Tech Tamil - 20 4Chan

Tuesday, 16 November 2010  at November 16, 2010;
Register, Login என்று கட்டிகொண்டு அழும் தளங்கள் இன்றைய காலத்திற்கு வேலைக்கே ஆகாது. தனித்தனியே எல்லா தளங்களுக்கும் register செய்வதற்கு பதிலாக ஒரு  தளத்தின் id முகவரியை கொண்டு login ஆகும் openid எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள் என தெரியவில்லை. பணம் பரிவர்த்தனை செய்யும் ITZ cash ஏ கார்டின் பின்னால் ஒரு தற்காலிக username, password கொடுத்து அதை முடித்துவிடுகிறது. நமக்கு தேவையா என்ன?

Anonymous, இது எல்லாருக்கும் பிடித்த சொல். ஏனென்றால் இந்திய ஜனநாயகத்தில் மக்களின் குரல் இப்பொழுது இதன்மூலம்தான் கேட்கிறது. உதராணம் வேண்டுமா? thatstamil, dinamalar கமெண்ட்ஸ் சென்று பாருங்கள். அனானிமஸ் ஆக ஒரு Forum இருந்தால் எப்படி இருக்கும், அதில் Request, Random என எல்லா பிரிவும் இருந்தால், ரொம்ம்ம்ப சொகரியாய் இருக்கும். அதைதான் 7 வருஷமாய் 4Chan.org செய்கிறது.


50 க்கும் மேற்பட்ட பிரிவுகள், No Registration, No Search, No Backup,  keep watching அவ்வளவுதான். 40GB டேட்டா streaming ஆகும் வெள்ளோட்டம்தான் 4chan. இதில் /b/ ரொம்ப பிரபலம். ஏனென்றால் இதில் Random ஆக எல்லா விஷயமும் வரும். அதற்கடுத்து /r/ இது Request. இங்கு கேட்டால் செமத்தியாய் கிடைக்கும். வாங்கி கட்டி கொண்டவர்கள் லிஸ்ட் ரொம்ப பெரிசு.

ஐடியா நல்லா இருக்கு, ஆனா உள்ள இருக்குற மேட்டர் கொஞ்சம் விவகாரமா இருக்கு . நல்லதை எடுத்துட்டு கெட்டதை தூக்கிபோடுங்க, or  vice versa :)


No comments:

Post a Comment