ஒரு புத்தகத்தை ஒருவருக்கு படிக்க கொடுத்து அதில் அவருக்கு என்ன பிடித்திருக்கிறது என்று கேட்டால், அவர் சொல்வது அனேகமாக சில நிகழ்வுகள்தான். அதுதான் அவரை பாதித்திருக்கிறது, அவரை கவர்ந்து இருக்கிறது. இது ஆளுக்கு ஆள் மாறுபடும். அதுபோலதான் நான் உணரும் சில விஷயங்கள். இவற்றை நீங்கள் அனுபவிக்க என் கண்கண்ணாடியை போட்டுகொண்டுதான் படிக்கவேண்டும். சாருவின் ஜீரோ டிகிரியில் என்னை கொணர்ந்து எழுத போகும் புதினம் அல்ல இது. எஸ்.ராமகிருஷ்ணனின் ஒரு 5 மணி நேர பயண அனுபவத்தின் நாவல் என்று நினைத்து கொள்ளுங்களேன்.
சென்னையிலிருந்து சிதம்பரத்திற்கு SETC AC வண்டியில் பயணம். வெளியில் நல்ல மழை. உள்ளே push back சீட்டில்,சீரான குளிர்ச்சியில் Binny's யின் Super Shawl ஐ போர்த்திகொண்டு, வெளியில் மழையில் நனைந்து போகும் கால்நடைகளையும், மரங்களையும், குடை பிடித்து கொண்டு போகும் மனிதர்களையும், ரம்மியமான ஓர் பயணத்தில் நான் ரசிக்கிறேன். 250 ரூபாயில் நான் மேற்கொண்ட பயணம் எனக்கு வண்டலூர் விலங்கியல் பூங்காவின் Lion Safary யைதான் நினைவூட்டியது. எனக்கான வசதியையும் பாதுகாப்பையும் உறுதிபடுத்திய பின்னர் நான் மேற்கொள்ளும் இந்த பயணங்கள் சிலவற்றை எனக்கு உணர்த்தியது. நான் மேற்கொண்ட பல ஆயிரம் கிலோமீட்டர் பயணங்களில் இந்த 200 கிலோமீட்டர் பயணம் எனக்கு முக்கியமான ஒன்று.

[தொடரும்...]
No comments:
Post a Comment