Tech Tamil - 6

Saturday, 20 March 2010  at March 20, 2010;
1.செமாண்டிக் வெப் தளம் www.evri.com நம் தேடும் Query க்கு சரியான தளங்கள் மற்றும் அது சாரந்த வீடியோவுடன் ஒரே பக்கத்தில் அளிப்பது நன்றாக இருக்கிறது.

2.MyNokia தன்னுடைய சேவையை ஏப்ரல் மாதத்துடன் நிறுத்திவிடுகிறது. தன்னுடைய Ovi.com க்கு மாற சொல்லும் நோக்கியா ஒரு Import பட்டன் கொடுத்து பழைய Contants ஐ Ovi க்கு மாற்ற சொன்னால் பரவாயில்லை. இப்பொழுது MyNokia வின் Contants Sync வேலையே செய்யவில்லை. நம்முடைய பழைய Contants அத்தனையும் அவுட். முதலில் Ngage ஐ எடுத்தார்கள், இப்பொழுது MyNokia, அடுத்தது என்னவோ?

3.தமிழக அரசின் 12 ம் வகுப்பு வரையிலான பாடபுத்தகங்கள் இப்பொழுது ஆன்லைனில் இபுக் வடிவில்http://www.textbooksonline.tn.nic.in/ தளத்தில் கிடைக்கிறது. இப்பொழுதுதான் பேப்பரிலிருந்து PDF க்கு மாறியுள்ளது. இபுக் மேக்கரை கொண்டு Flash க்கு மாற்றி ஆடியோவும், வீடியோவும் சேர்த்தால் மாணவர்களின் Learning, E-Learning ஆக மாறுமே. அமேசான் கின்டிலோ, ஐபேடோ மாணவர்கள் கையில் புழங்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.

4.யூனிகோட் கன்சோர்டியத்தின் உறுப்பினர்களில் தமிழக அரசும் ஒன்று என்பது தெரியுமா? Unicode.org சென்று பாருங்கள்.

5.10 லட்சம் பேர் மாதந்தோரும் பார்க்கும் www.stackoverflow.com தன்னுடயை அடுத்த சேவையாக jobs.stackoverflow ஐ ஆரம்பித்துள்ளது. Forum ஆக ஆரம்பித்த ஜோயல் கேள்வி, பதில்களுக்கு பாயின்ட்ஸ் கொடுத்து சில்வர், பிளாட்டினம், கோல்ட் என்று Programmers களை தரம் பிரித்தார். இப்பொழுது தங்கம் யார், தகரம் யார் என்பது Interview க்கு முன்னர் நம் CV ஐ புரட்டும் PM களுக்கு நாம் கேட்ட கேள்விகளும், பதில்களும் டாலடிக்கும்.

6.சமீபத்தில் Scribd.com சென்று பார்த்தீர்களா? போய் பார்த்தவுடன், நான் டைப் செய்த URL சரிதானா என்று மீண்டும் ஒரு முறை செக் செய்து பார்த்தேன். மிக கேவலமான டிசைனில் தன்னுடை 50 சதவீத டிராபிக்கை இழந்து நிற்கும் Scribd அடுத்து என்ன செய்ய போகிறதோ.? Digg ம் தன்னுடைய நீண்ட கால தயாரிப்பான Digg யின் அடுத்த Version க்கு ஆல்பா வெள்ளோட்டம் விட்டிருக்கிறது.

7.Uninor, Local Loop, MTS இந்த மூன்றும் 3G மற்றும் BWA ஏலத்தில் பங்கு கொள்ளாத
Network service providers. ஒரு வேளை 4G க்கு காத்திருக்கிறார்களோ?

2 comments:

Robin said...

Useful info.
Thanks

mohamedkamil said...

Sorry guys

Just now i checked that given hyperlinks are not working. Now it is corrected.

Thanks for the feedback

Post a Comment