வருக புத்தாண்டு! தருக நல்லாண்டு!!

Saturday 31 December 2022  at December 31, 2022;




 இதோ அதோ என்று எப்படியோ 2022 ம் ஆண்டு முடிவடைந்துவிட்டது. இந்த ஆண்டு வியாபார ரீதியாக மிகவும் பின்னடைவான வருடம். 2020 ம் ஆண்டு நான் பிடித்த அலுவலக கட்டிடம்,  தொடர்ச்சியாக வீட்டில் இருந்து வேலை செய்ததால் அந்த அலுவலகத்தை திறக்கவே முடியாமல் பெரும் பணத்தை இதில் வாடகையாக செலவு செய்துவிட்டேன். அந்த அலுவலகத்தை இந்த வருடத்தோடு முடித்துவிட்டேன். அது ஒரு நிம்மதி. மாதம் பிறந்தால் இந்த வாடகை தொல்லையிலிருந்து ஒரு விடுதலை. 


அடுத்ததாக ஒரு புதிய புராஜக்டை ஆரம்பம் செய்வதற்கு ஒரு வெளிநாட்டு நிறுவனத்தோடு பேசி வருகிறேன். அது நல்லபடியாக முடிந்தால் 2013 பெரும் முன்னேற்றத்தை தரும். இது சாதாரண புராஜக்ட் கிடையாது, இது எனது கனவு புராஜக்ட் எனவும் சொல்லலாம். சொல்லலாம் என்ன, அதுவேதான். ஒவ்வொரு முறையும் நானும் இங்கே சென்னையில் ஏதாவது வெப் டெவலப்மெண்ட் புராஜக்ட் பிடிக்கலாம் என நினைக்க முனையும்போது எல்லாம் என்னை ஒரு விஷயம் தடுத்துகொண்டே இருந்தது. அந்த தடுத்தவிஷயம்தான் இப்பொழுது திருப்புமுனையாக போகிறது. பார்ப்போம் எந்தளவுக்கு இது இருக்கபோகிறது என்று. 


மோசமான ஆண்டு என்று ஒன்று இல்லை அது நம் முயற்சியின்மையால் நாம் வருடத்தை குறைசொல்வது அன்றி வேறில்லை. இயற்கையால் நிகழும் சில துக்க சம்பவங்கள்தான் அந்த ஆண்டை மோசமான ஆண்டா, இல்லையா என தீர்மானிக்கும். மற்றபடி பொருளாதார பின்னடைவுகள் எல்லாம் ஜூஜூபி. எவ்வளவோ பார்த்தாச்சு, இதை பார்க்க மாட்டோமா என்ன? 


வயது ஆக ஆக பக்குவம் வளர்கிறது. அது நிறைய பொருமையை கற்று தந்துள்ளது. தொடர் முயற்ச்சி என்பதே அந்த பக்குவத்தின் தன்மைதான் அன்றி வேறில்லை. என்னுடைய கனவு என்பது 45 வயதில் அனைத்தையும் பெற்றிருக்கவேண்டும். அது அடுத்த பல ஆண்டுகளுக்கு எனக்கு உதவுவதாக இருக்கவேண்டும். அதனாலேயே என் கனவு புராஜக்டை நினைவாக்கிட களம் இறங்கியுள்ளேன். 


அடுத்த இரண்டு ஆண்டுகள் பெரும் உழைப்பை இது கோரும் ஆனால் அது வரக்கூடிய ஆண்டுகளை சுலபமாக்கிவிடும் என்பதாலேயே அந்த பெரும் உழைப்பை வழங்கிட தயாராகிவிட்டேன். 2023 யாருக்கு சிறப்பான ஆண்டோ இல்லையோ எனக்கு இது மிகவும் முக்கியமான ஆண்டு. நெஞ்சம் நிறைய இந்த ஆண்டை வரவேற்க்கிறேன். பின்னடவை சந்தித்தபோதும் 2022 மோசமான ஆண்டு இல்லை என்பதால் அதற்கு பிரியாவிடை கொடுக்கிறேன்.


வேறு ஏதாவது இருக்கிறதா இன்னும் எழுத? என்னுடைய இந்த பிளாக் புத்தாண்டை வரவேற்கும் ஆண்டிற்கான கட்டுரை எழுத மட்டுமே என்பதுபோல ஆகிவிட்டது என்பதில் எனக்கு வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. நிறைய எழுதவேண்டும், ஆனால் டிவிட்டரில் ஆக்டிவாக இருக்கிறேன், இயன்றால் அதில் என்னை பின்தொடருங்கள். ஆனால் அதில் கூட நிறைய எழுத முடிவதில்லை. பொருங்கள். இந்த புராஜக்ட் வெற்றி பெறட்டும் பிறகு முழு நேர எழுத்தாளராக மாறிவிடுகிறேன். ;) முதலில் இந்த பொருளாதர பிரச்சனையிலிருந்து ரிட்டையர்மெண்ட் வாங்கவேண்டும். 


என்னுடைய கனவு நிஜம் பெற்று வெற்றியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டும் அதே வேளையில் உங்கள் கனவுகளும் மெய்பட எனது இறைவன் அருள்வானாக. 


எனது நண்பர்கள், வாசகர்கள், மன்னை மாநகர சொந்தங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். 

No comments:

Post a Comment