Tech Tamil -9

Tuesday 27 April 2010  at April 27, 2010;
மோட்டாராலா L6 போனை வாங்கிவிட்டு,  அதை எப்படி கம்பியூட்டருடன் கனெக்ட் செய்வது என கேட்டபோது ஒரு டேட்டா கேபிள் மற்றும் டிரைவர் சிடி தேவை என நண்பர்கள் சொன்னார்கள். டேட்டா கேபிள் TNagar சத்யா பஜாரில் கிடைத்தது. பிறகு சிடி எங்கே கிடைக்கும் என கேட்டால் அது Motorola Showroom ல் கிடைக்கும் என ொன்னார்கள். ஷோரூமில் போனுடன் சேர்த்துதான் சிடி கிடைக்குமேதவிர தனியாக கிடைக்காது என பதில் வந்தது. கேமரா போன் எனக்கு புதுசு, எப்பேர்பட்டாவது சிடியை வாங்கினால் நம் போட்டாக்களை கம்பியூட்டரில் பார்க்கலாமே என நப்பாசை.

அப்பொழுது அந்த சிடிக்காக 500 ரூபாய் கூட கொடுக்க தயாராகயிருந்தேன். ஆனால் சிடி மட்டும் கிடைக்கவேயில்லை. இதை யாரிடம் கேட்பது என்றும் தெரியவில்லை. ஜஸட் டயல், கால் சென்னை இதற்கு வேலை ஆக மாட்டார்கள் பிறகு எப்படி?

எனது தேவை கண்டிப்பாக இங்கேதான் சென்னையில் இருக்கிறது ஆனால் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. What the hell is this. டெக்னாலஜி மீது குறையா அல்லது எனது Knowledge ல் குறையா? கண்டிப்பாக இரண்டின் மீதும் தான். உண்மை சொல்லபோனால் எனக்கு அப்பொழுது இண்டர்நெட் அவ்வளவு பரிச்சயமில்லை. நண்பரின் ரூமில் இருந்த நெட் அதற்கான சாப்ட்வேரை கண்டுபிடிக்க உதவியது. Motorolo Phone Tools டவுன்லோட் செய்து, என் போனில் இருந்த போட்டாகளை கம்பியூட்டருக்கு மாற்றி அதை பார்த்தபோது, மிகவும் சந்தோஷப்பட்டேன். அன்று நான் எடுத்த 500 க்கும் மேற்பட்ட புகைபடங்கள் இன்றும் பிக்காஸாவில் பார்க்கிறேன்.

இந்த சிறிய சம்பவம் எனக்கு ஆன் டிமாண்ட் சேவையின் முக்கியதுவத்தை உணர்த்தியது அவசர அவசிய தேவைகளை நிவர்த்தி செய்யாத எந்த கண்டுபிடிப்பும் அதனுடைய மதிப்பை ஒரு கட்டத்தில் இழக்கும் என உணர்ந்தேன். வெறும் போன் மட்டும் எல்லாவற்றிக்கும் உதவாது ,போனும் நெட்டும் இணைந்த சேவைதான் எல்லாவற்றையும் விட டாப். நாம் அதற்கு தயாராகிவிட்டோமா? நிச்சயமாக இல்லை.

GSM சேவை இண்டர்நெட்டுக்கு வேலைக்கு ஆகாது. இதை உணர்ந்துதான் அப்பொழுதே ரிலையன்ஸ் CDMA போனை வெளியிட்டார்கள். நாம் சிம் கார்டு பிரியர்கள். நம்பரையும் சேவையையும் அடிக்கடி மாற்றுவதால் நமக்கு CDMA ஆகாது என முடிவுசெய்து அப்பொழுதே அதை வீணாக்கிவிட்டோம். காலம் கடந்த மொபைல் நெட் ஆசை இப்பொழுது இந்தியாவில் ஆரம்பித்திருப்பது  சந்தோஷம்தான். மொபல் நெட்டை கம்பியீட்டருடன் கனெக்ட் செய்து ப்ரொஸ் பன்னுவதால் Unlimited இப்பொழுது 100 MB ஆகிவிட்டது. ஆனால் இது போதும்.

Gmail, Twitter, என இப்பொழுது On the fly ல் உடனடியாக செய்திகளை அறிந்துகொள்ள முடிகிறது. செய்திகளில் கூட தலைப்பு செய்தி மட்டும் பார்க்கும் நாம் டிவிட்டரை அதற்கு உபயோகப்படுத்தலாமே. ஊரில் என்ன நடக்கிறது என்பது வெளியில் உள்ளவர்கள் அறிந்து கொள்வது இன்றும் நடக்காத காரியம். அதற்காக ஒரு சைட்டை ஆரம்பித்து அதில் அப்டேட் செய்வது கொஞ்சம் சிரமம். ஊரில் உள்ளவர்கள் அப்பொழுதைய செய்திகளை 140 சொற்களில் சுருக்கமாக எழுதி @kattumannarkoil க்கு அனுப்பினால் அதை நான் Retweet செய்வேன். என்னை ஃபாலோ செய்யும் நம் ஊர்காரர்களுக்கு உடனுக்குடன் மெசேஜ் தெரியுமல்லவா? அனுப்புபவர்களுக்கோ எனக்கோ இதில் ஒன்றும் லாபம் இல்லை. செய்திகளை அனுப்பபோகும் நம்மூர் நண்பர்கள் நினைத்தால் இது சாத்தியம். என்னுடைய டிவிட்டர் ஐடி www.twitter.com/kattumannarkoil.

மினிமம் நோக்கியா வைத்திருப்பீர்கள். ஒரு மாத GPRS 100 ரூபாய் மட்டுமே. முடிந்தால் டிவிட்டர் அப்ளிகேஷன் டவுன்லோட் செய்யுங்கள்  இல்லையென்றால் Opera Mini யிலேயே டிவீட் செய்யுங்கள். ஒரு SMS அனுப்பவதை போலதான் இதுவும் ஆனால் எங்களுக்கு அது மிகவும் முக்கியமானது. ரீடிவிட்  செய்ய நான் கேயரண்டி.

போன வருடம் Intel ஒரு போட்டியை நடத்தி அதில் உங்களின் வருங்கால விஞ்ஞான கனவு என்ன என கேட்டார்கள். கம்பியூட்டர் ஒரு மொபைல் சைஸூக்கு மாறவேண்டும். Virtual Screen with Touch உடன் இருக்க வேண்டும் என எழுதினேன். Sixth day வில் அர்னால்ட் தொடும் அந்த வெர்சுயல் ரியாலட்டி, Mac Mini, Apple Hologram இவைகள் தான் என்னை அப்படி கேட்க வைத்தது. இண்டலின் நேணோ சிப் விளம்பம், TED யில் வெளிவந்த ப்ரணவ் மிஸ்டிரி பார்த்த பின் அட இது நம்ம ஆப்பிளின் அடுத்த Prototype ஆக இருக்கலாம் என விட்டுவிட்டேன். தேவைகளே மனிதனை யோசிக்க வைத்தது. அதுவே அதனை படைக்க உதவியது. அந்த படைப்பே அவனுக்கு பணத்தை அளித்தது


Ondemand ஐ இப்பொழுது நான் 140 கேரடக்டரில் யோசிக்கிறேன். பரந்து விரிந்து கிடக்கும் ரிஸோர்ஸை ஒரு கூண்டுக்குள் அடைக்கும் முயற்சி இது. டிவிட்டர் API கேட்வேயில் நுழைந்து, ரீடிவிட்டை ஆட்டோமேஷன் ஆக்கி, கேட்டகரில் அதை நுழைத்து, கிடைக்கும் அவுட்புட்டை ரிப்ளை பண்ணி, ஐஸ்ட் டயலை கொஞ்சம் உரசி பார்த்தால் என்ன என யோசிக்கிறேன்.

எனது தேவைகளை நான் டிவிட்டர் வழியே பார்க்கிறேன், உங்களுக்கும் அது தெரியும் ஒருவேளை நீங்கள் எனது கண் வழியே பார்த்தால். என்ன தயாரா?

1 comment:

Unknown said...

மிக அழகான , உபயோகமான பதிவு நண்பரே... !

பகிர்தலுக்கு மிக்க நன்றி ...!
தொடர்க

Post a Comment