இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் - 2021

Thursday 31 December 2020  at December 31, 2020;



 வருடத்தின் இறுதி நாளில், கடந்து போன அந்த 365 நாட்களை பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதுவேன். பிறகு வரக்கூடிய புத்தாண்டின் நான் மேற்கொள்ளவிருக்கும் விஷயங்களை பற்றி சிறுது எழுதுவேன். அத்துடன் மீண்டும் அடுத்த வருடம் சந்திப்பு.

வருடத்திற்கு ஒரே ஒரு முறை இந்த ப்ளாக்கில் எழுதி வருகிறேன். மகிழ்ச்சி.

2020- பேன்ஸி நம்பர், விஐபி நம்பர். பேன்ஸி நம்பர் என்றாலே பேன்டஸி கனவுகள் தானே.. கனவு கண்டேன், இந்த வருடம் நம் வாழ்க்கை வேறு மாதிரியாக போகிறது என்று. ஆனால் இந்த வருடம் அனைத்தையும் புரட்டி போட்டுவிட்டது. என் தனி ஒருவனை மட்டும் அல்ல, உலக மக்கள் அனைவரையும் வீட்டு சிறையில் அடைத்துவிட்டது. பதபதைக்கும் மார்ச் மாதம் சென்னையை விட்டு வந்தது. மறுபடியும் திரும்ப வில்லை. Work from home யில் இருக்கும் சொளகர்யம், சோம்பேறிதனம் மீண்டும் சென்னைக்கு போகவிடாமல் தடுக்கிறது. இதோ அதோ என்று அக்டோபர் மாதத்தில் இருந்து டிரை செய்கிறேன், வருடமே முடிந்துவிட்டது. மோசமில்லை. மீண்டும் சென்னைக்கு செல்வது என்பதுதான் இந்த வருடத்தின் உடனடி சேலன்ஜ். அநேகமாக ஜனவரி மாதம் சென்னை திரும்பிவிடுவேன். நிற்க.


கடந்துபோன வருடத்தில் நான் மூன்று ஊர்களில் இருந்தேன். ஒன்று செங்கம், இரண்டாவது வேலூர் சைதாப்பேட்டை மூன்றாவது காட்டுமன்னார்கோயில். உண்மையை சொல்லவேண்டும் என்றால், இரண்டு மாதங்கள் கழித்துதான் ப்ராஜக்ட் வேலையையே ஆரம்பித்தேன் அதுவும், வேலூர் சைதாப்பேட்டை வந்தபிறகு. வேலூரில் சுமாராக இரண்டு அல்லது மூன்று மாதங்கள் இருந்திருப்பேன். இதுவரை CMC ஆஸ்பிட்டலுக்கு செல்லும்போது 2 அல்லது 3 நாட்கள் தங்கியவன் இந்த கொரானா காலத்தில் மூன்று மாதங்களுக்கும் மேலாக தங்கியது ஆச்சரியமாக இருந்தது. ஏசி இல்லை, வசதி இல்லை ஆனாலும் நிம்மதியாக உறங்க முடிந்தது கொசு இல்லாததால். கொரானாவுக்கு அடித்து பிளீச்சிங் பவுடரில் கொரானா செத்ததோ இல்லையோ கொசுக்கள் செத்தது. எனக்கு இது மும்பையின் மரோல் மரோஷியில் தங்கி இருந்த நினைவை தூண்டியது. அனைத்தையும் ஏதோ ஒரு நேரத்தில் சந்தித்தே ஆக வேண்டும் நம் சுகங்களை தியாகம் செய்தாகவேண்டும் என்று விஷயத்தை இந்த ஆண்டு எனக்கு கற்றுகொடுத்தது. 


நிறைய விஷயங்களை கற்பனை செய்துவைத்திருந்தேன் ஆனால் அனைத்தும் இந்த கொள்ளை நோய் காலத்தில் கைவிடப்பட்டது. ஆனால் அதை மீண்டும் உயிர்பிப்பது என் கடமை அதை இந்தாண்டு செய்து முடிப்பேன். இதோ இந்த காட்டுமன்னார்கோயில் இருந்து இதை டைப் செய்கிறேன். இந்த ஊரியிலிருந்து சென்னைக்கு கிளம்புவதற்குள் நான் என் முதல் அடியை இங்கே என் சொந்த ஊரில் அழுத்தமாக பதிக்கபோகிறேன். எப்படி என்று கேட்கிறார்களா? அதற்கான வேலையை கடந்த 10 நாட்களாக செய்து முடித்திருக்கிறேன். இந்த திட்டம் வெற்றிபெற்றால் இதை மற்ற பிற ஊர்களுக்கு, முக்கியமாக மடிப்பாக்கத்திற்கு கொண்டு வருவேன். 


நீண்ட பயணத்திற்கான முதல் அடி என்பது எடுத்து வைத்தாகிவிட்டது இந்த மண்ணில், பயணம் இனி அதை நோக்கி மெல்ல நகரும். ஓகே.


இந்த வருடத்தில் ஏதாவது முக்கியமான விஷயம் நடந்ததா என்று நீங்கள் கேட்கலாம். ஆம் ஒன்று அல்ல நிறைய. வியாபார விஷயத்தில் பெரிய முன்னேற்றம் இல்லை. கிணற்றில் போட்ட கல் போல இருக்கிறது. இந்த கல் மேலே வர கிணறு நிரம்பினாலும் முடியாது போல இருக்கிறது. சும்மா சுய பகடி ;) தொழில் வளர்ச்சிக்காக இந்த வருடத்தில் சில பகீரத முயற்ச்சிகளை செய்யவேண்டி உள்ளது. குடும்பத்தில் நிறைய நல்ல விஷயங்கள் நடந்தன. பத்தாண்டு கால தவம் வெற்றி பெற்றது இறைவன் அருளால். புகழனைத்தும் இறைவனுக்கே. இந்த ஒரு விஷயத்திறாக இந்த ஆண்டு மிகவும் மிக்கியமானது எனது ஒட்டுமொத்த குடும்பத்திற்கும். 


என்னுடைய மற்றும் உங்களுடைய திட்டங்கள் அனைத்தும் இந்த வருடத்தில் கைகூட இறைவனை பிராத்திக்கிறேன். நல்லதே நடக்கும். நல்லதே நினைப்போம். 


வாழ்க தமிழ், வளர்க தமிழ்நாடு. 

No comments:

Post a Comment