Showing posts with label Article. Show all posts
Showing posts with label Article. Show all posts

ஆண்டிராய்டு ஒரு சகாப்தம்

Sunday, 17 March 2013  at March 17, 2013;
ஆண்டிராய்டு - கடந்த 4 வருடங்களுக்கு முன் வந்த முதல் போனில் இருந்து இன்று வரை இதன் வளர்ச்சியை பார்த்து கொண்டிருக்கிறேன். தற்சமயம் இது ஜெல்லிபீனில் நிற்கிறது. இந்த OS ஐ பயன்படுத்தும் சாதனங்கள் பல கோடி பேர்களால் விரும்பப்படுகிறது. பல புதிய முயற்சிகளை இது தொடங்கியிருக்கிறது. இந்த சகாப்தம் எல்லையில்லா வானம் போல் பல புதுமைகளை தொழில்துறையில் புகுத்திருக்கிறது. லட்சக்கணக்கான அப்ளிகேஷன்கள் உருவாக்கப்பட்டு சந்தைபடுத்தப்படும் ஒரு இயங்குதளம் அதனுடைய தொலைநோக்கு திட்டத்தில் வெற்றி பெற்றிருக்கிறதா? ஆம் என்றே சொல்லவேண்டும். 
அமெரிக்க ஆளுமை கொண்ட ஒரு கம்பெனி சிறிய மற்றும் கையடக்க சாதனங்களுக்கான இயங்குதளத்தின் மீது இருந்த மாயவலையை அறுத்திருக்கிறது. செல்போன் ஸ்மார்ட்போன் ஆன கதையில் தொடங்கிய தேடல் இப்பொழுது லேப்டாப் சாதனங்களையே குழி தோண்டிண்டிருக்கிறது என எண்ணும்போது, இதுவும் சாத்தியமோ? என நினைக்க தோன்றுகிறது. MS DOS கண்டிபிடிக்கப்பட்ட நாட்களில் நான் பிறந்திருக்கவில்லை ஆனாலும் கல்லூரியின் தொடக்க காலங்களில் கற்றிருக்கிறேன். அது வரையில் அது நீடித்தது Google தோன்றாதது ஒரு காரணமாக இருக்கலாம். கண்டுபிடிப்பை எல்லாம் காசாக்கும் குறுகிய நோக்கம் அன்றைய கார்ப்பரேட்டுகளின் எண்ணமாக இருந்து வந்தது. அதனால் அதை பயன்படுத்தும் பெரிய கம்பெனிகளை தாண்டி அது சாமானியர்களை சேரவில்லை. இன்றும் அது தொடர்கிறது, ஆனால் இப்பொழுது வேறு வடிவில்.

சாப்ட்வேர் மீது தீராத காதல் உள்ளவர்கள் தங்களுக்கான ஹார்டுவேரை தாங்களே தயாரித்து கொள்ளவேண்டும் - இது ஆலன் கே சொன்னது. இதைதான் ஸ்டீவ் ஜாப்ஸ் தன்னுடைய iPhone வெளியீட்டு விழாவில் நினைவு கூர்ந்தார். அவர் சாப்ட்வேர் மீது தீராத காதல் கொண்டவர், தன்னுடைய ஆப்ரேட்டிங் சிஸ்டத்துக்கு ஹார்டுவேரையும் அவரே தயாரித்தார். கிளிக் வீலில் தொடங்கி டச் கெஸ்சர் வரை அவர் கண்டுபிடித்த ஹார்டுவேர் இன்டர்பேஸ் அனைத்தும் கோடிகளை வாரி வழங்கியது. உயர்குடி மக்களின் அந்தஸ்தாகி போனது அவருடைய கம்பெனியின் தயாரிப்புகள் அனைத்தும். விண்டோஸ் ஒரு பக்கம், ஆப்பிள் ஒரு பக்கம் முழுதாய் கல்லா கட்டினாலும் லினக்ஸ் மட்டும் எழுந்திருப்பதாய் தெரியவில்லை. லினக்ஸ் பெரிதாய் வரமுடியாததற்கு காரணம் அதை சார்ந்து சாப்ட்வேர் தயாரிப்பதற்கு முன்னனி நிறுவனங்கள் காட்டிய தயக்கமே எனலாம். இணையத்தின் விஸ்வருப வளர்ச்சி, இனைய மொழிகளுக்கான தேவைகள், அதனால் தோன்றிய புற்றீசல் போலான செர்வர் மொழிகள் அனைத்துக்கும் லினக்ஸ் தேவையாய் இருந்தது. அதோடு அங்கே நின்று போனது.

பல்லாண்டு கால ஆராய்ச்சி பலனாய் கண்டுபிடிக்கப்பட்ட டச் போன் ஆப்பிள் போன்களுக்கு மட்டுமே என்றும், அதனுடைய சோர்ஸ்கோட் அனைத்தும் க்லோஸ்டு சோர்ஸாகவே இருக்கும் என்ற அறிவிப்பு மற்ற தொலைபேசி கம்பெனிகளின் வயிற்றில் புளியை கறைக்க, அங்கே ஒரு நம்பிக்கை ஒளி கூகுளால் உருவானது. இதில் வியாபார நோக்கம் இருந்தாலும், தொலை நோக்கு சிந்தனையில் அது அடிபட்டுபோகிறது. மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கட்டமைப்பிற்கான ஒரு குழு கூகுளால் உருவாக்கப்பட்டது, ஆண்டிராய்டு நிறுவனத்தை ஏற்கனவே கூகுள் வாங்கியதால் அதன் தலைவர் ஆண்டி ரூபின் தலைமையில் ஆண்டிராய்டு OS ஐ தயாரிக்கும் வேலைகள் முழு மூச்சில் தொடங்கி இன்று இந்தளவுக்கு நிற்கிறது.

பத்து வருடங்களுக்கு ஒரு முறை ஏதோ ஒரு கண்டுபிடிப்பு விஸ்பரூப வளர்ச்சி எடுத்து அனைவரையும் அன்னாந்து பார்க்க வைக்கிறது. இம்முறை மொபைல் கம்பியூட்டிங். டெஸ்க்டாப் விஷயங்களில் இல்லாத ஒன்று பெரிதாக ஒன்றும் இதில் இல்லை ஒன்றை தவிர. அது டச் கெஸ்சர்!!! அதுவும் மல்டி டச் பின்ச் உடன். கைப்பேசி என்பது ஸ்மார்ட் போன் ஆகி இப்போது பேப்லெட்டில் வந்து நிற்கிறது.  ஆனந்த விகடனில் ஹாய் மதனில் ஒரு வாசகரின் கேள்விக்கு மதன் இப்படி பதில் அளித்திருந்தார். ' என்னதான் கம்பியூட்டரில் புத்தகம் வாசிக்க முடிந்தாலும், படுத்து கொண்டு புத்தகத்தை வாசிக்கும் வசதி அதில் இல்லையே என்று சொல்லியிருந்தார். இப்போது அதே பத்திரிக்கை அப்ளிகேஷன் வடிவில் டேப்ளட்டுகளில் படுத்து கொண்டு படிக்க முடிகிறது என்றால், மொபைல் கம்யூட்டிங் எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்று உணர முடிகிறதா?

எனக்கு ஒரு பலமான சந்தேகம் இடையில் ஏற்பட்டது, டெஸ்க்டாப் கம்பியூட்டர்களுக்கான அப்ளிகேஷன்கள் தயாரிப்பு என்பது Cloud கம்பியூட்டிங் மூலமாக காலவாதியாக இருக்கும் நிலையில், க்ரோமியம் OS என்ற  Browser அடிப்படையில் இயங்கும் நோட்பேட்கள் சந்தையில் புதிதாய் அறிமுகப்படுத்தும் காலகட்டத்தில், மீண்டும் அப்ளிகேஷன் டெவலப்மெண்ட் என்பது? லாஜிக் எங்கோ உதைக்கிறதே என்று ஒரு ஐயம் ஏற்பட்டது. அதற்கான விளக்கம் ஒரு நண்பர் மூலமாக உடனடியாக கிடைத்தது. அப்ளிகேஷன்கள் லட்சக்கணக்கில் இருக்க காரணம் மொபைலிட்டி என்பது ஒரு முக்கிய காரணமாக இருந்தாலும், நவீன கால கட்டத்தில் வியாபார நிறுவனங்கள் தங்களுடைய சேவைகளை அப்ளிகேஷன்கள் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு வழங்க தொடங்கியிருக்கிறது, அதோடு மட்டுமின்றி Field work செய்யும் அத்துனை நிறுவனங்களும் தங்கள் கம்பெனியின் அப்ளிகேஷன்கள் மூலமாக இன்று பேப்பரை ஒழித்திருப்பதில் பொபைல் அப்ளிகேஷன்களுக்கு முக்கிய பங்கு உண்டு.

சரி ஒரு வழியாக ஆண்டிராய்டு அசுர வளர்ச்சி அடைந்துவிட்டது ஆனால் அதன் மூலம் ஹார்டுவேர் கம்பெனிகள் லாபம் அடைந்ததா என்றால், சொல்லவே தேவையில்லை கொள்ளை லாபம் பார்க்க தொடங்கிவிட்டார்கள். எப்படி இது சாத்தியம். ஆண்டிராய்டு ஸ்டாக் ரன் செய்வதற்கு இதுதான் ஹார்டுவேர் தேவை என்று கூகுளால் குறிப்பிட்டு சொல்லப்படவில்லை. மினிமம் ஹார்டுவேர் தேவைகளுடன் ஆண்டிராய்டின் பழைய வெர்ஷன்கள் இன்றும் ரன் ஆகி கொண்டிருக்கிறது. சைனாவின் மீடியா டெக் நிறுவனத்தின் RTOS கொண்டு இயங்கும் செல்போன்கள் இப்போது அவர்களின் லேட்டஸ்ட் MT6589 சிப் செட் மூலம் ஆண்டிராய்டின் லேட்டஸ்ட வெர்ஷனை லோட் செய்ய ஆரம்பித்திருப்பது அதிநவீன தொழில் நட்ப சேவைகளை வழங்கும் ஆண்டிராய்டு ஜெல்லிபீனை சாமானியர்களும் தொட்டு அனுபவிக்கும் வாய்ப்பை வழங்கியிருக்கிறது. 10,000 க்கு இனி நீங்கள் Quad core processor, 8 MP camera, 5 இன்ச் திரை, மல்டி டச், பின்ச் , வீடியோ கான்பிரன்சிங், லட்சத்திற்கும் மேற்பட்ட அப்ளிகேஷன்கள் அனுபவிக்கும் வாய்ப்பு உங்கள் வசமாகிறது என்றால் இது யாருடைய சாதனை? சந்தேகமே இல்லாமல் ஆண்டிராய்டால்தான்.

இன்றைய தேதியில் ஆண்டிராய்டின் ஆண்டி ரூபினுக்கு பதிலாக Chromium OS ஐ பார்த்துகொண்டிருந்த சுந்தர் பிச்சை ஆண்டிராய்டு தலைவர் பொறுப்பை கூடுதலாக பார்க்க தொடங்கியிருக்கிறார், இது குரோமியம் OS ஐ ஆண்டிராய்டுடன் இனைக்கும் புது முயற்சி என்று எல்லாராலும் நம்ப ப்படுகிறது. விளைவுகள் எப்படி இருக்கும்? ஆண்டிராய்டு அப்ளிகேஷன்கள் இனி குரோம்புக்கில் ரன் ஆகும். குரோம்புக்கின் இயங்குதளமாக, டெஸ்க்டாப் கம்பியூட்டர்களின் இயங்குதளமாக இனி ஆண்டிராய்டு இருக்கும். எப்படி வின்டோஸ் 8 மொபலைலிலும், டெக்ஸ்டாப் கம்யூட்டர்களிலும் ரன் ஆகிறோதோ அப்படி. ஆண்டிராய்டு இயங்குதளம் இனி மொபைல் கம்பியூட்டிங்கிலிருந்து டெஸ்க்டாப் மற்றும் க்ளொல் கம்பியூட்டிங்கிற்கும் அதனுடைய வேர்களை பரவ விட்டிருக்கிறது. இது என்ன மாதியான புரட்சி
ஏற்படுத்தும் என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

மிட் நைட் ஹாரர் டேல்ஸ்

Wednesday, 27 July 2011  at July 27, 2011;
உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படும் A haunting நிகழ்ச்சி டிஸ்கவரில் பார்க்க நேர்ந்தது. தாய்வான் நாட்டின் மலைபிரதேசத்தில் கட்டப்பட்ட ஒரு பங்களாவிற்கு தங்கவரும் ஓர் மேலைநாட்டு குடும்பம் அமானுஷ்ய சக்திகளின் தொந்தரவால் வீட்டையே காலிசெய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் அவலநிலையை பார்த்தபோது சிரிப்புதான் வந்தது. ஸ்தூபி வடிவத்திலான தூண்களால் கட்டப்படும் வீடுகள் துஷ்டதேவதைகளின் இருப்பிடமாக இருக்கும் என்பது தாய்வான் மக்களின் எண்ணம் என்பதும், அவ்வீடு கட்டபடுவதற்கு முன்னால் அங்கு இருந்த பண்ணை திடீரென்று எரிந்ததால் அங்கு இருந்த இருவர் தீக்கிரையாகி இறந்தனர் என்பதும்தான் அங்கு பேய்கள் இருக்கின்றன என்பதற்கு சொல்லப்படும் முக்கிய காரணங்கள். பேய்களை ஓட்டுவதற்கு களமிறங்கும் பாதிரியார் வீட்டின் ஒவ்வொரு மூலையில் நின்றும் ஜெபிக்கும்போது அங்கு மின்விளக்குகள் அணைந்து மீண்டும் எரிகிறது. பகுத்தறிவு கொண்டு இதை மறுக்கமுயன்றாலும் தன்னால் அது இயலவில்லை என்று நேரில்கண்ட அந்த பெண்மனி கூறுகிறார். தன் மந்திரத்தால்? அப்பேய்களை கட்டிப்போடும் மதகுரு இரண்டுமாதங்களில் இந்த வீட்டை காலிசெய்துவிடும்படி எச்சரித்து சீனர்களின் ஸ்வஸ்திக் சின்னத்தை வீட்டின் முன்பகுதியில் தொங்கவிட்டுவிட்டு தன்னுடைய பேட்டாவை வாங்கிகொண்டு நடைகட்டுகிறார். நிகழ்ச்சி முடிகிறது.

செவ்வாயில் தண்ணீர் இருக்கிறதா என்ற ஆராய்ச்சியை காட்டும் டிஸ்கவரி சேனல்தான், பேய் இருக்கிறதா என்ற நிகழ்ச்சியையும் காட்டுகிறது. மக்களின் அறிவை மேம்படுத்தும் அதேவேளையில், அவர்களின் பகுத்தறிவை மழுங்கடிக்கும் வேலையிலும் அது இறங்கியிருக்கிறது. மிட் நைட் மசாலாவை போல் மிட் நைட் ஹாரர் டேல்ஸ் எந்த புண்ணியவான் மண்டையில் உதித்ததோ.ஆனா இது இந்தியாவுக்கு ஏத்த எள்ளுருண்டை ;)

புவிஈர்ப்பு விசையை கண்டுபிடித்த நியூட்டனும், அதன் எதிர்விசையை கண்டுபிடித்த? நித்தியும் பிறந்த இப்பூவுலகில் வாழும் ஒவ்வொரு சராசரி மனிதனும் இதையெல்லாம் பொறுத்துகொள்ளதான் வேண்டும்.

சொல்ல நினைத்த கதை -2

Thursday, 16 December 2010  at December 16, 2010;
சாதாரண பேருந்தின் கட்டணத்தை விட மூன்று மடங்கு அதிகமாக கொடுத்துதான் நான் இந்த அனுபவத்தை பெறமுடிகிறது. சுருக்கமாக சொல்லவேண்டுமானால் மேல்தட்டு வர்க்கம்தான் இதை அனுபவிக்க முடிகிறது. சமத்துவத்தை வாய்கிழிய பேசும் அரசாங்கம்தான் தன் மக்களை அவர்களின் சம்பளத்தை கொண்டு மேல்தட்டு, கீழ்தட்டு என பிரித்து இருக்கிறது.

அரசனையும், இறைவனையும் நம்பிதான் நமக்கு இரண்டு உலக வாழ்வு என்பது விதி. இறைவன் தன் மக்களை ஏழை, பணக்காரன் என்று ரீதியில் பிரிப்பதில்லை. சொர்க்கமோ, நரகமோ எல்லாரும் அங்கு சமமாக பாவிக்கப்படும்போது இப் பூவுலகில் அது ஏன் சாத்தியமில்லை. அரசனை நம்பி கைவிடப்பட்டு அனாதையாக தெருவில் திரியும் பிச்சைகாரர்களுக்கு ஒரு வேளை உணவை ஏன் அது தரமுடியவில்லை.? அரசன் ஆளும் நாட்டில் நமக்கு ஒரு கஷ்டம் என்றால் இறைவனை அழைக்கிறோம், ஏன் அரசனை அழைப்பதில்லை.? பிடரி முடியை விட நான் உனக்கு நெருக்கமாக இருக்கிறேன் என இறைவன் சொல்லும்போது, அரசனால் ஏன் சொல்லமுடியவில்லை.? வாயில்லா ஜீவனுக்குகூட நீதி வழங்கிய மனுநீதி சோழன் ஆட்சி ஏன் இங்கே இல்லை.?

மீண்டும் உயிர்ப்பிக்கப்படும் நாளின்  சொர்க்கத்தை ஏன் என்னால் இங்கு காணமுடியவில்லை. பூவுலகில் சொர்க்கம் என்பது நிறைவேதா கனவா?. பூலோக சொர்க்கம் சாத்தியமா?


[...தொடரும்]

சொல்ல நினைத்த கதை

Wednesday, 15 December 2010  at December 15, 2010;
ஒரு புத்தகத்தை ஒருவருக்கு படிக்க கொடுத்து அதில் அவருக்கு என்ன பிடித்திருக்கிறது என்று கேட்டால், அவர் சொல்வது அனேகமாக சில நிகழ்வுகள்தான். அதுதான் அவரை பாதித்திருக்கிறது, அவரை கவர்ந்து இருக்கிறது. இது ஆளுக்கு ஆள் மாறுபடும். அதுபோலதான் நான் உணரும் சில விஷயங்கள். இவற்றை நீங்கள் அனுபவிக்க என் கண்கண்ணாடியை போட்டுகொண்டுதான் படிக்கவேண்டும். சாருவின் ஜீரோ டிகிரியில் என்னை கொணர்ந்து எழுத போகும் புதினம் அல்ல இது. எஸ்.ராமகிருஷ்ணனின் ஒரு 5 மணி நேர பயண அனுபவத்தின் நாவல் என்று நினைத்து கொள்ளுங்களேன்.

சென்னையிலிருந்து சிதம்பரத்திற்கு SETC AC வண்டியில் பயணம். வெளியில் நல்ல மழை. உள்ளே push back சீட்டில்,சீரான குளிர்ச்சியில் Binny's யின் Super Shawl ஐ போர்த்திகொண்டு, வெளியில் மழையில் நனைந்து போகும் கால்நடைகளையும், மரங்களையும், குடை பிடித்து கொண்டு போகும் மனிதர்களையும், ரம்மியமான ஓர் பயணத்தில் நான் ரசிக்கிறேன். 250 ரூபாயில் நான் மேற்கொண்ட பயணம் எனக்கு வண்டலூர் விலங்கியல் பூங்காவின் Lion Safary யைதான் நினைவூட்டியது. எனக்கான வசதியையும் பாதுகாப்பையும்  உறுதிபடுத்திய  பின்னர் நான் மேற்கொள்ளும் இந்த பயணங்கள் சிலவற்றை எனக்கு உணர்த்தியது. நான் மேற்கொண்ட பல ஆயிரம் கிலோமீட்டர் பயணங்களில் இந்த 200 கிலோமீட்டர் பயணம் எனக்கு முக்கியமான ஒன்று.
[தொடரும்...]

சொல்ல மறந்த கதை

Saturday, 31 July 2010  at July 31, 2010;
சாட்டிங்கில் எப்பொழுதும் எனக்கு பெரிய ஈடுபாடு இருந்தது கிடையாது. சரி சும்மா சென்று பார்ப்போமே என Programming category யில் US ரூமில் நுழைந்த ஒரு நிமிடத்தில் ஒருவர் Hi என சம்பிரதாபடி ஆரம்பிக்க முடிவில் அவர் ஒரு B.E படித்த ஆந்திர மாணவர் கடந்த ஒரு வருடமாக வேலையை தேடி கொண்டு இருக்கிறார் என தெரிந்தது. உங்களால் ஏதாவது Refer பன்ன முடியுமா என கேட்டு முடிவில் அவருடைய பெர்சனல் மெயில் ஐடி கொடுத்தார். கண்டிப்பாக என்னால் ஆன மட்டும் உதவி செய்வதாக சொன்னேன். .Net யில் தற்போது வேலை சரியாக கிடைக்காததால் SAP ஐ Placement கோர்ஸில் சேர்ந்து படிக்கப்போவதாகவும் சொன்னார்.

இந்தியாவில் வேலைதேடும் ஒருவர் எதற்கு US ரூமில் இருக்கவேண்டும், வந்த ஒரு நிமிடத்தில் என்னுடன் சாட் செய்து என்னுடைய நட்பு பெற வேண்டும், ஒரே காரணம்தான் இப்பொழுது அவருக்கு வேலை வேண்டும். அவரின் விடா முயற்சி ஒரு நாள் அவருக்கு பலன் அளிக்கும். விடலை பருவத்தில் கடலை போடாமல் பொழுதுபோக்கை கூட நல்ல பொழுதாக ஆக்கிகொள்ளும் இன்றைய இளைஞர்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது.

மண்ணில் காலூன்றிய மூன்று ஆண்டுகளுக்குதான் நாம் சுதந்திரமாக இருந்து இருக்கிறோம். Pre kg யில் ஆரம்பித்த கல்வி சுமை மேல்படிப்புவரை ஒரு மனிதனை அழுத்திகொண்டுதான் இருக்கிறது. விட்டது சனியன் என விட்டால் பிறகு வேலை சுமை,அது கடைசி வரை இருக்கும் ஒரு அழுத்தம். இதன் நடுவில் திருமணம், குழந்தை என சுகமான சுமைகள். இடிதாங்கியாக இருக்கவேண்டிய நம்மை சுமை Donkey களாக எது ஆக்கியது? இயற்கை? நிச்சயமாக இல்லை பிறகு எது என கேட்டால் நான் சொல்லும் ஒரே பதில் நம்மை சுற்றியுள்ள சமூக அமைப்பு.

நாகரிகத்தின் மேல் கட்டப்பட்ட இந்த சமூக அமைப்பு அதன் அடித்தளத்தில் பலவற்றை புதைத்துவிட்டது என்பதே நிஜம். பல ஜீவராசிகள், அபூர்வ தாவரங்கள், காட்டில் வாழ்ந்த அற்புத மனிதர்கள் என இயற்கையின் நெருங்கிய உறவாளிகள் நம் சமூக அமைப்பின் அடித்தளத்தில் சிக்கி புதைந்துவிட்டார்கள். நம் ஆறாவது அறிவின் செயல்பாடு பூமியின் ஆயுளுக்கான கவுண்டவுனை ஆரம்பித்துவிட்டது. பைபிள் 2000 என்றது, மாயன் 2012 என்றார் எது எப்படியோ இன்னும் ஒரு நூறாண்டு தாண்டுவது கஷ்டம்.


நம்முடைய 2000 வருடங்கள் என்பது மனித வாழ்க்கையின் ஒழுக்கம் போதிக்கும் நல்ல மனிதர்களின் வருகையை காட்டும் ஒரு கால இயந்திரம். ஆனால் அதன் முந்தைய நூற்றாண்டுகளிலும் மனிதர்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் இயற்கையின் படைப்புகளிடம் நெருங்கி பழகியதால் அவர்களை நாம் காட்டுவாசிகள் என ஒதுக்கிவைத்து விட்டோம்.

விஞ்ஞானம் அதனுடைய  மாற்றம் நிகழ்த்திய இந்த 100 ஆண்டுகளிலேயே மனிதன் 2000 ஆண்டுகள் முந்தைய வாழ்க்கையை நினைத்து ஆசை கொள்கிறான். டைட்டானிக், டெரிமினேட்டர் என பார்த்த உள்ளங்கள் அவதாரையும், அப்போகலிப்டோவையும் வெறுக்கவில்லையே ஏன், மரணிக்கும் தருவாயில் சொர்க்கம் என காடுகளையும் பெறும் பூங்காக்களையும் ரமணாவிலும், கிலேடியேட்டிரிலும் தழுவுவது போல் காட்டுவது எதற்காக, ஏனெனனில் அது நம்முடைய மனதில் ஆழமாய் பதிந்த காட்சிகள். இன்றும் வீடுகளின் அறைகளை மலைகளும் குளங்குளும் நிரம்பிய ஆறு, அதன் நடுவில் தன்னந்தனியே ஒரு வீடு என போஸ்டர்கள் அலங்கரிக்கவேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.

என்னுடைய மனக்கவலை மனிதர்களே இல்லாத இடங்களுக்கு சென்றுவிடலாமா என நினைக்கவைத்தது என பாபர் அவருடைய சுயசரிதையில் சொல்கிறார்.அதையேதான் பிரகாஷ்ராஜூம் சொல்வதெல்லாம் உண்மை என்ற அவருடைய புத்தகத்திலும் சொல்கிறார். இடைவெளி மாறினாலும் மனிதனுடைய மனம் இன்னும் மாறவில்லை. நாம் எல்லோரும் முற்போக்குவாதிகள் என சொல்லி கொள்ளும் பழமைவாதிகள்தான்.

கல்லும் கல்லும் உரசி நெருப்பை கண்டுபிடித்தான், கண்ணும் கண்ணும் பார்த்து காதலை தேடி பிடித்தான், எதனோடு எதை சேர்த்து மொழியை கண்டுபிடித்தான். கண்டுபிடிப்பு என்பதே பலவற்றை காணாமல் போக செய்வதுதான். உரங்களால் அழியும் மண்புழு போல மொழியால் நாம்  இயற்கையின் மொழியை கேட்கமுடியாத செவிடர்களானோம். மனிதனின் சங்கேத பாஷை மொழி வடிவம் பெற்ற நிலையில் நாம் இயற்கையின் மொழியை அந்நிய மொழியாய் ஆக்கி கொண்டோம். இறைவன் படைத்த இந்த  உலகத்தில் எல்லாவற்றுக்கும் உயிர் இருக்கிறது. ஆனால் அவற்றுக்கு தங்களுக்கான் மொழியை உருவாக்கி கொள்ளும் வாய்ப்பு இல்லாமல் போனது, நமக்கான பகுத்தறிவு ஒரு காரணமாய இருக்கலாம். ஜீவராசிகளின் சில வலிகள் இன்றும் நம்மால் உணர முடியும். ஒன்று அது வாய்விட்டு கதறும் சத்தம் மற்றொருன்று அதனுடைய கண்ணீர். தன்னுடைய கன்றை இழந்து கதறிய பசுவின் கண்ணீர் எனக்கு இன்றும் ஞாபகமிருக்கிறது

பகுத்தறிவின் பகட்டான மொழி அவனுக்கு தலைமுறைகளுக்கு செய்திகளுக்கு பரப்பும் ஒரு ஊடகம் ஆகிபோனது. கடன் வாங்காத கேள்வி கேள் என்று சொன்ன ஓஷோ கூட மொழிக்கு கடன்பட்டுதான் உபதேசம் செய்தார். ஆற்றின் கரைகளில் நாகரிகம் தோன்றும் முன்னரே மனித இனம் மொழி என்னும் நாகரிகம் பெற்றது. மொழியில்லாத வஸ்துக்கள் அநாகரிகம் ஆனது. நாகரிக Jaint wheel ல் நாம் இப்பொழுது உச்சத்தை அடைந்து இருக்கிறோம். சுழற்சி முறையில் அடுத்த இலக்கு என்ன என்பது நமக்கு எல்லாரும் தெரியும்.

ஊடகம் தவிர்த்து மனித இனத்தின் முன்னேற்றம் இரண்டை சார்ந்துள்ளது. ஒன்று நெருப்பு, மற்றொன்று சக்கரம்.திமாக் கி பத்தி சலாதே என மென்டாஸ் விளம்பரத்தில் வரும் அம்மனிதனின் கடைசி கண்டுபிடிப்பு சக்கரம் அதுவே கழுதையை அடிமைபடுத்தும். அதுதான் உண்மை. சக்கரம், இவ்வுலகின் இரண்டாம் பெரிய கண்டுபிடிப்பு. கண்டுபிடிப்புகளின் அச்சாணியாக இன்றும் சக்கரம் இருக்கிறது அதை சுழல வைக்கும் தொழில்நுட்பம் நெருப்பிடம் இருக்கிறது. கரடுமுரடான கல்லின் உரசலில் பிறந்த தீப்பொறி, மனித மூளையின் இயக்கத்தை ஆரம்பித்தது. தட்டையான கல்லின் முனைகள் உருண்டை வடிவம் பெற்றது, விலங்கினம் அடிமை ஆனது, மனித இனம் வெற்றி பெற்றது.

வெற்றி மற்றொன்றை வெற்றிடமாக்கியது. சமநிலை சமாதியானது. அறிவின் மேண்மை அளக்கப்பட்டது. தலைவன் உருவானான். தலைவிதி மாற்றி எழுதபட்டது. அப்பொழுதிலிருந்து மனித இனத்தின் அடிமை வம்சம் ஆரம்பமானது.

சுதந்திரம் என்ற பெயரில் மாற்றி எழுதப்பட்ட அடிமை சாசனம், சட்டத்தின் விலங்கால் குடிமக்களை இணைத்திருக்கிறது. இதில் முதல் அடிமை, மூத்த அடிமை என பாகுபாடு வேறு. உயர பறக்கவேண்டிய கழுகின் குஞ்சு, முட்டையின் இடமாற்றத்தால் காக்கையின் கூண்டில் இருக்கிறது. கபளீகரம் செய்ய துடிக்கும் பாம்பு காவி சட்டையில் காத்திருக்கிறது. இணங்கிபோவதும், இரையாகிபோவதுமான இரண்டு வழிகள்தான் இருக்கிறது. மூன்றாம் வழி ஒன்று இருக்கிறது அது நம்மை நாம் அடையாளம் கொள்வது.

அக்னிசிறகுகளை விரித்து, ஆகாயத்தில் பறக்க நாம் செய்ய வேண்டியது நம்மின் அடையாளத்தை நாம் உணர்வதுதான்.

உணர்கிறீர்களா?

வீராணம் ஏரியின் கதை

Tuesday, 11 May 2010  at May 11, 2010;
மகாபலிபுரம் சுற்றுலா போகும் முன்பு கல்கியின் சிவகாமி சபதம் படித்துவிட்டு போனதாக என்னுடைய நண்பர் சொன்னது எனக்கு ஆச்சரியாமாக இருந்தது. கல்கி பற்றி நான் முன்பே  அறிந்துயிருந்தாலும் அவருடைய எழுத்து எனக்கு பரிச்சயமில்லை. நாவல்கள் கதைகள் படிப்பதில் எனக்கு விருப்பமில்லை, நம்முடைய வாழ்க்கையை ஒரு விறுவிறுப்பான நாவல் போல  இருக்கும்போது கற்பனா கதைகள் எதற்கு என்று அப்பழக்கத்தையே விட்டுவிட்டேன். வைரமுத்து இதற்கு விதிவிலக்கு;)

காட்டுமன்னார்கோயிலை பற்றி prtraveller.blogspot.com ப்ளாக்கில் வந்த நம்மூரின் கோயில் வரலாறு, வீராணம் ஏரி மற்றும் சோழர்களின் வரலாறு கல்கியின் பொன்னியின் செல்வனை படிக்க தூண்டியது. மணல்மேட்டில் பிறந்த ஒருவருக்கு காவிரியும் சோழர்களும் புதிதில்லை. மூன்றைரை வருடங்கள் கல்கியில் வந்த இந்த 2400 பக்கங்களில் 150 பக்கங்களை படித்தபோது, செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் எடுத்தது கூட பொன்னியின் செல்வன் பாதிப்பாக இருக்குமோ என எண்ண தோன்றியது. வீராணம்  ஏரியை கடக்கும்போது இதை உருவாக்கிய ராஜேந்திர சோழன் உண்மையிலேயே பெரிய ஆள்தான் என நினைத்தேன். ஆனால் அதை கட்டியது மதுரை கொண்ட பராந்தகரின் புதல்வர் இளவரசர் இராஜதித்தர் என்பது எனக்கு இப்பொழுதுதான் தெரியும். கல்கியின் இலக்கியம் கூறுவது இதைதான்

விஜயாலய சோழனின் பேரரான முதற் பராந்தக சோழன் மதுரையும், ஈழமும் ொண்ட  கோப்பரகேசரி என்று பட்டம் பெற்றவன். சோழ பேரரசுக்கு அஸ்திவாரம் அமைத்தவன் அவனே. தில்லை சிற்றம்பலத்துக்கு அவன் பொன் கூரை வேய்ந்து சரித்திர புகழ்பெற்றவன். சோழசிகாமணி, சூரசிகாமணி, முதலிய பல விருதுப் பெயர்களோடு வீரநாராயணண் என்னும் பெயரையும் அவன் கொண்டிருந்தான்.

பராந்தகனுடைய காலத்தில் வடக்கே இரட்டை மண்டலத்து ராஷ்டிரகூட மன்னர்கள் வலிமை பெற்று விளங்கினார்கள். மானிய கேடத்திலிருந்து அவர்கள் படையெடுத்து வர கூடுமென்று பராந்தகன் எதிர்பார்த்தான். எனவே, தனது முதற்புதல்வனாகிய இளவரசன் இராஜதித்தனை ஒரு சைன்யத்துடன் திருமுனைப்பாடி நாட்டில் இருக்க செய்தான். அந்த சைன்யத்தை சேர்ந்த லட்சகணக்கான வீரர்கள் வேலையின்றி சும்மா இருக்க நேர்ந்த காலத்தில் இராஜதித்தன் ஒரு யோசனை செய்தான். குடிமக்களுக்கு உபயோகமான ஒரு பெறும் பணியை அவர்களை கொண்டு செய்விக்க எண்ணினான். வட காவேரி என்று பக்தர்களாலும் கொள்ளிடம் என்று மற்றவர்களாலும் அழைக்கப்பட்ட பெருநதியின் வழியாக அளவில்லாத வெள்ள நீர் ஓடி வீணே கடலில் கலந்து கொண்டிருந்தது. அதில் ஒரு பகுதியை ஒரு பயன்படுத்த எண்ணி தன் வசமிருந்த வீரர்களை கொண்டு கடல் போன்ற விசாலமான ஏரி ஒன்றை அமைத்தான். அதை தன் அருமை தந்தையின் பெயரால் வீரநாராயண
ஏரி என்று அழைத்தான். பிற்காலத்தில் தக்கோலத்தில் நடந்த போரில் தாமே முண்ணணியில் யானை மீது ஏறி சென்று போரிட்டு பகைவர்களின் வேலை மார்பிலே தாங்கி உயிர் நீத்த அந்த மாபெரும் வீரன் 'யானை மேல் துஞ்சிய தேவர்' என பெயர் பெற்றான்.
(நன்றி கல்கியின் பொன்னியின் செல்வன் மற்றும் அதை பதிவிறக்கம் செய்ய உதவிய www.projectmadurai.org)

74  கணவாய்கள், 16 கிலோமீட்டர் நீளம், 4 கிமீ அகலம் கொண்ட ஏரி 1011 யிலிருந்து 1037 யில் கட்டப்பட்டது. NLC விரையமாக்கும் நீர் ஆறு போல ஓடுவது ஒரு பக்கம், 1000 கோடி செலவு செய்து 45 ஆழ்குணாய் மூலம் 180 மில்லியன் லிட்டர் தினமும் உறிஞ்சப்படுவது இன்னொரு பக்கம் என நம் நீர் ஆதாரம் இன்று தொலைத்து கொண்டு இருக்கிறோம். நீரோட்டம் அதிகரிக்க வடவாற்றில் போடப்பட்ட சிமெண்ட தளங்களால் நம்முடைய குடிநீர் போர்வெல்கள் இன்று ஆழமாக இறக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். 47 அடி ஆழத்தை இன்னும் ஒரு அடி கூட நம்மால் தோண்ட முடியாமல் இருக்கும்போது, நம் எதிர்கால சந்ததினருக்கு அது ஒரு தரைவெளி ஆகும் நாள் வெகு தொலைவில் இல்லை.

நெல்லாடிய நிலமெங்கே, சொல்லாடிய அவை எங்கே என ஆயிரத்தில் ஒருவனாய் கேட்கும் முன்பே இளங்கீரனும், மஞ்சை வசந்தனும், அறிவுமதியும், கண்ணன் பிள்ளையும் விழித்தால் சரி.