என் ப்ளாக் செய்தி தளமில்லை

Thursday, 4 November 2010  at November 04, 2010;
தமிழ்மணம் புதிதாக வெளியிட்டுள்ள Paid service என் ப்ளாக்கிற்கும் பொருந்தும் என்ற மெயில் படித்தபோது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. இப்பொழது ஒரு வாரமாகத்தான் காட்டுமன்னார்கோயில் பற்றி தினசரியில் மற்றும் நண்பர்களின் ப்ளாக்கில் இருந்து வரும் செய்திகளை என் ப்ளாக்கில் போடுகிறேன். 10 க்கும் மேற்பட்ட போஸ்டுகளை அப்படி இனைத்ததால் வந்த பிரச்சனைதான் இது என்று நினைக்கிறேன்.

இப்படி அடுத்தவர் போஸ்ட்டை போட்டாலும் எதிலிருந்து எடுத்தோமோ அவருடைய தளத்திற்கு ஒரு லிங்க் கொடுத்துவிடுவேன். ஆனால் அவர்கள் என்ன விதமான லைசன்ஸ் உபயோகப்படுத்துகிறார்கள் என தெரியாமல் அப்படி செய்தது மிகப்பெரிய முட்டாள்தனம் என இப்பொழுதுதான் உணர்கிறேன்.

என்னுடைய நண்பர் ஒருவர் Adobe Flex ஐ பத்தி தன்னுடைய ப்ளாக்கில் ஒரு கட்டுரை எழுத அதை அந்த கம்பெனியிலேயே வேலை செய்யும் ஒருவர் விளையாட்டாய் தன்னுடைய ப்ளாக்கில் போட்டுவிட்டார், அதுவும் அவரின் அனுமதி பெறாமல், ப்ளாக்கின் லிங்க் கூட கொடுக்காமல். என்னிடம் வந்து புலம்பி தீர்த்துவிட்டார் நண்பர். நான் கூட என்னடா இவன் ரொம்ப ஓவரா பண்ணாராணேன்னு நினைத்தேன். ஒரு டெக்னிக்கல் ப்ளாக் எழுதுவது என்பது ரொம்ப கஷ்டம். அதுவும் அவர் ஒரு  வாரமாக எழுதியது. பின்னர்தான் அவரின் வலி தெரிந்தது.

ஒரு நிருபரை நியமித்து, அவருக்கு மாதாமாதம் சம்பளம் கொடுத்து எழுதி வாங்கும் எந்த content ம் அந்நிறுவனத்தின் அசைக்கமுடியாத சொத்து. அதனால்தான் குறிப்பிட்ட மூன்று தினசரிகளுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். அவர்கள் அனுமதி அளித்தால்தான் இது செய்தி தளம் ஆகும். இல்லையேல் இது ஒரு Personal blog தான் என்பதை தமிழமணம் நிர்வாகத்திற்கு தெரியபடுத்திகொள்கிறேன்.

அதுவரை மற்ற போஸ்டுகள் Draft யில்

No comments:

Post a Comment