"தெரிந்தே, நேரிடையாக, திரும்ப திரும்ப ஆரக்கிளின் ஜாவா தொடர்புடைய சொத்து உரிமையை கூகுள் தவறாக பயன்படுத்திருக்கிறது"- ஆரக்கிளின் இந்த தாக்குதலுக்கு கூகுள் பல பில்லியன் டாலர்கள் கொடுக்க வேண்டி இருக்கும் என தகவல். மொபைல் பயன்பாடுகளில் தன்னுடைய விளம்பரத்தையும் தன்னுடைய சேவைகளையும் உட்புகுத்த தனக்கான ஒரு போன் என்பதை விட மொபைலில் பயன்படும் ஆபபேரடிங் சிஸ்டம் இலவசமாக தந்தால் பலர் இதில் வரக்கூடும் என்ற கூகுளின் கணக்கு தவறவில்லை. ஜாவா அப்ளிகேஷன்களை பயன்படுத்தும் அத்தனை தயாரிப்பாளர்களும் அதற்கான இயங்குதளம் JVM க்கு காசை வாரி இறைக்கும்போது அவர்களுக்கும் இது தேவை எனவே அவர்களும் உணர்ந்தார்கள்.
Open Handset Alliance என்ற பெயரில் 65 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், கூகுளின் ஆண்டிராய்டு, அப்பாச்சி லைசன்சஸ் என மொபைல் உலகில் ஓர் புரட்சி கூகுள் தலைமையில் 2007 ஆரம்பமானது. இதில் ஜாவா அப்ளிகேஷன்களும் இயங்கும் என்ற செய்தி சன்னுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி ஏனென்றால் ஜாவாவுக்கான லைசன்ஸ் எதுவும் அது கொடுக்கவில்லை. பின்னர் எப்படி இது சாத்தியம்?
ஆண்டிராய்டு SDK தன்னுடைய அவுட்புட்டை முதலில் ஜாவா பைட் கோட்டிறக்கு மாற்றுகிறது. பிறகு தன்னுடைய டால்விக் என்னும் VM ஐ கொண்டு .dex என்னும் பார்மட்டிக்கு மாற்றுகிறது. ஆக ஆண்டிராய்டு போனில் ஜாவா VM இல்லாமலேயே அது ஜாவா கோடை ரன் செய்கிறது. ஆனால் தன்னுடைய SDK மற்றும் OS யில் வரும் அப்பாச்சி ஹார்மோனியின் கீழ்வரும் 2.1 மில்லியன் ஜாவா standard edition code பங்குக்கு அது லைசன்ஸ் வாங்கியே தீர வேண்டும் என்பது விதி. சன்னுக்கே தன்னுடைய intellectual property இது என்று பட்டியல் போடமுடியாத அளவிற்கு Open source developers யின் பங்களிப்பு. தன்னால் கைபிசைந்து இருக்க முடிந்ததே தவிர அப்பொழுது சன்னால் ஒன்றும் முடியவில்லை.
இதற்கிடையே ஜாவா ஆரக்கிள் கைக்கு போக, மறந்துபோன விஷயம் தோண்டபடுகிறது. இத்தனை வருடங்கள் கழித்து இதனை ஏன் ஆரக்கிள் இப்பொழுது கையில் எடுத்துள்ளது என எல்லாருக்கும் வியப்பு ஆனால் அவர்கள் பொறுமைசாலிகள். ஆண்டிராய்ட் நன்றாக வளரந்தபிறகு வழக்கு தொடுத்தால்தான் bulk amount அள்ளலாம் என விஷயம் தெரிந்தவர்கள்.
அப்பாச்சி லைசன்ஸ் v2 வில் இருக்கும் விதி: அப்பாச்சி லைசன்ஸ் வழங்குபவர்கள் தான் உருவாக்கிய படைப்புகளுக்கு மட்டுமே உரிமை வழங்கலாமே ஒழிய அடுத்தவர் படைப்புகளுக்கு அல்ல என இருக்கும்போது எப்படி இவர்கள் ஜாவாக்குகான உரிமையை மற்றவர்களுக்கு எப்படி கொடுக்கலாம் என்ற வாதம் கூகுளை உலுக்கும் என்பதில் ஐயமில்லை.
ஒழிந்தான் எதிரி என ரெட்மாண்டில் இருப்பவர்கள் மகிழ்ச்சியில் குதிப்பதாக செய்தி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment