டிஜிட்டல் மார்க்கெட் ப்ளேஸ் தொடங்குவதில் இப்பொழுது எல்லா கார்ப்பரெட் கம்பெனிகளும் முழுமூச்சாய் இறங்கி இருக்கின்றன. வெப் அப்ளிகேஷன்களுக்கு Hotscripts.com மற்றும் Envato மிகபிரபலம் என்றாலும் இதை தவிர்த்து Templates கள் விற்பதற்கு TemplateMonster மற்றும் Flashloaded, Flexden என பலநூறு கம்பெனிகள் இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர். 30/70 or 40/60 என அவர்கள் தங்கள் கமிஷனை பிரித்து கொள்கிறார்கள். Activeden யில் நம் சென்னையை சேர்ந்த VectorFlower, தான் படைத்த மூன்று Component களுக்கு இதுவரை 30 லட்சம் வரை வாங்கியிருப்பார் என்பது என் யூகம் ஏனெனில் அவருடைய Components கள் சக்கை போடுபோடுகின்றன.
கூகுள் தன்னுடைய Apps களுக்காக ஏற்கனவே GoogleApps திறந்தாலும் இப்பொழுது Chrome Web Store ஆரம்பிக்கிறது. அது வரப்போகும் Chrome OS மற்றும் Chrome Browser சார்ந்து இயங்கும் SaaS அப்ளிகேஷன்கள் விற்கும் இடமாக இருக்கும் என்பது எல்லாருடைய கருத்து. ஆப்பிள் apps-for-ipad, apps-for-iphone என காசு பார்க்க ஆரம்பித்துவிட்டது. ஆன்டிராய்டு மார்க்கெட், நோக்கியாவின் OVI , அடோப் மார்கெட்ப்ளேஸ் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
டிஜிட்டல் என்றாலே Pirated காப்பி இல்லாமலா? ddlspot, diggflash, myproggrammingtools, என Webblog களும், sumotorrent, thepiratebay, demonoid, mininova என Torrent களும் user request முறையில் ரிலீஸ் ஆன ஒரு மாதத்தில் வெளியிடுகிறார்கள். தடைசெய்யப்பட்ட down0day.blogspot.com இந்திய விசிட்டர்களால் Alexa ரேங்கில் 5 இலக்கங்களிலும், Exceeded bandwidth என்று kibashare யிலும் வருவது நமக்கு பெறுமையா என்ன?
பாண்டிச்சேரி Xlabz தன்னுடைய பங்காக அளித்த Find Near Me மூன்று மாதத்தில் 20,000 டவுன்லோட் எட்டிவிட்டது ஆனால் இது இலவசம். தற்போதைய வெளியீடு HealthTracker PRO 2 டாலருக்கு வெளியிட்டு உள்ளனர். Mashable.com கூட தங்களுக்கான ஒரு ஐபோன் அப்ளிகேஷனை வெளியிட்டு தங்களை பக்கா இண்டர்நெட் கம்பெனியாக காட்டும் காலம் இது. தன்னுடைய அப்ளிகேஷன் நிராகரிக்கபட்டதற்காக தனக்கான ஒரு புதிய மார்கெட் place ஆரம்பித்த என் நண்பரின் தளத்தில் இன்றும் Author களும், Buyer களும் பதிவு செய்துகொண்டு இருக்கிறார்கள்.
ஆளுக்கு ஒரு Marketplace,API என வீட்டிற்கு ஒரு அப்ளிகேஷன் டெவலப்பரை உருவாக்கும் இந்த அனுகுமுறை முதலாளித்துவமா அல்லது நம்மை முதலாளி ஆக்குவதா? இந்த நவீன IBM,BillGates டீலிங் வெற்றிபெறுமா? காலம்தான் பதில் சொல்லும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment