வெள்ளி திறையில் பார்த்தது:
இரண்டு படங்கள் ஒன்று 3 idiots மற்றும் Chance per Dance. முதலாவது அருமை இரண்டாவது குப்பை. இந்திய சினிமா தற்போது புதிய பரிமாணத்தில் தன் பயணத்தை ஆரம்பித்துள்ளது. அதைதான் 3 idiots மற்றும் தாரே ஜமீன் பர், வசூல்ராஜா M.B.B.S., போன்ற படங்கள் நமக்கு உணர்த்துகிறது. மக் அடிப்பதற்கு பதில் அதை புரிந்து படித்தால் இன்னும் நம்மால் அதில் Master ஆக முடியும் என்பதை உணர்த்துகிறது 3 idiots.
இரண்டாமாவது Chance per Dance ஜப் வே மெட் மற்றும் ஜானே து ஜானே னா படங்கள் எதிர்பார்த்து இப்படம் பார்த்தால் மிகப் பெரிய ஏமாற்றம். ஒரு நடிகர் ஆவதற்கு டான்ஸை துருப்புசீட்டாக பார்க்கும் ஷாஹித் கபூர் பல கம்பெனிகள் ஏறி இறங்குகிறார். கோரியோகிராபர் ஜெனிலியா இவரின் திறமையை பார்த்து இவரை ஊக்குவித்து நடிகர் ஆக்குகிறார். நம்மூர்
வெள்ளிதிரை பரவாயில்லை.
சின்ன திரையில் பார்த்தது:
SAW 6 பார்த்தீர்களா? SAW வரிசையில் மிகக் குறைந்த கலெகஷனை கொடுத்த படம். திரைக்கதை எழுதியவர் இயக்குனர் ஆகி இருக்கிறார், படம் பரவாயில்லை. SAW 7 பார்போம் எப்படி இருக்கிறது என்று?
பாலாவுக்கு வாழ்த்துக்கள்:
சிறந்த இயக்குனருக்கான் தேசிய விருது பாலாவுக்கு வழங்கி இருக்கிறார்கள்.
யாரும் தொடாத விஷயம் இவர் தொட்டார் ஆனால் ஒரு கசப்பை இனிப்பு பூசி கொடுக்காமல் போனதால் படம் அந்த அளவுக்கு மக்களை ஈர்க்கவில்லை. அகோரிகள் மரணித்தவர்களுக்கு மறு ஜென்மம் தடுப்பதற்கும், உலக வாழ்க்கையின் அவரின் பாவத்தை போக்கவும் தன்னை சக்தியின் ஒரு வடிவமாய் கருதுபவர்கள்.
"வாழ கூடாதவர்களுக்கு நாம் தரும் தண்டனை மரணம்
வாழ இயலாதவர்களுக்கு நாம் தரும் வரம் மரணம்" என்ற பாதையில் அகோரி ஒரு ஊனமற்ற மன்னிக்கவும் மாற்றுதிறன் கொண்ட பெண்னை கொல்வது எவ்வளவு கண்டனத்துக்களானது என்று எல்லாரும் அறிந்ததே.
பசியும், பிணியும் சந்திரனில் இருந்தால் நான் அங்கு சென்று கூட பணிவிடை செய்ய தயராய் இருக்கிறேன் என்று சொன்ன அன்னை தெரசாவை கடவுள் போல பார்க்கும் ஊரில் இப்படி சொன்னால் எப்படி எடுபடும்.
சென்னையின் ரெயில்வே ப்ளாட்பார்ம்கள், சாலையின் ஓரங்கள், சப்வேக்கள் என்று எங்கு பார்த்தாலும் உடல் ஊனமுற்றவர்கள். குடும்ப வறுமையும், வயோதிகமும், வியாதியும், சொந்த பந்தங்களின் கவனிப்பு இல்லாமையே ஒரு மனிதனை பிச்சைகாரனாக மாற்றுகிறது.
நான் கடவுள் பார்த்தபோது அப்படம் எனக்கு மிகவும் பிடித்தது. காரணம் பிச்சைகாரர்களும், வியாதிஸ்தர்களும் படும் அவஸ்த்தைகளும் துன்பங்களும் என்னை பாதித்தது. கருனை கொலை என்ற ரீதியில் இப்படம் சரியென்றே நான்
வாதிட்டேன். ஆனால் பின்பு புரிந்து கொண்டேன். அது தவறு என்று. அன்பின் மகத்துவம் புரிய அசோகருக்கு ஒரு போரும், பல்லாயிரக்கனக்கான உயிரும் தேவைப்பட்டது. எனக்கு நான் கடவுள் தேவைப்பட்டது.
சேகுவேராவின் பிரபலமான வசனம் ஒன்று உண்டு:
If you tremble indignation at every injustice then
you are a comrade of mine.
அநியாயம் கண்டு நீங்கள் கொதித்தால் நீங்களும் தோழர்தான்
அநியாயங்களை கண்டு கொதிக்க ஆரம்பித்தால் நாம் நல்ல கொதிகலனாய் மாறிவிடுவோம்.
Cool, விடை கொடுத்து கேள்வி கேட்கும் ஒரு Programmer நல்ல Solution Provider. அது கணிணியோடு மட்டும் இல்லாமல் நம் மக்களுக்காகவும் இருக்கட்டுமே.
நம் மக்கள் குறை தீர்த்தால் நம் நகரம் நன்றாய் இருக்கும்
ஏனனேனில் நம் நகரம் நம் அடையாளம்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நல்லாருக்கு.
திரை விமர்சனம் என தலைப்பு வைப்பதில் என்ன சிரம்மோ?
- குரு
Thanks for your comment man , i will correct it.
Post a Comment