நம்மூர் பிரபலங்கள்

Friday, 29 October 2010  at October 29, 2010;
திரு.மணிரத்னம் அவர்களை அவ்வப்போது ஊரில் அங்கங்கு நடக்கும் நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கிறேன்.துபாயில் கலைஞர் டிவியில் மானாட மயிலாட ரிகர்ஸலில் மணிரத்னத்தையும் பேட்டி கண்டார்கள். நேயர்களுக்கும்
1 லட்சம் பரிசு என அறிவித்தார். அட இவர் நம்மூர் இல்ல, இவர் எப்படி கலைஞர் டிவியில் அதுவும் ரிகர்ஸலில் ஆர்கனைஸர்களுடன் சேர்ந்து உட்கார்ந்திருக்கிறார் என நினைத்து அவரை பற்றி கூகுளில் தேடியபோது கிடைத்தது ஆச்சரியமான தகவல்கள்.

இவர், நவசக்தி புரோமோட்டர்ஸ் என்ற நிறுவனம் நடத்தி அதன்மூலம் புதுவைக்கு அருகே அனுக்கிரகா சேட்டலைட் டவுன்ஷிப் கட்டியவர் என்பது தெரியவந்தபோது wow. 1000 வீடுகள் பங்களா டைப்பில் இருக்கும் அனுகிரகா சேட்டலைட் டவுன்ஷிப், இவரின் ஹைலைட் ஜாப்.

திரு.மணிரத்னம் அவர்கள் நாட்டார்மங்கலம் என அறிகிறேன். சரியாக தெரியவில்லை. எது எப்படியோ ராதா இன்ஜினியரிங் வெங்கடேசன் அவர்களுக்கு அடுத்து இன்னும் ஒரு தொழிலதிபர் நம்மூரில் இருந்து வந்திருப்பது நமக்கு பெருமையே.

வாழப்பாடிக்கு ஒரு ராமமூர்த்தி, பண்ருட்டிக்கு ஒரு ராமச்சந்திரன் என அவரவர் தங்களுடைய அடையாளங்களாக அவரவர் ஊர் பெயரை சேர்த்துகொள்ளும்போது. நம் ஊர் மக்கள் மட்டும் தங்கள் அடையாளங்களை மறந்து வாழ்கிறார்கள். நானாவது காப்பாற்றுகிறேன் இப்படிபோட்டு கொண்டு KmKoilKamil (ச்சும்மா) ;)

No comments:

Post a Comment