Tech Tamil - 2 Blogspot படும் பாடு

Sunday 28 February 2010  at February 28, 2010;
நம் ப்ளாக்கின் டிராபிக் தமிழ்மணம்.காம் மற்றும் தமிலிஷ்.காம் ஆல் அதிகமாகிறது என்பது நான் அதில் பதிவுசெய்து பார்த்தபின்புதான் புரிந்துகொண்டேன் ஒரு RSS ஐ மட்டும் பார்ப்பது பெரிய சுவாராசியம் இல்லை. அதுவே 10 RSS ஐ Mix பன்னி அதில்  லேட்டஸ்டான FEEDS களை Dynamic ஆக பிரசுரித்தால் அது மேட்டர். அதைதான் மேற்கண்ட .காம்கள் செய்கின்றன.
இதை planetplanet.org தளம் இதற்கான Parsing Code ஐ Pythan ல் முதன்முறையாக
வெளியிட்டது. அதை அப்படியே PHP க்கு மாற்றி இப்பொழுது simplepie என்று பெயரிட்டார்கள். அநேக Aggregator தளங்கள் இதைகொண்டுதான் ரன் செய்யபடுகிறது. Simplepie யின் Example Site MoonMoon.com சென்றுபார்த்தால் உங்களுக்கு புரியும். இதைபோல் ரெடிமேட் டெம்ப்ளட்டுகள் Gregarious, LoungeRss என்று கொட்டிகிடக்கிறது. நீங்கள் Wordpress user ஆக இருந்தால் மேற்சொன்ன வெப்சைட்களின் Plugin கள் நிறைய இருக்கிறது. Wordpress Planet கூட இப்படிதான் இயங்குகிறது. வலைப்பூக்கள.காம் தளம் Pligg Cms கொண்டுதான் இயங்கிறது. இதுவும் ஓபன்சோர்ஸ்தான் எனவே யார் வேண்டுமாலும் இதை உபயோகப்படுத்தலாம். நான் உபயோகிப்பது Google Reader தான். என்ன இன்னும் இவர்கள் இதற்கான API தரவில்லை தந்தால் Blog யில் நம்முடை Sharing Item போட்டால் அதுவே ஒரு அக்ரிகேட்டர் தளம்போல் ஆகிவிடும்

நான் கண்டவரை நம்மவர்கள் செய்திகளுக்கு கொடுக்கும் அபரிதமான ஆதரவு என்னை வியக்க வைக்கிறது. தினமலர்.காம் 3000ம் ரேங்கில் இருக்கும்போது நான் வேறென்ன சொல்ல. ஆனால் ஒன்றே ஒன்றுதான் கொஞ்சம் நெருடுகிறது. நான் பல தமிழ் செய்தி தளம் மற்றும் வலைபூக்களை பார்த்து அதன்பிறகு அந்த பக்கம் தலைவைத்தே படுப்பதில்லை. தனிப்பட்ட மனிதர்கள, சமுதாயம், நாடு, மதம் என இவர்கள் தொடுக்கும் தாக்குதல் எழுத்து சுதந்திரம் அல்ல, அது அமைதியான நாட்டில் குழப்பத்தை உருவாக்கும் செயல். குமுதத்தில் கண்ணகியை கரடி பொம்மை என்று சொன்னதற்கு ஞானிக்கு விழுந்த அர்ச்சனையை இன்று நான் நினைத்துபார்க்கிறேன். நாளிதழ் மற்றும் வார இதழ்கள் சராசரி மனிதர்களை போய் சேர்கிறது ஆனால் இந்த .காம்கள் இன்னும் போய் சேரவில்லை என்பதே இப்படி எழுதுபவர்களுக்கு சாதகமாக போய்விடுகிறது.

மேலைநாடுகளில் Bloggers களும், விக்கி எடிட் செய்பவர்களும் குறைந்து வருகிறார்கள்.அமேரிக்கர்கள் எப்படி பிரேஸில் User களால் Orkut ஐ  விட்டுவிலகினார்களோ, அப்படியே ப்ளாக்கர்யிலிருந்தும் விலகிவிடுவார்கள்.

டைரி என்று ஆரம்பிக்கப்பட்ட Blogger இன்று கைதியின் டைரி போல் குரூரமாக காட்சி அளிக்கிறது

2 comments:

அணில் said...

பயனுள்ள தகவல் நண்பரே. CMS aggregator தகவல் வியக்க வைக்கிறது.

mohamedkamil said...

Thanks Rajkumar.

Post a Comment