அவன் இவன்

Tuesday 21 June 2011  at June 21, 2011;
கடலுக்கு மீன் பிடிக்க போனவனும், கைவரிசை காட்டி செயின் பறிக்க போனவனும் வீட்டுக்கு திரும்புவது எப்பொழுதுமே சவால்தான். அதனால்தான் திருடபோவதற்கு முன்னர் ஆடு வெட்டி படையல் போட்டு குலசாமிக்கு காணிக்கை செலுத்தும் கிராமங்கள் தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் இருந்தன, அது இப்பொழுதும் அப்படியே இருக்கின்றனவா என்பது தெரியாது. ஆனால் அவர்களும் ஒரு professional ethics? ஐ பாலோ பண்ணிதான் தங்கள் தொழிலை செய்தார்கள். அதாவது, சொந்த மாநிலத்தில் அவர்கள் தங்கள் கைவரிசையை காட்டுவது இல்லை, யாரையும் துன்புறுத்துவது இல்லை, என்று பல இத்தியாதிகள். திருட்டு தொழிலை அவர்களே மறந்தாலும் அவர்களை உசுப்பிவிடும் வேலைகளை திறன்பட செய்திருக்கிறது அவன் இவன் திரைப்படம்.

தெரிஞ்ச தொழிலை விட்டவன் கெட்டான் என்ற பழையமொழியை பாலோ செய்யும் ஆர்யா, தெரியாத தொழிலில்(நடிப்பு) பிரகாசிக்க நினைக்கும் விஷால், ஒரு மொட்டை(படத்தில் அப்படிதான் அந்த சின்ன பையன் அழைக்கிறான்)கமுதிகோட்டை ஜமீன் இடையில் கதையை சொல்லியிருக்கிறார் கதை சொல்லி பாலா.

கதை என்பதை விட கலாய்தல் என்று சொல்லலாம். மூவரும் அவர்களுக்குள் நன்றாக கலாய்த்து கொள்கிறார்கள். போதாகுறைக்கு அவர்கள் அம்மாகளும். துண்டு பீடியிலிருந்து, கட்டிங் சரக்குவரை partnership போட்டு அம்மாகளும் மகன்களும் குத்தாட்டம் போடுகிறார்கள். இப்படியான அறநெறி குடும்பத்தில் தங்களை இணைத்துகொள்ள இரண்டு இளம் யுவதிகள் விஷாலிடமும், ஆர்யாவிடமும் காதல்வயப்படுகிறார்கள். காதல் ஜெயித்ததா, இல்லையா என வெள்ளி திரையில் பாருங்கள் என சொல்லும் அளவுக்கு காதலும் இல்லை, கூடலும் இல்லை. ரிட்டன் பை பாலா என டைட்டில் கார்டு போடுவதற்கு ஒரு மாட்டு புரோக்கரை வில்லனாக காட்டி(ஆர்.கே பேசவேயில்லை), அவன் மூலம் ஜமீனை அம்மணமாக்கி மரத்தில் தொங்கவிடுகிறார். பின்னர் பழிவாங்கும் படலம், எரிந்துபோகும் சடலம், என படம் முடிகிறது. ஆர்.கே ஏன் ஜமீனை பழிவாங்குகிறார் என சஸ்பென்சான விஷயத்தை வெள்ளிதிரையில் பாருங்கள்.

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் :)))

No comments:

Post a Comment