கற்பி, ஒன்றுசேர்

Friday, 4 June 2010  at June 04, 2010;
Zoho பற்றி நமக்கு எல்லாருக்கும் தெரியும். இவர்கள் கூகுளுக்கு முன்னரே Cloud Computing பற்றி யோசிக்க ஆரம்பித்து இன்று Microsoft office suite க்கு சவால் விடும் அளவுக்கு தங்களுடைய தயாரிப்புகளால் உலகின் பார்வையை தங்கள் பக்கம் திருப்பியவர்கள். Zoho ஒரு பக்கா தமிழ்நாட்டு கம்பெனி என்பது நமக்கு எல்லாம் பெருமை. தெரியாத விஷயம் இவர்கள் Zoho University என்று ஆரம்பித்து 12 ம் வகுப்பு படித்த சராசரி மாணவர்களை கணிதம், அல்காரிதம், Problem Solving, ஆங்கிலம் என கோச்சிங் கொடுத்து தங்களின் கம்பெனிக்கு தயார்படுத்துவது. Zoho வின் Gruber பத்ரி சேஷாத்ரி இதை தன்னுடைய ப்ளாக்கில் விளாவாரியாக பதிவு செய்து இருக்கிறார்.

Matured ஆகாத மாணவர்களுக்கு இது ஒரு Mental pressure என்று எழுந்த கண்டன குரல்களுக்கும் Zoho வின் விளக்கம் பத்ரியின் ப்ளாக்கில் இருக்கிறது. படித்து முடித்த பல லட்சம் பட்டதாரிகள் இருக்க 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு டிரைனிங் பிஞ்சிலேயே பழுக்க வைக்கும் முயற்சியாக இருக்கலாம். Who knows?

சென்னை டிரேட் சென்டரில் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் Job fair யில் கலந்து கொள்ளும் கணிணி பட்டதாரிகள் எண்ணிக்கை, வருடத்திற்கு 3 லட்சம் பேர் தேவை ஆனால் இண்டர்வியுக்கு வருபவர்களில் வெறும் 18,000 பேர்தான் தகுதியானவர்கள. அதிலும் பாதி பேர் சேர்ந்த சில மாதங்களில் விலகுகிறார்கள் அல்லது விளக்கபடுகிறார்கள் என்ற Infosys யின் அறிக்கை, Vispro போல் காசை வாங்கி கொண்டு ஓடி போகிற கம்பெனிகள், Consultancy என மாணவர்களின் அறியாமைய காசாக்கும் கூட்டம், கல்லூரியில் கற்காத விஷயங்களை கற்று தருகிறோம் என கடைவிரிக்கும் டிரைனிங் சென்டர்கள் என இந்த பட்டியலை நீட்டிக்கொண்டே போகலாம். பட்டதாரிகளின் இந்த நிலைக்கு காரணம் யார்?குருதான்.

குரு பார்வை கோடி நண்மை என்று சொல்லுவார்கள் ஆனால் நம் குரு தட்சனை காட்டினால்தான் கண்ணையே திறப்பார். நாளை தள்ளு தாளை எண்ணு என்று பென்சை தேய்க்கும் கூட்டத்திற்கு கூஜா தூக்கினால்தான் நாம் அடுத்த இலக்கதிற்கு போக முடியும். தவறு அவர்கள் மீது மட்டும் சொல்ல முடியாது நம்மை பரிபாலிக்கும் நம் அரசையும்தான் சொல்ல வேண்டும். 50 ஆண்டுகால முதல்வர்களின் பட்டியலில் பட்டதாரி முதல்வரைகளை நாம் விரல்விட்டு எண்ணிவிடலாம். அரசியலில் படிப்பை ஒரு தேவையாக வைக்காததன் விளைவை இன்று அம்பேத்கார் பார்த்திருந்தால் வருத்தப்பட்டிருப்பார்.

பலமில்லாத அடித்தளத்தில் எழுப்படும் கோபுரமான நம் இளைஞர்கள், அற்ப காரணங்களுக்காக சரிந்து விழுவது இனி நிறுத்தபடவேண்டும். பாலகுருசாமி, மு.சிவலிங்கம், பாக்கியநாதன், ஆண்டோ பீட்டர் என தமிழில் நிரலிகளை பற்றி எழுதுபவர்கள் நாம் போற்றி பாதுகாக்கவேண்டிய பொக்கிஷங்கள். திரு.மு.சிவலிங்கம் அவர்கள் கூட விரைவில் ஜாவா பற்றி கட்டுரை எழுதவதாக வாக்குறுதி அளித்து இருக்கிறார். இலைமறை காயாக இருக்கவேண்டிய விஷயங்களே அறிந்தும் அறியாமலும் என ஞானி வெளிக்கொணரும்போது வெளிப்படையான விஷயங்கள் ஏன் மறைக்கபடுகிறது. Waterflow, Agile unified Process, BFT, FBA என அத்தனையும் உடைக்கபடவேண்டும். ஆனந்த விகடன் படிக்கும் கையில் R.S.Agarwal திணிக்க வேண்டும், ஜூமாஞ்ஜி பார்பவர்களுக்கு Pseudocode சொல்லி கொடுக்க வேண்டும், Puzzle அவர்களுக்கு Ghazal ஆக வேண்டும்.

Dotcom pubble, Web 2.0 ஆகியவை 20 வயது கூட நிரம்பாதவர்களை மில்லியனர் ஆக்கிவிட்டது. ஆனால் நாம் இன்றும் அவர்களின் கதையை நம்பிக்கை கதைகளாக படித்துகொண்டிருக்கிறோம். தம்முடைய ஆர்வத்தினால் கணிணியை கற்று Network administrator, SAP implementation team Head, Kiosk programmer என முன்னேறி இன்று பரவலாக உபயோகப்படுத்தபடும் தேனீ எழுத்துருவை கண்டுபிடித்த அமரர் தேனி உமர் தம்பி அவர்களே நம் எல்லாருக்கும் நம்பிக்கை நட்சத்திரமாய் இருக்கும்போது நாம் செய்ய வேண்டியது என்ன? கணிணியை கற்றுகொள்வதுதான்.

Chrome Web Store, Google Buzz API, Android 2.2 Froyo, Google TV, Dell Streak, IPad என புதுபுது கண்டுபிடிப்புகள் உங்களை வாரி அணைக்க காத்திருக்கிறது. எங்கே ஆரம்பிப்பது என குழப்பமாக இருந்தால் மு.சிவலிங்கத்தின் 11ம் வகுப்பு கணிணியிலிருந்தே ஆரம்பிங்களேன். 2 நாட்களில் நீங்கள் OOP கான்செப்டை ஊதி தள்ளிவிடுவீர்கள். தேவையில்லாமல் கம்பீயூட்டர் டிரிக்ஸ் படிப்பதை விட்டுவிட்டு ஒரு Framework ஐ தேர்ந்தெடுங்கள். முழுமூச்சாய் படியுங்கள். பிறகு நீங்களே சொல்வீர்கள் இது அவ்வளவுதானா என்று?

பழக பழக வரும் இசையை போல, தேர்ந்தவர் சொல்லிகொடுத்தால் எல்லாருக்கும் இது கையில் அடங்கும். இதற்கு யாராவது Initiative எடுத்தால் அது நம் மக்களின் வாழ்வை வளமாக்கும். கிராமங்கள் silicon valley ஆகும். இதைதான் அண்ணல் அம்பேத்கார் அப்பொழுதே சொன்னார் கற்பி, ஒன்றுசேர், புரட்சிசெய் என்று

No comments:

Post a Comment