சொல்ல நினைத்த கதை -2

Thursday, 16 December 2010  at December 16, 2010;
சாதாரண பேருந்தின் கட்டணத்தை விட மூன்று மடங்கு அதிகமாக கொடுத்துதான் நான் இந்த அனுபவத்தை பெறமுடிகிறது. சுருக்கமாக சொல்லவேண்டுமானால் மேல்தட்டு வர்க்கம்தான் இதை அனுபவிக்க முடிகிறது. சமத்துவத்தை வாய்கிழிய பேசும் அரசாங்கம்தான் தன் மக்களை அவர்களின் சம்பளத்தை கொண்டு மேல்தட்டு, கீழ்தட்டு என பிரித்து இருக்கிறது.

அரசனையும், இறைவனையும் நம்பிதான் நமக்கு இரண்டு உலக வாழ்வு என்பது விதி. இறைவன் தன் மக்களை ஏழை, பணக்காரன் என்று ரீதியில் பிரிப்பதில்லை. சொர்க்கமோ, நரகமோ எல்லாரும் அங்கு சமமாக பாவிக்கப்படும்போது இப் பூவுலகில் அது ஏன் சாத்தியமில்லை. அரசனை நம்பி கைவிடப்பட்டு அனாதையாக தெருவில் திரியும் பிச்சைகாரர்களுக்கு ஒரு வேளை உணவை ஏன் அது தரமுடியவில்லை.? அரசன் ஆளும் நாட்டில் நமக்கு ஒரு கஷ்டம் என்றால் இறைவனை அழைக்கிறோம், ஏன் அரசனை அழைப்பதில்லை.? பிடரி முடியை விட நான் உனக்கு நெருக்கமாக இருக்கிறேன் என இறைவன் சொல்லும்போது, அரசனால் ஏன் சொல்லமுடியவில்லை.? வாயில்லா ஜீவனுக்குகூட நீதி வழங்கிய மனுநீதி சோழன் ஆட்சி ஏன் இங்கே இல்லை.?

மீண்டும் உயிர்ப்பிக்கப்படும் நாளின்  சொர்க்கத்தை ஏன் என்னால் இங்கு காணமுடியவில்லை. பூவுலகில் சொர்க்கம் என்பது நிறைவேதா கனவா?. பூலோக சொர்க்கம் சாத்தியமா?


[...தொடரும்]

No comments:

Post a Comment