ஆயிரத்தில் ஒருவன்

Friday, 5 February 2010  at February 05, 2010;
ஒரு இனத்தின் வெற்றிக்கு பின்னால் ஒரு இனத்தின் தோல்வி. புலம்பெயர்ந்துவாழும் ஒரு இனத்தின் கனவு, சொந்த இடம் செல்வதின்றி வேறென்ன? செல்வராகவன் உழைப்பு திரையில் பார்க்கமுடிகிறது. அருமை.
தூது வரும் வரை காத்திரு என்று சோழ இளவரசனை ஒரு தீவுக்கு அனுப்பும் சோழ மன்னனில் ஆரம்பிக்கிறது கதை. சோழர்களின் குடியை கருவருக்க துடிக்கும் பாண்டிய மன்னர்களிடம் இருந்து இளவரசனை காப்பாற்ற பல தடங்களை ஏற்படுத்தி யாரும் வராதவாறு அவரை காப்பாற்றுகிறார்கள் சோழர்கள்.
பழி தீர்க்கும் படலம் நவீன தொல்பொருள் ஆராய்ச்சியின் போர்வையில் தீவுக்கு சென்று இளவரசனை தேடி பழி தீர்ப்பதோடு படம் முடிகிறது.
பார்த்திபன் காணும் தீர்க்கதரிசனம் காட்சிகளாக தெரிவதும், அதை ஒட்டிய பின்னனி இசையும் மனதை குடைகிறது. Indiana Jones யின் நுனுக்கமும், Gladiator யின் காட்சி அமைப்பும் ஒரு சேர பார்த்த திருப்தி. ஒரு படைப்புக்கு இத்தனை காலம் காத்திருந்த கார்த்திக்கு அதன் பலன் நிச்சயம் கிடைக்கும்.

No comments:

Post a Comment