Tech Tamil - 11 Adobe

Monday 17 May 2010  at May 17, 2010;
கம்பியூட்டர் வெர்ஷனக்குனாக தயாரிக்கபட்ட Flash ஐ ஒரு Tablet லிலோ அல்லது மொபலிலோ நாம் எதிர்பார்ப்பது தவறு. அது மொபைல் Processor ஐ மொத்தமாக விழுங்கி பேட்டரி லைப்ஐ ஏப்பம் விட்டு விடும். அதிலும் அது மொஸ் Event ஐ கொண்டு செயல்படுகின்ற தளம், எப்படி Multitouch க்கு சரிவரும். Steve Jobs யின் சராமாரியான, நியாமான கேள்விகளுக்கு அடோப்பின் பதில் We Love Apple. மக்களுக்கு அவர்கள் விரும்பும் சாப்ட்வேரை தடுப்பது அவர்களுகலுடைய சுதந்திரத்தில் தலையிடுவது போல் என அடோப் சொல்வது பம்மாத்து வேலை.

அடோப் தன்னுடைய அத்தனை தயாரிப்புகளுக்கும் Flash யே நம்பியிருக்கிறது. அதை ஓப்பன் சோர்ஸ் ஆக்கிவிட்டால் அதனுடைய மார்கெட் சரிந்துவிடும் என அது நினைக்கிறது அது உண்மை. இன்றும் நம்மால் playerglobel.swc ஓப்பன் செய்ய முடியவில்லை. பிறகு Tamarin கொடுத்தால் என்ன Flex கொடுத்தால் என்ன? எதுவும் வேலைக்கு ஆகாது.

எதிரிருக்கு எதிரி நண்பன் என்ற ரீதியில் கூகுள் Nexus One மற்றும் Chrome ல் Flash ஐ கொடுத்தாலும் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாதே? இன்று கம்பியூட்டரில் அது எடுக்கும் RAM யின் அளவு மிக அதிகம். Browser Crash ஆவது அதிகம் Flash Player ஆல் தான் அது ஒரு Buggy Software என்பது Steve மட்டுமல்ல நம் எல்லாருக்கும் தெரியும்.

Browser யில் இயங்கும் Client Script ஜாவா ஸ்கிரிப்டே இன்று Browser ஐ Slow வாக்கும்போது Flash Player? யோசிக்க வேண்டிய விஷயம்தான். அடோப் தன்னுடைய Virtual Machine ஆன Tamarin ஐ கொடுத்தும் அது SpiderMonkey ஐ விட மெதுவாக இயங்குவதால் மொஸில்லா அதை நிராகரித்தது. தன்னுடைய ActionScript 3.0 ஐ ECMA Standard 4.0 Draft edition ல் வெளியிட்டு தன்னை International Standard ஐ பாலோ செய்யும் ஒரு கம்பெனியாக காட்டுமுயன்றும் பலனில்லை. ஏனெனில் அந்த Draft கேன்சல் செய்யபட்டுவிட்டது.

தன்னுடைய Cross Compiler, Tamarin, ECMA Standard அத்தனையும் நிராகரிகரிக்கபட்டு இன்று நிராயுதபாணியாக அடோப் நிற்கிறது. அதற்கு பொத்தாம் பொதுவாக ஆப்பிளின் மீது அது பழி போடுவது நல்லதல்ல. ஆப்பிள் தன்னுடைய Iphone SDK Developer licence ஐ புதுபித்த காரணம் அடோப் மட்டுமல்ல அது கூகுளுக்கும் விடப்பட்ட சவால். ஏனெனில் அது தன்னுடைய கஸ்டமர் Data ஐ எடுத்து அவர்களுக்கு ஏற்றார்போல விளம்பரம் இட்டு சம்பாதிக்கிறது என்பதும் ஒரு காரணம். கூகுள், என்று Admob ஐ வாங்கியதோ அன்றிலிருந்தே அதனுடைய வீழ்ச்சி தொடங்கிவிட்டது. ஆனால் கூகுள் Android ஐ வைத்து சமாளிப்பதால் பிரச்சனை இல்லை. ஆனால் அடோபுக்கு அப்படியில்லை அது PC ஐ விட MAC யே அதிகம் நம்புகிறது காரணம் மல்டிமீடியாவுக்கு அடோபும் ஆப்பிளும் நல்ல கூட்டணி. அடோப் இனி MAC க்கான தன்னுடைய தயாரிப்புகளை குறைத்தால் பாதிப்பு அதற்குதான்.

Data Visualization க்கு கூகுளே இதைதான் நம்பியிருக்கிறது. இன்றும் Google Analytics report யில் Flash க்கு முக்கியத்துவம் இருக்கிறது. Video வுக்கு HTML5, Carousel க்கு CSS3 என அத்தனையும் மாறும்போது Data Visualization க்கு ஆப்பிளின் வெளிவரப்போகும் Giunduai ஆக்கிமிரத்தால்?

முழுமை பெற இன்னும் 10 ஆண்டுகள் ஆகப்போகும் HTML5 எப்படி ப்ளாஷூக்கு போட்டி, E-Learning, Games, Simulation, RIA Application என அடோப் Strong ஆக இருக்கும்போது, அது சரியும் என பேச்சுக்கே இடம் இல்லை என சொல்வது புரிகிறது. அதை மறுப்பதற்கில்லை. ஆனால், அது மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை. Silverlight, JavaFX மண்ணை கவ்வினாலும் Giunduai வை ஓப்பன்சோர்ஸ் Community வளர்க்கும்.

Compiere யே தூக்கி எறிந்து அதைபோலவே ERP ஐ உருவாக்கிய Adempiere Community உருவாக்கவல்ல ஓப்பன்சோர்ஸ் Developers இருக்கும்போது அடோப் கொஞ்சம் அடக்கி வாசிப்பதே நல்லது. இதை சொல்ல Gruber தேவையில்லை குப்பனோ சுப்பனோ போதும்.

No comments:

Post a Comment