டாரண்ட், தமிழ்தாய், திருட்டுவிசிடி என கடந்து, பிடித்த தமிழ்படங்களை இனி வெள்ளிதிரையில் பார்ப்பது என முடிவெடுத்து, கடந்த நாட்களில் பார்த்த படங்கள் கண்டிப்பாக சிங்கள் டிஜிட்டை தாண்டாது. இருந்தாலும் இதற்கே பல ஆயிரம் ரூபாய் செலவழித்திருப்பேன் இன்ன பிற செலவுகளையும் சேர்த்து. பார்த்த படத்தில் பிடித்தது எங்கேயும் காதல்தான்...கள்ளிகாட்டு இதிகாசம் நாவலை படிக்கும் போது அதில் புதிதாய் வரும் சில கேரடக்ரை வைரமுத்து அடிமுதல் உச்சிவரை விமர்சிக்கும் பாங்கு எனக்கு பிடித்ததேயில்லை. அதோடு இல்லாமல் அந்த கேரடக்ருக்கான சில பிளாஷ்பேக்கை அவர் எழுதும்போது அதை ஸ்கிப் செய்துவிடுவேன். என்னை பொருத்தவரை அந்தகதையில் பேயத்தேவர்தான் ஹீரோ அவர் சம்பந்தபட்ட சங்கதிகளை படிப்பதே பிடிக்கும். இந்த படத்திலும் அதுபோல் மற்ற எந்த கேரக்டர்களையும் பெரிதுபடுத்தாமல் இருவரின் காதலை ஒரே நேர்கோட்டில் சொல்லிருப்பது தமிழுக்கு புதுசு. காதல் என்பதே சம்திங் ஸ்பெஷல் என்பதை தன்னுடைய முந்திய படத்தில் சொன்னவர், இன்று காதல் மன்னனாக காதல் நகரத்தில் படம் எடுக்கிறார் என்றால் கண்டிப்பாக இச் இச் என்று கேட்கத்தானே செய்யும்.
கோ...கோபாலபுரத்தில் இருந்தாலும், கோட்டையில் இருந்தாலும் என உடன்பிறப்புகள் கோவை முன்னிலைபடுத்தும் அளவுக்கு கோ ஒரு வெற்றி படமாக ஓடுகிறது. ராக்கியிலும், பிவிஆரிலும் என இரண்டுமுறை பார்த்த படம். ஜீவா...அரும்புமீசை முளைத்த சொளகார்பேட் பார்ட்டி. இவருடைய ஈ மற்றும் தமிழ் எம்.ஏ படத்தை பார்த்தேன். முந்தியது ஜனநாதனுக்காக, பிந்தியது தமிழுக்காக. இரண்டிலும் எனக்கு ஏமாற்றமே. கே.வி.ஆனந்தின் அயனை அங்கொன்றும் இங்கொன்றுமாக சின்னதிரையில் பார்த்ததால் கோ படத்தை பார்க்கலாம் என தோன்றியது. முதல் பாதி கார்ப்பரேட் லுக்கிங், இரண்டாம் பாதி ராஜேஷ்குமார் நாவல் படித்தது போல் இருந்தது. தேர்தல் களத்தில் படித்த பட்டதாரிகள், அரசியல் மாற்றம் என அதர பழசான கான்செப்டை, நக்சல்கள் மூலம் அடைவது என காட்டியிருக்கிறார்கள். கோ...புதிய பாட்டிலில் பழைய ஒயின்.
அழகர்சாமியின் குதிரை...சின்னதிரையில், வசனம் பாஸ்கர்சக்தி என்று டைட்டில் கார்டு போட்டால் அது சக்ஸஸ் என்று அர்த்தம். ஆனால் இந்த திரைபடம் அவருடைய நாவலை ஒட்டி எடுக்கப்ட்டது என்பதை நம்பவே முடியவில்லை. மேலாண்மை பொன்னுசாமி ஆனந்தவிகடனில் எழுதிய மயில்கதையை படித்தபோது என்னுள் ஒரு அதிர்வை உணர்ந்தேன். அதுதான் ஒரு எழுத்தாளனுக்கு சிறப்பு. ஆனால் இந்த திரைபடத்தை பார்க்கும்போது எப்பொழுது படம் முடியும் என்று கடிகாரத்தை பார்க்கதோன்றுகிறது. இயக்குனர் சுசீந்தரன் படத்தையே பார்க்ககூடாது என்று நினைத்திருந்தேன், அந்த அளவுக்கு நான் மகான் அல்ல படத்தில் வக்கிரத்தின் உச்சத்தை தொட்டவர் அவர். அப்புகுட்டி, வெள்ளைகுதிரை,பாஸ்கர்சக்தி இந்த மூவரும் படத்தை பார்க்க தூண்டினர். தூண்டில் மீனாய் நான்தான் சிக்கினேன்.எங்கள் ஊரில் உள்ள அய்யனார் குதிரையின் இரண்டு கால்கள் சேதமாகி உள்ளது. எதற்கும் சிற்ப கலைஞர்களின் மீது ஒரு கண் வைக்க வேண்டும். LOL
(வரும்)
No comments:
Post a Comment