழியாய் ஆக்கி கொண்டோம். இறைவன் படைத்த இந்த உலகத்தில் எல்லாவற்றுக்கும் உயிர் இருக்கிறது. ஆனால் அவற்றுக்கு தங்களுக்கான் மொழியை உருவாக்கி கொள்ளும் வாய்ப்பு இல்லாமல் போனது, நமக்கான பகுத்தறிவு ஒரு காரணமாய இருக்கலாம். ஜீவராசிகளின் சில வலிகள் இன்றும் நம்மால் உணர முடியும். ஒன்று அது வாய்விட்டு கதறும் சத்தம் மற்றொருன்று அதனுடைய கண்ணீர். தன்னுடைய கன்றை இழந்து கதறிய பசுவின் கண்ணீர் எனக்கு இன்றும் ஞாபகமிருக்கிறது
பகுத்தறிவின் பகட்டான மொழி அவனுக்கு தலைமுறைகளுக்கு செய்திகளுக்கு பரப்பும் ஒரு ஊடகம் ஆகிபோனது. கடன் வாங்காத கேள்வி கேள் என்று சொன்ன ஓஷோ கூட மொழிக்கு கடன்பட்டுதான் உபதேசம் செய்தார். ஆற்றின் கரைகளில் நாகரிகம் தோன்றும் முன்னரே மனித இனம் மொழி என்னும் நாகரிகம் பெற்றது. மொழியில்லாத வஸ்துக்கள் அநாகரிகம் ஆனது. நாகரிக Jaint wheel ல் நாம் இப்பொழுது உச்சத்தை அடைந்து இருக்கிறோம். சுழற்சி முறையில் அடுத்த இலக்கு என்ன என்பது நமக்கு எல்லாரும் தெரியும்.
ஊடகம் தவிர்த்து மனித இனத்தின் முன்னேற்றம் இரண்டை சார்ந்துள்ளது. ஒன்று நெருப்பு, மற்றொன்று சக்கரம்.திமாக் கி பத்தி சலாதே என மென்டாஸ் விளம்பரத்தில் வரும் அம்மனிதனின் கடைசி கண்டுபிடிப்பு சக்கரம் அதுவே கழுதையை அடிமைபடுத்தும். அதுதான் உண்மை. சக்கரம், இவ்வுலகின் இரண்டாம் பெரிய கண்டுபிடிப்பு. கண்டுபிடிப்புகளின் அச்சாணியாக இன்றும் சக்கரம் இருக்கிறது அதை சுழல வைக்கும் தொழில்நுட்பம் நெருப்பிடம் இருக்கிறது. கரடுமுரடான கல்லின் உரசலில் பிறந்த தீப்பொறி, மனித மூளையின் இயக்கத்தை ஆரம்பித்தது. தட்டையான கல்லின் முனைகள் உருண்டை வடிவம் பெற்றது, விலங்கினம் அடிமை ஆனது, மனித இனம் வெற்றி பெற்றது.
வெற்றி மற்றொன்றை வெற்றிடமாக்கியது. சமநிலை சமாதியானது. அறிவின் மேண்மை அளக்கப்பட்டது. தலைவன் உருவானான். தலைவிதி மாற்றி எழுதபட்டது. அப்பொழுதிலிருந்து மனித இனத்தின் அடிமை வம்சம் ஆரம்பமானது.
சுதந்திரம் என்ற பெயரில் மாற்றி எழுதப்பட்ட அடிமை சாசனம், சட்டத்தின் விலங்கால் குடிமக்களை இணைத்திருக்கிறது. இதில் முதல் அடிமை, மூத்த அடிமை என பாகுபாடு வேறு. உயர பறக்கவேண்டிய கழுகின் குஞ்சு, முட்டையின் இடமாற்றத்தால் காக்கையின் கூண்டில் இருக்கிறது. கபளீகரம் செய்ய துடிக்கும் பாம்பு காவி சட்டையில் காத்திருக்கிறது. இணங்கிபோவதும், இரையாகிபோவதுமான இரண்டு வழிகள்தான் இருக்கிறது. மூன்றாம் வழி ஒன்று இருக்கிறது அது நம்மை நாம் அடையாளம் கொள்வது.
அக்னிசிறகுகளை விரித்து, ஆகாயத்தில் பறக்க நாம் செய்ய வேண்டியது நம்மின் அடையாளத்தை நாம் உணர்வதுதான்.
உணர்கிறீர்களா?
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
good thoughts.i feel what do you say.
உணர்ந்தமைக்கு நன்றி கோகுல்.
Post a Comment