மாவீரன்?

Sunday, 12 June 2011  at June 12, 2011;
போரில் இரண்டுவகை. ஒன்று தற்காப்பு, மற்றொன்று ஆக்கிரமிப்பு.  உள்ளதை வைத்து உண்டுமகிழ்ந்து, குண்டு சட்டியில் குதிரை ஓட்டும் குமாஸ்தா அரசர்கள் தங்களை காத்துகொள்ள நடத்தும் தற்காப்பு போர்கள் பலவீனமானவை. தன் தண்ணீர் தாகத்துக்கு குதிரையின் வேகத்தை குறைத்தால் அதுகூட தன்னுடைய போருக்கு பலவீனத்தை ஏற்படுத்தும் என்று, குதிரையின் பிடரியை மெலிதாய் கீறி அதன் ரத்தத்தை தன் உதடுகளில் ஒட்டி விரைந்தவன். பாரசீகமா, இந்தியாவா என்று யோசிக்கும்போது அவன் விடுத்த மூச்சுகாற்றின் வெப்பம் இந்திய அரசர்களுக்கு நடுக்கத்தை உருவாக்கியது  என்று வரலாற்று ஆசிரியர்கள் மெச்சும் செங்கிஸ்கான், மாவீரன் என்றால் நம் சுந்தர தெலுங்கு மக்கள் எடுத்த படத்துக்கு போர்வீரன் என்றோ காதல்வீரன் என்றோ பெயர் வைத்திருக்கலாம் என்று தோன்றியது. 

400 ஆண்டுகளுக்கு முன்னால் பிரிந்துபோன காதலர்கள் தற்காலத்தில் சேர்கிறார்கள், தாங்கள் விட்ட அதே இடத்தில். காதலை சொல்ல டைட்டானிக் கப்பல்களும், பன்டோராகளும் தேவைப்படும் இந்த காலத்தில், ஒரு உதயகிரி என்பது முக்கியமாகிறது. நல்லவேளை இந்த நகரத்தை அவர்கள் கிராபிக்ஸில் உருவாக்கிவிட்டார்கள். இதுவே ஷங்கர் என்றால் நிஜமாகவே ஒரு செட்டை போட்டிருப்பார். உதயகிரியில் காட்டப்படும் அந்த 45 நிமிடங்களுக்கு நம்மை இருக்கையின் நுனிக்கு வரவழைத்து விடுகிறார் இயக்குனர். மற்றபடி இரண்டு குத்துபாட்டு, இரண்டு சண்டை என படம் செல்கிறது. ஆந்திராவில் 100 கோடி வசுலான படம் என சொல்கிறார்கள். படம் அதற்கு தகுந்ததுதான் என நான் நினைக்கிறேன்.

No comments:

Post a Comment