மிட் நைட் ஹாரர் டேல்ஸ்

Wednesday 27 July 2011  at July 27, 2011;
உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படும் A haunting நிகழ்ச்சி டிஸ்கவரில் பார்க்க நேர்ந்தது. தாய்வான் நாட்டின் மலைபிரதேசத்தில் கட்டப்பட்ட ஒரு பங்களாவிற்கு தங்கவரும் ஓர் மேலைநாட்டு குடும்பம் அமானுஷ்ய சக்திகளின் தொந்தரவால் வீட்டையே காலிசெய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் அவலநிலையை பார்த்தபோது சிரிப்புதான் வந்தது. ஸ்தூபி வடிவத்திலான தூண்களால் கட்டப்படும் வீடுகள் துஷ்டதேவதைகளின் இருப்பிடமாக இருக்கும் என்பது தாய்வான் மக்களின் எண்ணம் என்பதும், அவ்வீடு கட்டபடுவதற்கு முன்னால் அங்கு இருந்த பண்ணை திடீரென்று எரிந்ததால் அங்கு இருந்த இருவர் தீக்கிரையாகி இறந்தனர் என்பதும்தான் அங்கு பேய்கள் இருக்கின்றன என்பதற்கு சொல்லப்படும் முக்கிய காரணங்கள். பேய்களை ஓட்டுவதற்கு களமிறங்கும் பாதிரியார் வீட்டின் ஒவ்வொரு மூலையில் நின்றும் ஜெபிக்கும்போது அங்கு மின்விளக்குகள் அணைந்து மீண்டும் எரிகிறது. பகுத்தறிவு கொண்டு இதை மறுக்கமுயன்றாலும் தன்னால் அது இயலவில்லை என்று நேரில்கண்ட அந்த பெண்மனி கூறுகிறார். தன் மந்திரத்தால்? அப்பேய்களை கட்டிப்போடும் மதகுரு இரண்டுமாதங்களில் இந்த வீட்டை காலிசெய்துவிடும்படி எச்சரித்து சீனர்களின் ஸ்வஸ்திக் சின்னத்தை வீட்டின் முன்பகுதியில் தொங்கவிட்டுவிட்டு தன்னுடைய பேட்டாவை வாங்கிகொண்டு நடைகட்டுகிறார். நிகழ்ச்சி முடிகிறது.

செவ்வாயில் தண்ணீர் இருக்கிறதா என்ற ஆராய்ச்சியை காட்டும் டிஸ்கவரி சேனல்தான், பேய் இருக்கிறதா என்ற நிகழ்ச்சியையும் காட்டுகிறது. மக்களின் அறிவை மேம்படுத்தும் அதேவேளையில், அவர்களின் பகுத்தறிவை மழுங்கடிக்கும் வேலையிலும் அது இறங்கியிருக்கிறது. மிட் நைட் மசாலாவை போல் மிட் நைட் ஹாரர் டேல்ஸ் எந்த புண்ணியவான் மண்டையில் உதித்ததோ.ஆனா இது இந்தியாவுக்கு ஏத்த எள்ளுருண்டை ;)

புவிஈர்ப்பு விசையை கண்டுபிடித்த நியூட்டனும், அதன் எதிர்விசையை கண்டுபிடித்த? நித்தியும் பிறந்த இப்பூவுலகில் வாழும் ஒவ்வொரு சராசரி மனிதனும் இதையெல்லாம் பொறுத்துகொள்ளதான் வேண்டும்.

No comments:

Post a Comment