Tech Tamil - 10

Saturday 15 May 2010  at May 15, 2010;
1.Facebook யிலிருந்து FarmVille கேம்ஸ் உரிமையாளர்கள் Zynga விலகுகிறார்கள். Zynga Live இருக்க கவலையில்லை.

2.Android யின் Senior Product Manager Erick Tseng விலகி Facebook யில் இணைந்தார். இது Facebook யின் மொபைல் சேவைக்கு மிகப்பெரிய பலம்.

3.Google Innovation in the Open எனப்படும் Google I/O Developer Conference இந்த மாதம் 19 மற்றும் 20 தேதிகளில் நடக்கிறது. Android ம் க்ரோமும் அறிமுகமான கூகுள் I/O யில் இந்த வருடம் Google Slate அல்லது Goolge TV செட்டப்பாக்ஸ் அறிமுகப்படுத்தலாம் என செய்தி.

4.விக்கிபீடியாவின் புது தீம் பார்த்தீர்களா? ஜிம்மி வேல்ஸ் நல்ல வெப்டைட் டெவலப்பர் என்பது உலகமறிந்த உண்மை.

5.Flash க்கு Alternative ஆக Giunduai வை ஆப்பிள் தயாரிப்பதாக செய்தி. Sprout Builer ம் HTML5 ம் ஆப்பிளுக்கு கைகொடுக்கவில்லை.

6.Google தன்னுடைய Classic Page ஐ விட்டு புதிய வண்ணத்தில் ஜொலிக்கிறது. Bing ஐ பார்த்து காப்பி அடித்த அந்த சைட்பார் அருமையாக இருக்கிறது.

7.கூகுள் Nexus One ஐ இனி ரீடைல் Store லேயே வாங்கலாம் என கூகுள் இறங்கி வந்திருப்பது ரீடைல் வர்த்தகர்களுக்கு சந்தோஷமான செய்தி. போனை தொட்டு வாங்கனும்.

8.அநேகமாக Chrome OS தாங்கி வரும் முதல் நோட்புக் Acer ஆகத்தான் இருக்கும் என செய்தி. ஜூன் முதல் வாரத்தில் நடைபெறும் ஆசியன் கம்பியூட்டர் டிரேடில் பார்வைக்கு வரலாம்.

9.www.go2web20.net சென்று பாருங்கள். வெப் 2.0 தளங்களை அழகாகி வரிசைபடுத்தியிருக்கிறார்கள்.

10.தமிழில் Search Engine இருக்கிறதா என பார்த்தால் www.searchengine.minnale.net இருந்தது. அவர்கள் வழங்கியிருக்கும் Virtual Keyboard ஐ பார்க்க பயமாக இருந்தது. TACE-16 ம் இதுபோல்தான் இருக்குமோ? இதற்கு கீபோர்டே பத்தாதே

11.Twitter யில் Mention செய்து அனுப்பும் செய்திகளை பார்ப்பதில பெரிய பிரச்சனை. இதற்கு சுலபமான வழி உங்கள் டிவிட்டர் Username ஐ www.topsy.com போட்டு பார்த்துவிடுங்கள். Tweetmeme விட இதுதான் பெஸ்ட்.

12.Cloud 2.0 பற்றி Mark Benioff வின் வெப்கேஸ்ட் மே 25 காலை 11:30 க்கு ஒளிபரப்பாகிறது. Amazon, Google, ebay வில் ஆரம்பித்த க்லொட் 1.0 Twitter யும் Facebook யும் சேர்த்து Cloud 2.0 என்கிற மார்க்கின் வியாக்கியானம் வெப்கேஸ்ட் பார்த்தால் புரியும். Salesforce Chatter promotion?

13.Tim O'reilly யின் Internet Operating System பற்றிய 2 பாகமாக வெளிவந்த கட்டுரை படித்தீர்களா? Web 2.0 என்ற சொல்லை கண்டுபிடித்தவரின் நீண்ட ஆய்வு கட்டுரை. Web 2.0 Expo 2010 யின் முத்தாய்பாய்

No comments:

Post a Comment