RIP AdobeFlex

Thursday 15 December 2011  at December 15, 2011;
Flex developer களை நட்டாற்றில் விட்டுவிட்டு ஓடியே போய்விட்டது அடோப். அடோப் ப்ளெக்ஸ் இனி அப்பாச்சி ப்ளெக்ஸ். Open Source ஆன flex sdk வை  தன்னுடைய பணம் செலவழித்து develop செய்ய விரும்பாத அடோப் தற்போது அதை அப்பாச்சிக்கு தாரை வார்த்துள்ளது. அமேசானும், மோட்டரோலாவும் ப்ளாஷ் ப்ளேயரை தங்களுடைய முக்கிய feature ஆக ஆக்கி தத்தமது டேப்ளட்டுகளை விற்கும் நேரத்தில், adobe தன்னுடைய மொபைல் flash player மற்றும் flex sdk development களை கைவிட்டிருக்கிறது. அதேநேரத்தில் flash builder ஐ டெவலப் செய்வது தொடரும் என அறிவித்து இருக்கிறது.

ios இல்லை, ஆண்டிராய்டுதான் எல்லாம் என முடிவுக்கு வந்த அடோப், comptibility issue  க்கு, சாப்ட்வேருக்காக கூகுளையும், ஹார்டுவேருக்காக போன் கம்பெனிகளையும், ப்ராசசருக்காக சிப் கம்பெனிகளிடமும் அலைய வேண்டி இருந்தது. கூகுள் ஆண்டிராய்டு தாங்கி வரும் எல்லா கம்பெனிகளையும் கவனிப்பது வேலைக்கு ஆகாது என கடைசியில் உணர்ந்தவர்கள் Flashplayer ஐ மொபைலில் இருந்து தூக்க முடிவு செய்தார்கள். 

வெப் டெவலப்மென்ட் மற்றும் மொபைல், டேப்ளட்களுக்காக ஆரம்பிக்கபட்ட Flex ஐ  வேறுவழியின்றி அவர்கள் இழக்கவேண்டியிருந்தது. Flashplayer 11 ஹார்டுவேர் acceleration ஐ கொண்டு இயக்க வல்லது அதனால் அதற்கு gpu போதும், CPU வை dry செய்யாது என அறிவிக்கும் நேரத்தில் இந்த அறிவிப்பும் வந்திருப்பது மிகவும் துரதிஷ்வசமானது.

ஸ்டீவ் ஜாப்ஸ் flash player க்கு iphone யில் வேலை இல்லை என துரத்தி அடிக்கும்போதே, work around ஆக cross compiler ஐ கொண்டு வந்தவர்கள் ஆயிற்றே
, இப்பொழுது  phonegap ஐ acquire செய்து அப்பாச்சிக்கு கொடுத்திருக்கிறார்கள். இனி html5 தான் எல்லாம் என நேரத்திற்கேற்ப மாறிகொள்ளும் அடோப் இப்பொழுது அதற்கான builder களை தயார்செய்து கொண்டிருக்கிறார்கள். 4 வருடமாக அவர்களின் டெக்னாலாஜியை உபயோகித்தவர்களுக்கு அவர்கள் காட்டும் விசுவாசம் இதுதான்.

ப்ளாஷ்ப்ளேயரை ஓப்பன் சோர்ஸ் ஆக்குங்கள் என எல்லாரும் குரல்கொடுக்கும் போதெல்லாம் H.264 video codec ஐ தாங்கள் பல  மில்லியன் டாலர்கள் லைசன்ஸ் தொகையாக வருடா வருடம் செலவழிக்கின்றோம் என சொல்லி அடோப் எல்லார் வாயையும் அடைக்கும் அதே நேரத்தில், கூகுள் குரோம் தாங்கள் அந்த பார்மெட்டை சப்போர்ட் செய்யபோவதில்லை என அறிவித்து இருந்தார்கள். ஏனென்றால் அவர்கள் அந்த லைசன்ஸ் வாங்கிய flashplayer ஐ குரோமுடன் integerate செய்து இருக்கிறார்கள். Flashplayer ஐ தங்கள் மொபைலும், டேப்ளலட்டுகளும் இயக்க வல்லது என விளம்பரம் செய்து மற்ற மார்க்கெட் லீடர்களை கவிழ்க்க சதி செய்யும் அதே நேரத்தில், flash ஐயும் வளர்த்துவிட்டது போல் ஆனது என எண்ணிய கூகுளுக்கு இப்பொழுது திருடனுக்கு தேள் கொட்டிய கதைதான்.

mouse cursor யின் செயல்பாடுகளுக்கு ஏற்றதாய் படைக்கப்பட்டதுதான் flash player அது touch gesture களுக்கு சரியாகாது என சொன்ன ஸ்டீவ் ஜாப்ஸ் பக்கமே வெட்கமேயில்லாமல் சாய்ந்திருக்கும் அடோபை நினைத்து சிரிப்பதா, இல்லை Blackberry playbook க்கு இவர்களுடைய AIR ஐ ஒரு sdk வாக உபயோயிக்க சொன்ன blackberry ஐ நினைத்து அழுவதா?

PDF யும், Photoshop யும், Flash டைம்லையும் நம்பி இருக்கும்  ஒரு டிஜிட்டல் கன்டென்ட், டிசைனர் கம்பெனியை டெவலப்பர்கள் நம்பியது மிகபெரிய தவறு. இதை நம்பி கோடிகளை இரைத்த கார்ப்பரேட்டுகளே பெரிதாக எடுத்துகொள்ளவில்லை எனும்போது, அதில் வேலை செய்யும் ஜீன்ஸ் போட்ட கூலிகள் நினைத்து என்ன ஆக போகிறது. சரிதானே?

1 comment:

அணில் said...

இதுபோன்று இன்றைய டெவலப்மெண்ட் போக்கை தமிழில் எழுதுவது மிகக் குறைவு. அக்குறையை தாங்கள் போக்கியிருக்கிறீர்கள். கூகிளில் ”phonegap மொபைல்” எனத் தேடி தங்கள் தளத்திற்கு வந்தேன். அருமையான பதிவு சார்.

Post a Comment