Showing posts with label Film. Show all posts
Showing posts with label Film. Show all posts

அவன் இவன்

Tuesday, 21 June 2011  at June 21, 2011;
கடலுக்கு மீன் பிடிக்க போனவனும், கைவரிசை காட்டி செயின் பறிக்க போனவனும் வீட்டுக்கு திரும்புவது எப்பொழுதுமே சவால்தான். அதனால்தான் திருடபோவதற்கு முன்னர் ஆடு வெட்டி படையல் போட்டு குலசாமிக்கு காணிக்கை செலுத்தும் கிராமங்கள் தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் இருந்தன, அது இப்பொழுதும் அப்படியே இருக்கின்றனவா என்பது தெரியாது. ஆனால் அவர்களும் ஒரு professional ethics? ஐ பாலோ பண்ணிதான் தங்கள் தொழிலை செய்தார்கள். அதாவது, சொந்த மாநிலத்தில் அவர்கள் தங்கள் கைவரிசையை காட்டுவது இல்லை, யாரையும் துன்புறுத்துவது இல்லை, என்று பல இத்தியாதிகள். திருட்டு தொழிலை அவர்களே மறந்தாலும் அவர்களை உசுப்பிவிடும் வேலைகளை திறன்பட செய்திருக்கிறது அவன் இவன் திரைப்படம்.

தெரிஞ்ச தொழிலை விட்டவன் கெட்டான் என்ற பழையமொழியை பாலோ செய்யும் ஆர்யா, தெரியாத தொழிலில்(நடிப்பு) பிரகாசிக்க நினைக்கும் விஷால், ஒரு மொட்டை(படத்தில் அப்படிதான் அந்த சின்ன பையன் அழைக்கிறான்)கமுதிகோட்டை ஜமீன் இடையில் கதையை சொல்லியிருக்கிறார் கதை சொல்லி பாலா.

கதை என்பதை விட கலாய்தல் என்று சொல்லலாம். மூவரும் அவர்களுக்குள் நன்றாக கலாய்த்து கொள்கிறார்கள். போதாகுறைக்கு அவர்கள் அம்மாகளும். துண்டு பீடியிலிருந்து, கட்டிங் சரக்குவரை partnership போட்டு அம்மாகளும் மகன்களும் குத்தாட்டம் போடுகிறார்கள். இப்படியான அறநெறி குடும்பத்தில் தங்களை இணைத்துகொள்ள இரண்டு இளம் யுவதிகள் விஷாலிடமும், ஆர்யாவிடமும் காதல்வயப்படுகிறார்கள். காதல் ஜெயித்ததா, இல்லையா என வெள்ளி திரையில் பாருங்கள் என சொல்லும் அளவுக்கு காதலும் இல்லை, கூடலும் இல்லை. ரிட்டன் பை பாலா என டைட்டில் கார்டு போடுவதற்கு ஒரு மாட்டு புரோக்கரை வில்லனாக காட்டி(ஆர்.கே பேசவேயில்லை), அவன் மூலம் ஜமீனை அம்மணமாக்கி மரத்தில் தொங்கவிடுகிறார். பின்னர் பழிவாங்கும் படலம், எரிந்துபோகும் சடலம், என படம் முடிகிறது. ஆர்.கே ஏன் ஜமீனை பழிவாங்குகிறார் என சஸ்பென்சான விஷயத்தை வெள்ளிதிரையில் பாருங்கள்.

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் :)))

பார்த்தது

Monday, 6 June 2011  at June 06, 2011;
டாரண்ட், தமிழ்தாய், திருட்டுவிசிடி என கடந்து, பிடித்த தமிழ்படங்களை இனி வெள்ளிதிரையில் பார்ப்பது என முடிவெடுத்து, கடந்த நாட்களில் பார்த்த  படங்கள் கண்டிப்பாக சிங்கள் டிஜிட்டை தாண்டாது. இருந்தாலும் இதற்கே பல ஆயிரம் ரூபாய் செலவழித்திருப்பேன் இன்ன பிற செலவுகளையும் சேர்த்து. பார்த்த படத்தில் பிடித்தது எங்கேயும் காதல்தான்...கள்ளிகாட்டு இதிகாசம் நாவலை படிக்கும் போது அதில் புதிதாய் வரும் சில கேரடக்ரை வைரமுத்து அடிமுதல் உச்சிவரை விமர்சிக்கும் பாங்கு எனக்கு பிடித்ததேயில்லை. அதோடு இல்லாமல் அந்த கேரடக்ருக்கான சில பிளாஷ்பேக்கை அவர் எழுதும்போது அதை ஸ்கிப் செய்துவிடுவேன். என்னை பொருத்தவரை அந்தகதையில் பேயத்தேவர்தான் ஹீரோ அவர் சம்பந்தபட்ட சங்கதிகளை படிப்பதே பிடிக்கும். இந்த படத்திலும் அதுபோல் மற்ற எந்த கேரக்டர்களையும் பெரிதுபடுத்தாமல் இருவரின் காதலை ஒரே நேர்கோட்டில் சொல்லிருப்பது தமிழுக்கு புதுசு. காதல் என்பதே சம்திங் ஸ்பெஷல் என்பதை தன்னுடைய முந்திய படத்தில் சொன்னவர், இன்று காதல் மன்னனாக காதல் நகரத்தில் படம் எடுக்கிறார் என்றால் கண்டிப்பாக இச் இச் என்று கேட்கத்தானே செய்யும்.

கோ...கோபாலபுரத்தில் இருந்தாலும், கோட்டையில் இருந்தாலும் என உடன்பிறப்புகள் கோவை முன்னிலைபடுத்தும் அளவுக்கு கோ ஒரு வெற்றி படமாக ஓடுகிறது. ராக்கியிலும், பிவிஆரிலும் என இரண்டுமுறை பார்த்த படம். ஜீவா...அரும்புமீசை முளைத்த சொளகார்பேட் பார்ட்டி. இவருடைய ஈ மற்றும் தமிழ் எம்.ஏ படத்தை பார்த்தேன். முந்தியது ஜனநாதனுக்காக, பிந்தியது தமிழுக்காக. இரண்டிலும் எனக்கு ஏமாற்றமே. கே.வி.ஆனந்தின் அயனை அங்கொன்றும் இங்கொன்றுமாக சின்னதிரையில் பார்த்ததால் கோ படத்தை பார்க்கலாம் என தோன்றியது. முதல் பாதி கார்ப்பரேட் லுக்கிங்,  இரண்டாம் பாதி ராஜேஷ்குமார் நாவல் படித்தது போல் இருந்தது. தேர்தல் களத்தில் படித்த பட்டதாரிகள், அரசியல் மாற்றம் என அதர பழசான கான்செப்டை, நக்சல்கள் மூலம் அடைவது என காட்டியிருக்கிறார்கள். கோ...புதிய பாட்டிலில் பழைய ஒயின்.

அழகர்சாமியின் குதிரை...சின்னதிரையில், வசனம் பாஸ்கர்சக்தி என்று டைட்டில் கார்டு போட்டால் அது சக்ஸஸ் என்று அர்த்தம்.  ஆனால் இந்த திரைபடம் அவருடைய நாவலை ஒட்டி எடுக்கப்ட்டது என்பதை நம்பவே முடியவில்லை. மேலாண்மை பொன்னுசாமி ஆனந்தவிகடனில் எழுதிய மயில்கதையை படித்தபோது என்னுள் ஒரு அதிர்வை உணர்ந்தேன். அதுதான் ஒரு எழுத்தாளனுக்கு சிறப்பு. ஆனால் இந்த திரைபடத்தை பார்க்கும்போது எப்பொழுது படம் முடியும் என்று கடிகாரத்தை பார்க்கதோன்றுகிறது. இயக்குனர் சுசீந்தரன் படத்தையே பார்க்ககூடாது என்று நினைத்திருந்தேன், அந்த அளவுக்கு நான் மகான் அல்ல படத்தில் வக்கிரத்தின் உச்சத்தை தொட்டவர் அவர்.  அப்புகுட்டி, வெள்ளைகுதிரை,பாஸ்கர்சக்தி இந்த மூவரும் படத்தை பார்க்க தூண்டினர். தூண்டில் மீனாய் நான்தான் சிக்கினேன்.எங்கள் ஊரில் உள்ள அய்யனார் குதிரையின் இரண்டு கால்கள் சேதமாகி உள்ளது. எதற்கும் சிற்ப கலைஞர்களின் மீது ஒரு கண் வைக்க வேண்டும். LOL
(வரும்)

ஆயிரத்தில் ஒருவன்

Friday, 5 February 2010  at February 05, 2010;
ஒரு இனத்தின் வெற்றிக்கு பின்னால் ஒரு இனத்தின் தோல்வி. புலம்பெயர்ந்துவாழும் ஒரு இனத்தின் கனவு, சொந்த இடம் செல்வதின்றி வேறென்ன? செல்வராகவன் உழைப்பு திரையில் பார்க்கமுடிகிறது. அருமை.
தூது வரும் வரை காத்திரு என்று சோழ இளவரசனை ஒரு தீவுக்கு அனுப்பும் சோழ மன்னனில் ஆரம்பிக்கிறது கதை. சோழர்களின் குடியை கருவருக்க துடிக்கும் பாண்டிய மன்னர்களிடம் இருந்து இளவரசனை காப்பாற்ற பல தடங்களை ஏற்படுத்தி யாரும் வராதவாறு அவரை காப்பாற்றுகிறார்கள் சோழர்கள்.
பழி தீர்க்கும் படலம் நவீன தொல்பொருள் ஆராய்ச்சியின் போர்வையில் தீவுக்கு சென்று இளவரசனை தேடி பழி தீர்ப்பதோடு படம் முடிகிறது.
பார்த்திபன் காணும் தீர்க்கதரிசனம் காட்சிகளாக தெரிவதும், அதை ஒட்டிய பின்னனி இசையும் மனதை குடைகிறது. Indiana Jones யின் நுனுக்கமும், Gladiator யின் காட்சி அமைப்பும் ஒரு சேர பார்த்த திருப்தி. ஒரு படைப்புக்கு இத்தனை காலம் காத்திருந்த கார்த்திக்கு அதன் பலன் நிச்சயம் கிடைக்கும்.

Film Review

Sunday, 24 January 2010  at January 24, 2010;
வெள்ளி திறையில் பார்த்தது:
இரண்டு படங்கள் ஒன்று 3 idiots மற்றும் Chance per Dance. முதலாவது அருமை இரண்டாவது குப்பை. இந்திய சினிமா தற்போது புதிய பரிமாணத்தில் தன் பயணத்தை ஆரம்பித்துள்ளது. அதைதான் 3 idiots மற்றும் தாரே ஜமீன் பர், வசூல்ராஜா M.B.B.S., போன்ற படங்கள் நமக்கு உணர்த்துகிறது. மக் அடிப்பதற்கு பதில் அதை புரிந்து படித்தால் இன்னும் நம்மால் அதில் Master ஆக முடியும் என்பதை உணர்த்துகிறது 3 idiots.
இரண்டாமாவது Chance per Dance ஜப் வே மெட் மற்றும் ஜானே து ஜானே னா படங்கள் எதிர்பார்த்து இப்படம் பார்த்தால் மிகப் பெரிய ஏமாற்றம். ஒரு நடிகர் ஆவதற்கு டான்ஸை  துருப்புசீட்டாக பார்க்கும் ஷாஹித் கபூர் பல கம்பெனிகள் ஏறி இறங்குகிறார். கோரியோகிராபர் ஜெனிலியா இவரின் திறமையை பார்த்து இவரை ஊக்குவித்து நடிகர் ஆக்குகிறார். நம்மூர்
வெள்ளிதிரை பரவாயில்லை.
சின்ன திரையில் பார்த்தது:
SAW 6 பார்த்தீர்களா? SAW வரிசையில் மிகக் குறைந்த கலெகஷனை கொடுத்த படம். திரைக்கதை எழுதியவர் இயக்குனர் ஆகி இருக்கிறார், படம் பரவாயில்லை.  SAW 7 பார்போம் எப்படி இருக்கிறது என்று?
பாலாவுக்கு வாழ்த்துக்கள்:
சிறந்த இயக்குனருக்கான் தேசிய விருது பாலாவுக்கு வழங்கி இருக்கிறார்கள்.
யாரும் தொடாத விஷயம் இவர் தொட்டார் ஆனால் ஒரு கசப்பை இனிப்பு பூசி கொடுக்காமல் போனதால் படம் அந்த அளவுக்கு மக்களை ஈர்க்கவில்லை. அகோரிகள் மரணித்தவர்களுக்கு மறு ஜென்மம் தடுப்பதற்கும், உலக வாழ்க்கையின் அவரின் பாவத்தை போக்கவும் தன்னை  சக்தியின் ஒரு வடிவமாய் கருதுபவர்கள்.
"வாழ கூடாதவர்களுக்கு நாம் தரும் தண்டனை மரணம்
வாழ இயலாதவர்களுக்கு நாம் தரும் வரம் மரணம்" என்ற பாதையில் அகோரி ஒரு ஊனமற்ற மன்னிக்கவும் மாற்றுதிறன் கொண்ட பெண்னை கொல்வது எவ்வளவு கண்டனத்துக்களானது என்று எல்லாரும் அறிந்ததே.
பசியும், பிணியும் சந்திரனில் இருந்தால் நான் அங்கு சென்று கூட பணிவிடை செய்ய தயராய் இருக்கிறேன் என்று சொன்ன அன்னை தெரசாவை கடவுள் போல பார்க்கும் ஊரில் இப்படி சொன்னால் எப்படி எடுபடும்.
சென்னையின் ரெயில்வே ப்ளாட்பார்ம்கள், சாலையின் ஓரங்கள், சப்வேக்கள் என்று எங்கு பார்த்தாலும் உடல் ஊனமுற்றவர்கள். குடும்ப வறுமையும், வயோதிகமும், வியாதியும், சொந்த பந்தங்களின் கவனிப்பு இல்லாமையே ஒரு மனிதனை பிச்சைகாரனாக மாற்றுகிறது.
நான் கடவுள் பார்த்தபோது அப்படம் எனக்கு மிகவும் பிடித்தது. காரணம் பிச்சைகாரர்களும், வியாதிஸ்தர்களும் படும் அவஸ்த்தைகளும் துன்பங்களும் என்னை பாதித்தது. கருனை கொலை என்ற ரீதியில் இப்படம் சரியென்றே நான்
வாதிட்டேன். ஆனால் பின்பு புரிந்து கொண்டேன். அது தவறு என்று. அன்பின் மகத்துவம் புரிய அசோகருக்கு ஒரு போரும், பல்லாயிரக்கனக்கான உயிரும் தேவைப்பட்டது. எனக்கு நான் கடவுள் தேவைப்பட்டது.
சேகுவேராவின் பிரபலமான வசனம் ஒன்று உண்டு:
If you tremble indignation at every injustice then
you are a comrade of mine.
அநியாயம் கண்டு நீங்கள் கொதித்தால் நீங்களும் தோழர்தான்
அநியாயங்களை கண்டு கொதிக்க ஆரம்பித்தால் நாம் நல்ல கொதிகலனாய் மாறிவிடுவோம்.
Cool, விடை கொடுத்து கேள்வி கேட்கும் ஒரு Programmer நல்ல Solution Provider. அது கணிணியோடு மட்டும் இல்லாமல் நம் மக்களுக்காகவும் இருக்கட்டுமே.
நம் மக்கள் குறை தீர்த்தால் நம் நகரம் நன்றாய் இருக்கும்
ஏனனேனில் நம் நகரம் நம் அடையாளம்

2012-Disaster film

Sunday, 15 November 2009  at November 15, 2009;
மாயன் காலண்டரை அடிப்படையாக கொண்டு வெளிவந்துருக்கும் படம்தான் 2012. சுமார் 1000 கோடி ரூபாயில் ஒரு disaster film ஐ படைத்திருக்கிறார் Roland Emmerich. இவருடைய Day after tomorrow படம் இப்படத்திற்கு ஒரு முன்னுரை என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனெனில் உலக வெப்பமயமாதல் பற்றி முதல் படத்தில் சொன்ன இவர், அதனால் உலகம் எப்படி அழிகிறது என்பதை காட்டிருக்கிறார். மாயன் காலண்டர் குறிப்பிடும் 12/12/12 இறுதி நாள் என்பது படத்திற்கு ஒன் லைன் ஸ்டோரி.  படத்தின் ஆரம்பத்தில் இருந்தே அழிவுகளின் கோரமுகங்களாக நிலநடுக்கம், வெடிக்கும் எரிமலை,சுனாமி என்று டாப் கியரில் படம் எகிறுகிறது. 1000 கோடியில் எப்படியும் ஒரு 600 கோடியை கிராபிக்ஸ் கம்பனிக்கே செலவாகியிருக்கும் அவ்வளவும் தத்ரூபம். 10000 B.C., தோல்விக்கு பின் Rolland ன் வெற்றிபடம் .
AVATAR:
ஆஸ்கர் நாயகனின் அடுத்த பிரமாண்டம் Avatar. சுமார் $230 மில்லியனில் டிசம்பரில் வெளிவர இருக்கும் படம்தான் Avatar. ஜேம்ஸ் கேரமரூன் படம் என்றால் சொல்லவா வேண்டும் அதுவும் டைட்டானிக் படத்திற்கு பிறகு வரும் படைப்பு. உலகிலேயே அதிகமான பொருட்செலவில் உருவாகும் படம்.