Tech Tamil - 8

Saturday 17 April 2010  at April 17, 2010;
1.ஆப்பிள அப்ளிகேஷன்களை உருவாக்க இனி நேட்டிவ் Language களையே பயன்படுத்தவேண்டும் என்ற ஆப்பிளின் கொள்கை Adobe CS5 க்கு பெரிய தலைவலியை உருவாக்கியிருக்கிறது. Flash-to-iPhone converter ஐ பெரிதாக நம்பிய அடோப், இப்பொழுது என்ன செய்வதன்றே தெரியாமல் விழிக்கிறது. 80,000 மதிப்புள்ள CS5 ஒரு Converter யின் முதுகில் பயணம் செய்ய முற்பட்டது பெரிய முட்டாள்தனம்.

2.கூகுள் தன்னுடைய புதிய Google Cloud Printing பற்றி விளக்கியுள்ளது. இது ஆரம்ப கட்டத்தில் இருந்தாலும் பலரின் வரவேற்பை பெற்றுள்ளது. Drivers, OS பற்றி கவலையில்லாமல் On the fly யில் Print செய்யும் இந்த முயற்சி பாராட்டத்தக்கது. இந்த Cloud மரங்களை காப்பாற்றாது.

3.Ning.com தன்னுடைய இலவச சேவையை விரைவில் மூடுகிறது. Community Search ஐ எப்பொழுது அது எடுத்ததோ அப்பொழுதே அதற்கு மூடுவிழா நடந்துவிட்டது.

4.15 யிலிருந்து 30 வயதுக்கு உட்பட்டவர்களை குறிவைத்து தன்னுடைய Kin போனை Microsoft வெளியிட்டுள்ளது. சோஷியல் நெட்வொர்கிங் மற்றும் Cloud Storage இதனுடைய தனிசிறப்பு. Windows CE யின் கடைசி போன்?.

5.Scam Mail அனுப்பி புதியவர்களை கொக்கி போடும் tagged.com $6,50,000 பைன் கட்டவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. shtyle.fm இப்பொழுது இந்த வேலையை ஆரம்பித்துள்ளது. அவர்களிடமிருந்து மெயில் வந்தால் படிக்காமலேயே Delete செய்துவிடுங்கள். எப்படியெல்லாம் Traffic காட்றாங்க?

6.ஏழு கோடி போன் Calls அட்டெண்ட் செய்து $32 மில்லியன் லாபத்தை காட்டியிருக்கும் Justdial அமேரிக்காவிலும் கால் பதித்திருக்கிறது. 1-800-JUSTDIAL சேவை இனி அங்கேயும் ஒலிக்கும். ரவிஷங்கர் கால் கட்டணத்தை  குறைத்தார், அம்பானி போண் விலையையே குறைத்தார், இந்த இரண்டையும் பயன்படுத்தி மணி நம்முடைய அலைச்சலை குறைத்தார். அப்படியே இந்த On demand யும் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்

7.Opera Mini ஆப்பிள் ஸ்டோரில் ஏற்றிய அன்றைய தினமே 10 லட்சம் டவுன்லோட் ஆகியிருக்கிறது. வெப்பேஜ்களை கம்பரஸ் செய்து Browsing அனுபவத்தை எளிதாக்கிய Opera அப்படியே இந்த Unicode யும் கொஞ்சம் பார்த்தால் நன்றாக இருக்கும்.

8.Twitter Client Tweetie ஐ டிவிட்டர் வாங்கியுள்ளது. இனி Tweetie "Twitter for iPhone". இதனுடைய டெஸக்டாப் கிளையண்ட for Mac பீட்டா ரிலீஸ் ஆகும் முன்னரே Demonoid யில் ரிலீஸ் செய்து புண்ணியத்தை கட்டி கொண்டனர் Torrent User கள். இப்பொழுது Mininova வில் தமிழே இல்லையே ஏன் தெரியுமா?

9.Draft க்கு பிறகு ப்ளாக்கரிகளின் நீண்ட கால Request ஆன Static Page ஐ Blogspot அறிமுகப்படுத்தியுள்ளது. 10 பக்கங்களை வரை நீங்கள் சேர்த்துகொள்ளலாம். ஆனால் அதிலும் Comments, Tags என ஒரு Post மாதிரியே வழங்கியுள்ளது நன்றாகவேயில்லை. நானே Justhost க்கு மாறலாம் என நினைக்கிறேன். வெறும் 1500 க்கு 6 மாத சேவை. .

10.நண்பர் ராஜேஷின் www.aboutkattumannarkoil.blogspot.com க்கு பிறகு இப்பொழுது உடையார்குடியிலிருந்து நம் நண்பர்கள் www.kattumannarkoil.in என்ற தளம் ஆரம்பித்துள்ளது வரவேற்கத்தக்கது. என்னுடைய டிஜிட்டல் கனவு நிறைவேறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை இது காட்டுகிறது.

No comments:

Post a Comment