Tech Tamil - 19

Friday, 17 September 2010  at September 17, 2010;
பெங்களூர் கம்பெனி EC Media வின் Wink Reader 11,500 க்கு கிடைக்கிறது. 6 இன்ச் திரை, க்கொர்ட்டி கீபோட்டுடன். இந்தியாவின் 15 மொழிகளை சப்போர்ட் செய்யும் என தகவல். 3G, WiFi, Multitouch உடன் கூடிய ரீடர் விலை 15000. விங்க் ஸ்டோரில் கிட்டத்தட்ட 2 லட்சம் புத்தகங்கள் கிடைக்கிறது என்பது அதனுடைய பலம்.

Thepiratebay க்கு பிறகு டாரண்டில் கொடிகட்டிபறப்பது kickasstorrent.com தான். அருமையான UI.

மல்டிமீடியா உடன் இணைந்த டிவீட்களை இனி டிவிட்டரிலேயே பார்க்கும் வசதியை இன்னும் ஒரு வாரத்தில் இங்கு அமுல்படுத்துகிறது டிவிட்டர். டெஸ்டினேஷன் தளமாக டிவிட்டர் அவதாரம் எடுப்பது சோஷியல் தளங்களுக்கு தலைவலி.

ரிமோட் டெக்ஸ்டாப் அக்ஸஸ் Ovi files வசதியை நோக்கியா அக்டோபர் 1 உடன் நிறுத்துகிறது.

புதிய திரைபடங்களை அப்லோட் செய்யும் சைட்களை DoS attack யினால் வழிக்கு கொண்டுவர Cyber hitman என்ற கம்பெனியுடன் பல இந்திய திரைபட நிறுவனங்கள் கைகோர்த்துள்ளன. Fox இதில் முக்கியமானது. அமேரிக்க மற்றும் பல நாடுகளில் இந்த DoS தடைசெய்ய பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

மொபைல் பேமண்ட்க்கு ஏர்டெல்லுக்கு RBI வழங்கிய அங்கிகாரம் ஆன்லைன் வர்த்தகத்தில் இன்னும் பணம் புரள வழி வகுக்கும். 5000 வரையிலான ரூபாயை ரீசார்ஜ் கார்டு மூலம் ஏற்றி இனி எதையும் வாங்கலாம் ஆனால் பணமாக ரீடிம் செய்ய முடியாது. இட்ஸ் கேஷூக்கு பெரிய அடி.

N8, C7, C6, E7 மாடல்களுடன் நோக்கியா தன்னுடைய nokia world 2010 மாநாட்டை நடத்தியுள்ளது. சரிந்துகிடக்கும் தன்னுடைய ஷேர் வேல்யூவை இந்த ஸ்மார்ட்போன் நிலைநிறுத்துமா என தெரியவில்லை.

கூகுள் Instant வந்தாலும் வந்தது. இப்பொழுது பல இன்ஸ்டண்டகள் ரெடியாகிவிட்டது. Youtube instant ytinstant.com. இதைபார்த்து கூகுள் மேப்புக்கும் instant வந்துவிட்டது. ஒரு அப்ளிகேஷனால் ஓவர்நைட்டில் உச்சிக்கு வந்த பெர்ரோஸூக்கு வாழ்த்துக்கள்.

2ம் காலாண்டுகான யூனினார் வருமானம் வெறும் 64 கோடி என்பது அதுனுடைய முதலீட்டார்களை வெறுப்பில் ஆழ்த்தியுள்ளது. 60 லட்சம் சந்தாதாரர்கள், 6000 கோடி முதலீடு MTS ஐ கூட மிஞ்சமுடியவில்லை. வெளியேறும் உத்தேசம் இல்லை என கூறியுள்ளது யூனினார் குழுமத்தின் போராடும் குணத்தை காட்டுகிறது.

No comments:

Post a Comment